இதை நீ விசுவாசிக்கிறாயா? BELIEVEST THOU THIS? 53-0906A ஞாயிற்றுக்கிழமை பிற்பகல், செப்டம்பர் 6, 1953 சிகாகோ சுவிசேஷ கூடாரம், சிகாகோ, இல்லினாய்ஸ், அமெரிக்கா சகோ.வில்லியம் பிரன்ஹாம் இதை நீ விசுவாசிக்கிறாயா? (53-0906A) சரி, அது என் இறுதிச் சடங்கில் போதுமானதாக இருக்கும். அது நன்றாகவே இருக்கும். நமது கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் தெய்வீகத்தன்மையைக் குறித்து சிந்திக்க நான் நிச்சயமாக விரும்புகிறேன், நீங்கள் விரும்ப வில்லையா? இன்று, அவர் ஏதோ ஒரு வகையான தத்துவஞானி என்று மக்கள் சொல்ல முயலும்போது, அவர் இம்மானுவேலாகிய தேவன் என்று நான் விசுவாசிக்கிறேன். நிச்சயமாக. மேலும் எல்லா துதிகளும் அவருக்கே உரியது என்று நான் நினைக்கிறேன். அவருடைய பரிசுத்தமான மற்றும் பயபக்தியான நாமத்திற்கு ஸ்தோத்திரம் உண்டாவதாக. நான் அவருடைய நாமத்திலே வாழ்கிறேன், அவருடைய நாமத்திலே வேலை செய்கிறேன், அவருடைய நாமத்திலே பாடுகிறேன், அவருடைய நாமத்திலே பிரசங்கிக்கிறேன், அவருடைய நாமத்திலே குணமாக்குகிறேன். நான் அவருடைய நாமத்திலே மரித்து, அவருடைய நாமத்திலே உயிர்த்தெழ விரும்புகிறேன். அது சரிதான். நேற்று மாலை, சகோதரர் பாக்ஸ்டர்... நான் அவரிடம் கேட்டேன், நான் சொன்னேன், "சகோதரர் பாக்ஸ்டர், எனக்கு ஒரு உதவி செய்வீர்களா? நான் கொஞ்சம் சீக்கிரமாகவே முடிக்க விரும்புகிறேன்." நான் சொன்னேன், "நாம் ஒரு உபவாச வரிசையை வைத்திருக்கப் போகிறோம் என்றால்," நான் சொன்னேன், "எனக்காக நீங்கள் எதையாவது பிரசங்கிக்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன்." அவர் அதை பிரசங்கிப்பதை கேட்க நான் விரும்புகிறேன். அவர் கேட்டார், "அது என்ன?" நான் சொன்னேன், "சம்கார்." அவர் பெலிஸ்தியர்கள் எல்லாரையும் கொன்றார். அவர்களை ஒழித்துக்கட்ட நான் விரும்புகிறேன், நீங்களும்தானே? அவர்களை தேசத்தில் இருக்க விட்டால், அவர்கள் உங்கள் மாம்சத்தில் முட்களாக இருப்பார்கள் என்று வேதம் சொல்கிறது. எனவே நாம் அவர்களை ஒழித்துக்கட்டுவோம். ஆகவே நேற்றிரவு நான் பின்னால் அமர்ந்து, சம்காரைக் குறித்த பிரசங்கத்தை மிகவும் ரசித்தேன். 2 இன்று அவர் கேட்டார், "லாசருவின் உயிர்த்தெழுதலைக் குறித்து பிரசங்கிப்பது எப்படி?" அதற்கு நான் சொன்னேன், "நான் ஒருவேளை அதை முன்பே பிரசங்கித்தி ருக்கிறேன்." ஆகையால் தேவன் நமக்கு ஒரு சிறந்த மாலையைத் தருவார் என்று நான் நம்புகிறேன், மேலும் தேவனுடைய ஆசீர்வாதம் உங்கள் அனைவர் மீதும் இருப்பதாக. பரலோகத்திற்குச் சென்ற மாபெரும் மனிதர்கள் மேடையில் நின்ற இந்த நினைவு ஆசரிப்புக்கூடாரத்தில் இன்று நான் இருப்பதில் மகிழ்ச்சியடைகிறேன். இது எந்த அளவுக்கு உண்மை என்று எனக்குத் தெரியாது. மறைந்த பால் ரேடர், எனக்குத் தெரிந்தவரை இந்த ஆசரிப்புக் கூடாரத்தை நிறுவியவர்... இந்த ஆசரிப்புக் கூடாரத்தை நிறுவியவர்... என் வாழ்வில் ஒருமுறை ஃபோர்ட் வேனில் அவர் பேசியதைக் கேட்கும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது, நேற்றிரவு அவர் இங்கே மேடையில் ஒரு தரிசனத்தில் காணப்பட்டார் என்று ஒரு நல்ல அதிகாரம் உள்ளவரால் என்னிடம் சொல்லப் பட்டது. அவர் மரிக்கவில்லை, ஆனால் அவர் வாழ்கிறார். இன்னும் பல வருடங்களுக்கு அவருடைய பெயர் மக்களின் இதயங்களில் அழியாததாக இருக்கும். 3 கலிபோர்னியாவில் அவர் மரணப் படுக்கையில் இருந்தபோது, அவர்கள் பாடல்களைப் பாடிக்கொண்டிருந்தார்கள் என்று சொன்னார்கள்; நான் சகோதரர் ரேடரை சரியாக புரிந்துகொண்டவரையில், அல்லது மக்கள் சகோதரர் ரேடரை சரியாக புரிந்து கொண்டவரையில், அவருக்கு நல்ல நகைச்சுவை உணர்வு இருந்தது, மேலும் அவர்கள் சோகமான பாடல்களைப் பாடிக்கொண்டிருந்தார்கள், அப்போது அவர், "சொல்லுங்கள், யார் மரித்துக்கொண்டிருக்கிறார்கள் நானா அல்லது நீங்களா?" என்று கேட்டார். அவர் சொன்னார், "அந்தத் திரைகளை-மாறாக, ஜன்னல் திரைகளை ஏற்றுங்கள், எனக்கு சில நல்ல உற்சாகமான, சுவிசேஷப் பாடல்களைப் பாடுங்கள்." அவர்கள் எதையோ பாடத் தொடங்கினார்கள்: "சிலுவையினருகே," அல்லது அதுபோல ஏதோ ஒன்றை, அவர் சொன்னார், "அது கேட்பதற்கு நன்றாக இருக்கிறது." "லூக்கா எங்கே?" என்று கேட்டார். நிச்சயமாக, லூக்கா தன் சகோதரன் மரிப்பதைப் பார்க்க விரும்பாமல் அறைக்குள் வந்தார், அவர் லூக்காவின் கையைப் பிடித்துக்கொண்டு சொன்னார், "லூக்கா, நாம் ஒன்றாக வெகுதூரம் வந்துவிட்டோம், ஆனால் நினைத்துப் பார், இப்போதிலிருந்து ஐந்து நிமிடங்களில் நான் இயேசு கிறிஸ்துவின் சமூகத்தில், அவருடைய நீதியைத் தரித்துக்கொண்டு நிற்பேன்." பெரிய மனிதர்களின் வாழ்க்கையெல்லாம் நமக்கு நினைவூட்டுகிறது என்று நான் நினைக்கிறேன்; நாம் நம் வாழ்க்கையை உன்னதமாக்கலாம், விடைபெறுகையில் நமக்குப் பின்னால் விட்டுச் செல்லலாம், கால மணல்வெளியில் காலடிச்சுவடுகளை. அது சரிதான். இந்த ஆசரிப்புக்கூடாரத்தில், எழுப்புதல் கூட்டங்களில் வாரந்தோறும் பிரசங்கித்த மாபெரும் குறிப்பிடத்தக்க பில்லி சண்டே, இங்கே இருக்கும் உங்களில் சிலர் ஒருவேளை அவர் பிரசங்கிப்பதைக் கேட்க வந்திருக்கலாம்... 4 அவர் மரித்தபோது நான் ஒரு சிறு பையனாக இருந்ததை நினைத்துப் பார்க்கிறேன். அவர்கள் சொன்னார்கள், "பில்லி சண்டே மரத்தூள் பாதையில் சென்றுவிட்டார்." அவர் அநேக முறை இந்த இடைகழிகளில் அவர்களைக் கீழே அழைத்திருக்கிறார். அவர் படுக்கையில் மரித்த நிலையில் காணப்பட்டார், மரிக்கவில்லை, ஆனால் இயேசுவோடிருக்கச் சென்றுவிட்டார். ஒரு கிறிஸ்தவன் மரித்துப்போகிறான் என்று வேதாகமத்தில் எந்த ஒரு வசனமும் சொல்லவில்லை. கிறிஸ்தவர்கள் மரிப்பதில்லை. நீங்கள் மரிக்க முடியாது. உங்களுக்கு நித்திய ஜீவன் இருக்கிறது, அதற்கு எப்படி ஒரு முடிவு இருக்க முடியும்? இருக்க முடியாது. ஆகவே, நாம் அதை நினைத்துப் பார்க்கும்போது, அது நம் இதயங்களை மகிழ்ச்சியடையச் செய்கிறது, அல்லவா? 5 சகோதரர் பாக்ஸ்டர் எனக்கான அன்புகாணிக்கையை எடுக்கும்போது நான் அதைக் கேட்க நேர்ந்தது. அதை நாம் செய்ய வேண்டியிருப்பதை நினைத்து நான் வருந்துகிறேன். நான்-நான் ஒவ்வொரு வாரமும் ஒரு அன்புகாணிக்கையைப் பெறுகிறேன். சகோதரர் பாக்ஸ்டரும் அதையே செய்கிறார். இது வெறுமனே... பின்னர் கூட்டத்தின் செலவுகள் கவனிக்கப்படுகின்றன, அதைப் பெற்ற பிறகு, அனைத்தும் செலுத்தப்பட்டுவிட்டால், நாங்கள் ஒவ்வொ ருவரும் ஒரு அன்பு காணிக்கையைப் பெறுகிறோம். நண்பர்களே, என் ஆழமான உள்ளத்திலிருந்து என் நன்றியை நான் உங்களுக்கு உறுதியளிக்க முடியும், நான் அதை மதிக்கிறேன். எனக்குத் தெரிந்த மிகச்சிறந்த முறையில் தேவனுடைய மகிமைக்காக அதை செலவழிக்க நான் என்னால் இயன்ற அனைத்தையும் பயபக்தியுடன் செய்வேன். இந்தக் கூட்டத்தில் கிடைக்கும் என்னுடைய இரண்டு அன்புகாணிக்கைகளைக் கொண்டு இப்போது என் ஆரம்பக் கடனை நான் அடைத்துவிட்டால், நான் ஒரு மாநாட்டிற்குச் செல்வேன், அது... மாநாட்டில் மக்கள் மிஷனரி காணிக்கைகளையும் மற்றவைகளையும் சேகரிக்கிறார்கள், மேலும் அது... அவர்களால் முடியாது... ஒருவேளை அவர்கள் என் செலவுகளையோ அல்லது வேறெதையோ கொடுக்கலாம். நான் அடுத்ததாக கன்சாஸ் நகரத்திற்கும், பின்பு லாஸ் ஏஞ்சல்ஸுக்கும் செல்கிறேன். 6 எங்கும் செல்ல நாங்கள் சற்றுப் பயப் படுகிறோம், ஏனென்றால் நான்-எனக்கு வெளிநாட்டுப் பயணங்கள் வரவிருக்கிறது என்று தெரியும், மேலும் நான்-நான் கண்டிப்பாகச் செல்ல வேண்டும். ஆகையால், அதிகப்படியான பயணத் திட்டங்களை வகுக்க நான் மிகவும் பயப்படுகிறேன், ஏனென்றால் அவர் என்னை எந்த நேரத்திலும் அழைக்கலாம், எந்த நேரத்திலும் செல்ல வேண்டியிருக்கலாம். நான் எனக்குத் தேவையான தடுப்பூசிகளையும் மற்ற எல்லாவற்றையும் போட்டுக்கொண்டேன், கர்த்தர் என்னைச் செல்ல அழைக்கும்போது செல்வதற்கு ஆயத்தமாக இருக்கிறேன். அதேபோலத்தான் பரலோகத்திற்குச் செல்லவும் நான் ஆயத்தமாக இருக்க விரும்புகிறேன்: அவர் அழைக்கும்போது எல்லாமே தயாராக இருக்க வேண்டும். இதை நான் மிகவும் மதிக்கிறேன். எல்லாவற்றிலும் தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக, என்னுடைய ஆரம்பச் செலவுகளைச் செலுத்த இது போதுமானதாகவும் அதற்கு மேலாகவும் இருந்தால், நான்-நான் அதை வெளிநாட்டு மிஷனரி பணிகளுக்காகக் கொடுப்பேன். 7 இன்று மதியம் இந்தக் கூட்டத்தில் இருக்கும் மிஷனரிகளைக் குறித்து நீங்கள் அறிந்திருந்தால் மட்டுமே உங்களுக்குத் தெரியும், நான் பலமுறை அங்கே சென்றபோது... தேவன் என்னை ஒரு இடத்திற்குச் செல்லச் சொன்னதும், ஒரு கூட்டமான பிரசங்கிமார்கள் பேச்சைக் கேட்டு நான் அதை விட்டு விலகிய கதையும் உங்களில் பலருக்குத் தெரியும். அவர்கள் என்னைச் செல்லும்படி வற்புறுத்தியதால் நான் வேறொரு இடத்திற்குச் சென்றேன், அதற்காக நான் நிச்சயமாக விலைக்கிரயம் செலுத்தினேன். நான் அப்படி ஆவேன் என்று அவர் என்னிடம் சொல்லியிருந்தார். அதனால், நான் ஒட்டுண்ணிகளால் நோய்வாய்ப்பட்டேன், "நான் பிழைப்பதற்கு ஒரு வாய்ப்பு கூட இல்லை" என்று மருத்துவர் கூடச் சொன்னார். நான் வாழ்வதற்கு பத்து மணிநேரம் மட்டுமே இருந்தது, அப்போது கர்த்தராகிய இயேசு ஒரு தரிசனத்தில் என்னிடம் வந்து, "அது முடிந்துவிட்டது" என்றார். நான் மீண்டும் அதே மருத்துவரிடம் சென்று, இரண்டு-சுமார் எட்டு மணிநேரம் கழித்து நான் சொன்னேன், "டாக்டர், ஒட்டுண்ணிகள் இருக்கிறதா என்று என்னைச் பரிசோதியுங்கள்." அவர் சொன்னார், "சரி, போதகரே, உங்களுக்கு ஒட்டுண்ணிகள் இருக்கிறது." அவர் சொன்னார், "ஏன், நான் உங்களுக்கு எல்லாவற்றையும் கொடுத்தேன், இங்கே பாருங்கள் குறிப்பு..." அவர் சொன்னார், "நான் உங்களுக்கு எல்லாவற்றையும் கொடுத்து, மருந்துப் பெட்டியையே உங்கள் மீது வீசினேன்," மேலும் சொன்னார், "ஆயினும் உங்களுக்கு ஒட்டுண்ணிகள் இருக்கிறது." நான் சொன்னேன், "ஆனால் இப்போது எனக்கு அவை இல்லை." அவர் சொன்னார், "ஓ, உங்களுக்கு அவை இருக்கிறது." நான் சொன்னேன், "என்னைச் பரிசோதிப்பீர்களா?" அவர், "அதற்கு அவசியமில்லை" என்றார். 8 நான் சொன்னேன், "இதற்காகவாவது செய்வீர்களா... நான் அதற்குக் கட்டணம் செலுத்துகிறேன். நம்முடைய கர்த்தரால் என்ன செய்ய முடியும் என்பதை உங்களுக்குக் காட்ட விரும்புகிறேன்." அவர் சொன்னார், "உங்களுக்கு ஒட்டுண்ணிகள் இருக்கிறது, போதகரே." நான் சொன்னேன், "பரிசோதனை செய்து பாருங்கள்." அவர் செய்தபோது, அவராலும் முடியவில்லை... அது முற்றிலும் நெகட்டிவ் ஆக இருந்தது. அவர் கேட்டார், "சரி, என்ன நடந்தது?" நான் சொன்னேன், "நான் நம்பும் கர்த்தராகிய இயேசு கிறிஸ்து, அவரே இதைச் செய்தார். அவர் அவற்றை என்னை விட்டு எடுத்துவிட்டார்." அவர் கேட்டார், "போதகரே, இப்போது நீங்கள் எங்கே போகிறீர்கள்?" நான் சொன்னேன், "நான் மீண்டும் வெளிநாட்டிற்குச் செல்கிறேன்." அவர் கேட்டார், "மீண்டும் அதே இடத்திற்கா?" நான் சொன்னேன், "ஆம், ஐயா." 9 அவர் கேட்டார், "உங்கள் மனைவியையும் குழந்தைகளையும் விட்டு விட்டு, மேலும் மற்ற எல்லாவற்றையும் விட்டுவிட்டு, விமானங்கள் நொறுங்கி இன்னும் பல சம்பவங்கள் நடந்து, உங்களுக்கு முன்னால் ஐம்பத்து-இரண்டு பேர் கொல்லப்பட்டு, இதுபோல நடந்தபோது நீங்கள் இப்படிச் சொல்கிறீர்களா?" நான் சொன்னேன், "அதனால் எந்த வித்தியாசமும் இல்லை. வாழ்வோ அல்லது சாவோ எதுவாக இருந்தாலும் நான் திரும்பிப் போக வேண்டும் என்று எனக்குள்ளே ஆழமாக ஏதோ ஒன்று அழைக்கிறது; நான் தேவனுக்குக் கீழ்ப்படிய வேண்டும்." நண்பர்களே, அது-அது சரிதான். இன்று நான் நினைத்துப் பார்க்கும்போது, சிகாகோ மற்றும் மற்ற நகரங்களின் வீதிகளில் நான் சுற்றிலும் பார்க்கும்போது, அந்த-அந்த குழந்தைகளையும் காரியங்களையும் பார்த்து, உணவகங்களில் பெரிய சிறப்பான உணவுகள் பரிமாறப்படுவதையும், அதுபோன்ற காரியங் களையும் பார்க்கும்போது... இதுபோன்ற ஒரு தேசத்தை நான் மதிக்கிறேன், ஆனால் அங்கே ஆப்பிரிக்காவில் எங்கோ ஒரு மூலையில், ஒரு சிறிய கருப்பின சிறுவனுக்கு ஒரு மிட்டாய் துண்டு என்றால் என்னவென்றே தெரியாது, ஒரு துண்டு உடை என்றால் என்னவென்றே தெரியாது, குளிப்பது என்றால் என்னவென்றே தெரியாது, ஒரு குவளை நல்ல தண்ணீர் என்றால் என்னவென்றே தெரியாது. 10 அந்த ஏழை, சிறிய, பசியுள்ள சிறுவன், தன் கண்களில் உள்ள அழுக்கைத் துடைத்துக் கொண்டு, இயேசு கிறிஸ்துவைக் குறித்து ஒரு முறையாவது கேட்க வேண்டும் என்று அப்படியே அழுதுகொண்டிருக்கிறான். தினமும் அதைக் கேட்கும் அங்கே அமர்ந்திருக்கும் என் சிறு மகளுக்கு இருக்கும் அதே உரிமை அவனுக்கும் கேட்பதற்கு இருக்கிறது. அது சரிதானே? யாராவது அதை எடுத்துக்கொண்டு செல்ல வேண்டும். அது சரிதான். யாராவது அதை எடுத்துக்கொண்டு செல்ல வேண்டும், அதைச் செய்வது என் இதயத்தில் பாரமாக இருக்கிறது. அந்தக் காணிக்கையில் கொடுத்த ஒவ்வொருவரையும் தேவன் ஆசீர்வதிக்க வேண்டும் என்று நான் ஜெபிக்கிறேன், மேலும் என்னுடைய சொந்தக்காரியங்களுக்குப் புறம்பாக நான் செய்யக்கூடிய அனைத்தையும்... நான் வெறுமனே... நண்பர்களே, நாங்கள் சாதாரண மக்களைப் போல வாழ்கிறோம். எனக்கு பண ஆசை இருந்திருந்தால், நான் ஒரு கோடீஸ்வரராக இருந்திருப்பேன். ஒரு காணிக்கையில் எனக்கு பதினைந்து இலட்சம் டாலர்கள் கொடுக்கப்பட்டது. FBI முகவர்கள் அதை என்னிடம் கொண்டு வந்தார்கள், நான் அதைத் திரும்பிப் பார்க்கக்கூட மறுத்து விட்டேன். 11 அவர் சொன்னார், "போதகராகிய சகோதரர் பிரன்ஹாம், இது... இது என்னவென்று உங்களுக்குத் தெரியாது." நான் சொன்னேன், "ஐயா, அதனால் எந்த வித்தியாசமும் இல்லை. நான் மக்களின் பணத்தை எடுப்பதில்லை." நான் இந்த உலகத்திற்கு ஏழையாக வந்தேன். நான் ஏழையாகவே செல்வேன். இங்கு அமர்ந்திருக்கும் மக்கள் இருக்கும்போது நான் எப்படி பணக்காரனாக இருக்க முடியும்... சில காலத்திற்கு முன்பு அவர்கள் எனக்கு ஒரு பெரிய காடிலாக் காரைக் கொடுக்கப் போனார்கள். வெளியே நிற்கும் என்னுடைய சிறிய, பழைய செவ்ரோலெட் ட்ரக் வண்டி கிட்டத்தட்ட பின்வாங்கிவிட்டது, எனவே நான்... ஒரு பாப்டிஸ்ட்டுக்கு அது ஒரு பெரிய வார்த்தை, அல்லவா? பின்வாங்குதல், ஆனால் நீங்கள் அதைச் செய்யலாம். ஆகவே அது... அவர் கேட்டார், "நீங்கள்... நீங்கள் ஓட்டுவது-அதுதானா?" நான் சொன்னேன், "ஆம், ஐயா. இது ஒரு அருமையான வண்டி." மேலும் அவர் சொன்னார், "சரி," அவர் சொன்னார், "நான் உங்களுக்குச் சொல்கிறேன், சகோதரர் பிரன்ஹாம்," என்றார், "நாங்கள் அவாக்கிற்கு ஒரு காடிலாக் கொடுத்தோம்," என்றார், "நீங்கள் வீட்டிற்குச் செல்வதற்கு நாங்கள் உங்களுக்கு ஒரு புதிய வண்டியைக் கொடுப்போம்." நான் சொன்னேன், "நான்-நான் அதை மதிக்கிறேன், சகோதரரே." நான் சொன்னேன், "நான்-நான் அதை என் முழு இதயத்தோடு மதிக்கிறேன்," ஆனால் நான் சொன்னேன், "நான்-என்னால் ஒரு காடிலாக் காரில் பயணிக்க முடியாது." நான் சொன்னேன், "யாராவது அதில் பயணித்தால் நான் பாராட்டுவேன்," ஆனால் நான் சொன்னேன், "என்னால் அதைச் செய்ய முடியாது." 12 இப்போது நான் ஆர்கன்சாஸ் வழியாகச் சென்றால் என்ன ஆகும் (பாருங்கள்?), அங்கே இருக்கும் அந்த ஏழை பருத்தி பறிப்பவர்கள், மற்றும் அந்தச் சிறிய தாய்மார்கள் ஒரு காலையில் சுமார் ஐம்பது அல்லது நூறு பவுண்டுகள் கொண்ட பருத்தி மூட்டையைத் தங்கள் முதுகில் சுமந்துகொண்டு வயலில் இழுத்துச் செல்லும்போது, அவளுடைய ஏழை, சிறிய, பழைய கைகளில் பருத்தி முட்கள் அதுபோல குத்தியிருக்க, காலை உணவுக்கு கொழுப்புள்ள பன்றி இறைச்சியையும் கொஞ்சம் சோள ரொட்டியையும் சாப்பிட்டுக்கொண்டிருக்க, அங்கே-அங்கே சகோதரர் பிரன்ஹாம் ஒரு பெரிய காடிலாக் காரில் சென்றால் எப்படியிருக்கும்? நான் அப்படிப்பட்டவன் அல்ல. இல்லை, ஐயா. இல்லை, ஐயா. அது என் இரத்தத்தில் இல்லை. எனக்குத் தகுதியானது எனக்குக் கிடைத்தால், நான் நடந்துகொண்டோ, சைக்கிளிலோ அல்லது வேறு எதிலோதான் போய்க்கொண்டிருப்பேன். ஆம், ஐயா. நான் அதை என் இதயத்திலிருந்து சொல்கிறேன், சிகாகோவில் உங்களுக்கு இருக்கும் மிகச்சிறந்த அழகான வீட்டைப் பெற்று தேவனுடைய ஊழியத்திலிருந்து விலகி இருப்பதை விட, தேவனுடைய கிருபையைப் பெறுவதையே நான் விரும்புவேன். தேவனுடைய கிருபையில் இருப்பதே என்னுடைய முக்கியமான காரியமாகும். 13 இப்போது, தேவன் ஒவ்வொரு மனிதனையும்... ஏழை மக்களிடம் ஒன்றுமில்லாமல் இருக்கும்போது, அவர்கள் முன்னேறி ஒரு நல்ல சிறிய வீட்டையும், ஒரு மோட்டார் வாகனத்தையும் பெறுவதைப் பார்க்க நான் விரும்புகிறேன். ஓ, ஏழை மக்களைக் காண்பது எனக்கு எவ்வளவு நன்மையாகத் தோன்றுகிறது என்பது உங்களுக்குத் தெரியாது... ஏழையாக இருப்பது என்றால் என்னவென்று எனக்குத் தெரியும். நான் இன்னும் ஏழையாகவே இருக்கிறேன், ஏழையாகவே மரிப்பேன், ஆனால் நான்... மக்கள் முன்னேறி வந்திருப்பதைப் பார்க்கும்போது, தேவன் அவர்களை ஆசீர்வதித்திருக்கிறார் என்பது எனக்கு என்ன அர்த்தத்தைத் தருகிறது. அது என் இதயத்தை உலுக்குகிறது. இப்போது இங்கு அமர்ந்திருக்கும் சில சகோதரர்கள், கடந்த முறை நான் இங்கு வந்திருந்தபோது, நான் அவர்கள் வீட்டிற்குச் சென்றேன், அவர்கள் வீட்டில் தங்கினேன், அது ஒரு அழகான வீடு, ஓ, நான்... அவர்கள் இங்கே சிகாகோவுக்கு வெறும் கையோடு வந்ததாகவும், பின்பு அவர்கள் ஒரு அழகான வீட்டையும், அழகான குழந்தைகளையும், அழகான மனைவிகளையும், சரியாக கர்த்தருடைய ஊழியத்திலும் வேலையிலும் இருக்கும் இனிமையான சகோதரர்களையும் பெற்றதாக என்னிடம் சொன்னார்கள். ஓ, ஆச்சரியமே. அது-அது என்னை முழங்காலிட்டு அதுபோன்ற மக்களுக்காக நம்முடைய பரலோகப் பிதாவுக்கு நன்றி சொல்ல வைக்கிறது. நிச்சயமாக செய்கிறது. 14 நான் பல காரியங்களைச் சொல்ல முடியும், ஆனால் நான், "தேவன் உங்கள் அனைவரையும் ஆசீர்வதிப்பாராக" என்று சொல்வேன். அதுவே சிறந்த வார்த்தையாக இருக்க முடியும் என்று நான் நினைக்கிறேன்... தேவன் என்னை ஆசீர்வதிப்பார் என்றால், அதுவே எனக்கு வேண்டும். அது சரிதானே? தேவன் என்னை ஆசீர்வதிப்பார் என்றால், அது-அது போதும். அதைப் பற்றி மட்டும்தான் நான் கவலைப்படுகிறேன். இப்போது, என் நேரம் வீணாவதை நான் விரும்பவில்லை. நான் இன்று மதியம் கொஞ்சம் பிரசங்கிக்க வேண்டும், அல்லது-அல்லது பேச வேண்டும். நான் ஒரு பிரசங்கி அல்ல. நான் வெறுமனே... மற்றுமொரு நாளில் நான் உங்களிடம் சொன்னது போல, நான் ஒரு மாற்று டயர் போன்றவன். அதாவது உங்களுக்கு ஒரு டயர் பஞ்சர் ஆகும்போது, உங்களுக்குத் தெரியும், நீங்கள் அதைப் பயன்படுத்துவீர்கள். இப்போது, நமக்கு டயர் பஞ்சர் ஆகவில்லை, ஆனால் நாம்... இன்று மதியம் அவர்கள் பயன்படுத்தும் ஒரு மாற்று டயராகவே நான் இருக்கிறேன். நான் ஒரு பிரசங்கியாக இருப்பதைக்குறித்து வழக்கமாக மக்களிடம் சொல்லும் ஒரு சிறிய விஷயம் எனக்கு நினைவிருக்கிறது. என் அம்மா இங்கே இருக்கிறார். அவர் இப்போது தன் காதுகளில் விரலை வைத்துக்கொள்ளலாம். என் அப்பா குதிரை சவாரி செய்பவராக இருந்தார். அவர் அதில் சிறந்தவராகவும் இருந்தார், அவர் சவாரி செய்வார். மேலும் அவர் ஒரு சிறந்த துப்பாக்கி சுடும் வீரர். அவர் துப்பாக்கிகளை எடுத்து அந்த பெரிய களிமண் கோலிகுண்டுகளை வெளியே வீசி, ஒரு துப்பாக்கியை எடுத்து மற்றொரு குண்டை அடித்து அதை மேலே எழுப்பி மற்றொன்றால் அந்த குண்டை வெடிக்கச் செய்வார். ஏன், என்னால் அதுபோல பெரிய சலவைத் தொட்டிகளைக் கூட அடிக்க முடியாது, ஆனால் அவர்-ஆனால் அவர் சிறந்தவராக இருந்தார், நான் எப்போதும் என் அப்பாவைப் போல இருக்க விரும்பினேன். 15 ஆகையால் நாங்கள் சிறுவர்களாக இருந்து ஏர் உழுதுகொண்டிருந்தபோது, அம்மா என்னைக் கூப்பிடும் சத்தம் எனக்குக்-எனக்குக் கேட்கும். மேலும் அவர்... எனக்குக் கேட்கும் ஒரே விஷயம் "லியம்" என்பதுதான், உங்களுக்குத் தெரியும். "வில்லியம்." அந்த நிலத்தின் பின்பகுதியில் வெகு தொலைவில் எனக்கு அது கேட்கும், உங்களுக்குத் தெரியும். நான் என் பழைய, வைக்கோல் தொப்பியை எடுத்து அசைத்துவிட்டு, அந்த பழைய கயிறு கயிறுகளை எடுப்பேன். பழைய கயிறு கயிறுகளைக் கொண்டு எத்தனை பேர் ஏர் உழுதிருக்கிறீர்கள்? பார்ப்போம். சரி, இங்கே சுற்றிலும் சில கிராமத்துப் பையன்கள் அமர்ந்திருக்கிறார்கள். ஆம், ஐயா. அந்த பழைய கயிறு கயிறுகளை, உங்களுக்குத் தெரியும், என் கழுத்திலிருந்து கழற்றிவிட்டு மதிய உணவுக்குச் செல்வேன். இப்போது, நாள் முழுவதும் ஏர் உழுத பிறகு எனக்கு நினைவிருக்கிறது, உங்களுக்குத் தெரியும், ஓ, அது மிகவும் சோர்வாக இருக்கும். அந்த இரவு நேரத்தில் நாங்கள் உள்ளே வரும்போது, சரி, அப்பா இன்னும் வயலில்தான் இருப்பார். நான் பழைய கறவை மாட்டிலிருந்து பால் கறக்க வேண்டியிருந்ததால் சீக்கிரமாகவே வரவேண்டியிருந்தது. எனவே நாங்கள் சுற்றி வருவோம். நான் தண்ணீர்த் தொட்டிக்கு கீழே செல்வேன். குதிரைகள் தண்ணீர் குடிக்கும் தண்ணீர்த் தொட்டி என்றால் என்னவென்று யாருக்காவது தெரியுமா? ஓ, இப்போது நான் சொந்த ஊர் நினைவுகளுக்குச் செல்கிறேன், அல்லவா? சரி. 16 நான் அங்கே கீழே செல்வேன், உங்களுக்குத் தெரியும், நான்-நான்... என் சகோதரர்களும் மற்ற எல்லாரும் அங்கே வந்து என்னைப் பார்ப்பார்கள், உங்களுக்குத் தெரியும், நான் வீட்டின் பின்னாலுள்ள குன்றின் வழியே சுற்றி வருவேன்; நான் உள்ளே சென்று அப்பாவின் சேணத்தை எடுப்பேன், உங்களுக்குத் தெரியும், நான் ஒரு கைப்பிடி நெருஞ்சில் முட்களை எடுத்து அதை சேணத்தின் அடியில் வீசி, அந்தப் பழைய குதிரையின் மீது சேணத்தை இழுத்துக் கட்டுவேன், உங்களுக்குத் தெரியும், அதன் மீது ஏறுவேன். பாவம் அந்தப் பழைய பிராணி, மிகவும் சோர்வாகவும் வயதானதாகவும் இருக்கும், உங்களுக்குத் தெரியும், மேலும் விறைப்பாக இருக்கும், அதனால் தன் கால்களை தரையிலிருந்து தூக்கக்கூட முடியாது. அது வெறும் கத்தும், உங்களுக்குத் தெரியும். நான் இந்தத் தொப்பியைக் கழற்றுவேன், உங்களுக்குத் தெரியும், நான் சவாரி செய்யும் ஒரு உண்மையான கௌபாயாக இருந்தேன், உங்களுக்குத் தெரியும், என் சகோதரர்கள் அனைவரும் அங்கே அமர்ந்து என்னை உற்சாகப்படுத்துவார்கள், உங்களுக்குத் தெரியும். நான் ஒரு உண்மையான கௌபாயாக இருந்தேன். சுமார் பத்தொன்பது வயதில், நான் வீட்டை விட்டு ஓடிவிட்டேன். அதற்காக அம்மா என்னை இன்னும் போதுமான அளவு அடிக்கவில்லை. எனவே நான் வீட்டை விட்டு ஓடி மேற்கே சென்றேன். நான் ஒரு குதிரை சவாரி செய்பவனாக ஆகப்போகிறேன். நான் வெள்ளி சேணத்தைப் பெறப்போகிறேன், சகோதரர் ஆஸ்போர்ன். நான் எதைப்பற்றிப் பேசுகிறேன் என்று உங்களுக்குத் தெரியும். 17 ஆகையால் பின்பு நான்-மேற்கே சென்று, அரிசோனாவுக்குச் சென்றேன், அங்கே அவர்கள் ஒரு ரோடியோ விளையாட்டை நடத்திக்கொண்டிருந்தார்கள். நான் சொன்னேன், "நான்... எனக்குக் கொஞ்சம் பணம் தேவை." எனவே நான் எனக்காக ஒரு ஜோடி லீவைஸ் பேண்ட் வாங்கிக்கொண்டு அங்கே வெளியே சென்றேன், நான் நினைத்தேன், "நான் சவாரி செய்வேன். இங்கே இருக்கும் இந்த நபர்களுக்கு சவாரி செய்வதைக்குறித்து என்னை விட அதிகமாக எதுவும் தெரியாது." எனவே நான்-அவர்கள் ரோடியோ நடத்திக்கொண்டிருந்த அந்த வேலியின் மீது ஏறினேன். உங்களுக்குத் தெரியும் முதலாவதாக அவர்கள் குதிரைகளையும் துள்ளிக்குதிக்கும் குதிரைகளையும் வெளியே விட்டார்கள், அங்கே ஒரு பிரபலமான குதிரை இருந்தது. அவர்கள் சொன்னார்கள், "இப்போது, எந்த ஒரு நபரும் இந்தக் குதிரையில் சவாரி செய்யலாம்..." 18 மேலும் அவர்கள் ஒரு பிரபலமான சவாரி செய்பவரை உள்ளே கொண்டு வந்தார்கள், ஒரு குதிரையில் சவாரி செய்வதற்கு அவர் சுமார் இருநூறு டாலர்கள் அல்லது அதற்கும் மேல் பெறப்போவதை நான் பார்த்தேன் என்று நினைக்கிறேன். மேலும் அவர்... அவருடைய அந்தப் பெரிய அழகான சிறப்பான உடையை அணிந்துகொண்டு அவர் சேணத்தில் குதித்தார். அவர் வெளியே வந்தபோது, அந்த அடைப்பிலிருந்து அவர் வெளியே வந்தபோது முடிந்தவரை அதைப் பிடித்துக்கொண்டார், அவர் அங்கிருந்து வெளியே வந்தபோது, அந்தக் குதிரை ஒரே ஒரு முறை துள்ளிக்குதித்து, உடம்பை வளைத்து ஒரு ஆட்டம் காட்டியது, சேணம் ஒரு பக்கம் சென்றது, அந்த மனிதன் மற்றொரு பக்கம் சென்றான். மீட்பவர்கள் குதிரையைப் பிடித்தார்கள், ஆம்புலன்ஸ் அந்த சவாரி செய்பவரைப் பிடித்தது, அவனுடைய காதுகளிலிருந்தும் கண்களிலிருந்தும் இரத்தம் வடிந்துகொண்டிருந்தது. அந்த மனிதன் வேலியின் ஓரமாக வந்து சொன்னான், "இங்கே சுற்றியிருக்கும் கௌபாய்களில் யாராவது, உங்களில் யாராவது இந்தக் குதிரையில் சவாரி செய்து ஒரு நிமிடம் அதன் மீது நிலைத்திருந்தால், நான் ஒரு நிமிடத்திற்கு நூறு டாலர்கள் தருவேன்." அதனால் யாரும் ஒரு வார்த்தைகூடச் சொல்லவில்லை. அவர் கீழே சவாரி செய்துகொண்டு வந்து நேராக என்னைப் பார்த்தார், நான் அங்கே மேலே அமர்ந்திருந்தேன், உங்களுக்குத் தெரியும், வெறும் ஒரு ஜோடி லீவைஸ் பேண்ட் அணிந்துகொண்டு, உயரமாகத் தெரிந்துகொண்டு, மற்ற கௌபாய்களுடன் ஒத்திருப்பதைப் போல, உங்களுக்குத் தெரியும். அது ஒரு பையன். அதுபோல காணப்பட்டது, உங்களுக்குத் தெரியும், அவர் நேராக என்னிடம் நடந்து வந்து கேட்டார், "நீ ஒரு குதிரை சவாரி செய்பவனா?" நான் சொன்னேன், "இல்லை, ஐயா. இல்லை, ஐயா." அது அப்பாவின் பழைய, விறைப்பான ஏர் உழும் குதிரை அல்ல என்பது எனக்குத் தெரியும். புரிகிறதா? அதில் ஏதோ வித்தியாசம் இருப்பதை நான் அறிந்திருந்தேன். ஆகவே பின்பு நான் முதன்முதலில் ஒரு ஊழியக்காரனாக அபிஷேகம் பண்ணப் பட்டபோது, நான் என் பைபிளை அக்குளில் வைத்துக்கொண்டு செல்வேன். சிலர் கேட்பார்கள், "நீங்கள் ஒரு பிரசங்கியா?" "ஆம், ஐயா. ஆம், ஐயா. நான் ஒரு பிரசங்கி." 19 ஒரு நாள் ஒரு கூடாரக் கூட்டத்தில் முழு சுவிசேஷப் பிரசங்கியார் ஒருவர் பிரசங்கிப்பதைக் கேட்டேன். அவர் மூச்சு வாங்கும் அளவுக்குப் பிரசங்கித்தார்; அவர் முகம் சிவந்துபோனது. அவர் முழங்கால்களை மடித்துக் கீழே தரையில் விழுந்து, மூச்சு வாங்கிக்கொண்டு மீண்டும் மேலே எழுந்து வருவார். அவர் பிரசங்கிப்பதை நீங்கள் இரண்டு நகர வீதிகளுக்கு அப்பாலும் கேட்க முடியும். சிலர் கேட்டார்கள், "நீங்கள் ஒரு பிரசங்கியா?" நான் சொன்னேன், "இல்லை, ஐயா." பிரசங்கிக்கக்கூடிய ஒரு மனிதனைக் கேட்ட பிறகு, நான் இனிமேல் ஒரு பிரசங்கி அல்ல. மேலும் நான்... ஆகையால் நான் ஒரு பிரசங்கி என்று சொல்வதில் எப்போதும் கவனமாக இருக்கிறேன். புரிகிறதா? ஆனால் நாம்-உங்களுக்குத் தெரியும், கர்த்தருடைய ஆசீர்வாதங்களை அனுபவிக்கக்கூடிய ஒரு இடத்திற்குச் செல்ல நான் விரும்புகிறேன், நீங்களும்தானே? 20 அங்கே அமர்ந்திருக்கும் சிறிய திரு. ஆஸ்போர்ன் எனக்கு நினைவூட்டுகிறார். இன்று காலை அவரும் நானும் பேசிக் கொண்டிருந்தோம், அந்தச் சிறிய பையன், அது எனக்கு ஒரு முறையை நினைவூட்டுகிறது... ஒரு நல்ல, பழைய காலத்து பரிசுத்த ஆவியானவரின் கூட்டத்தைப் பாருங்கள்... அந்த மாதிரியான கூட்டங்களை யார் விரும்புகிறார்கள்? நீங்கள் விரும்புகிறீர்களா? "ஆமென்" என்று சொல்லுங்கள். ஏன், நிச்சயமாக நாம் விரும்புகிறோம். நாங்கள் பாப்கார்ன் கூட்டம் என்று அழைப்பது... ஒரு பாப்கார்ன் கூட்டம் என்றால் என்னவென்று உங்களுக்குத் தெரியுமா? நீங்கள் ஒரு சிறிய மஞ்சள் நிற சோள மணியை எடுத்து சூடான அடுப்பில் போடுவீர்கள். அது அளவிலும் இரண்டு மடங்காகவும், எடையிலும் இரண்டு மடங்கு லேசானதாகவும் மாறி, மஞ்சளிலிருந்து வெள்ளை நிறமாக மாறுகிறது. அதுதான் பாப்கார்ன் கூட்டம். அதுதான் அதற்குத் தேவை. சாட்சி சொல்லப் பயப்படும் ஒரு சிறிய மனிதன் திடீரென்று மேலே எழும்பி, எடுத்துக்கொள்ளப்படுதலுக்கு ஆயத்தமாகி, தன் வஸ்திரத்தை ஒரு சிறிய மஞ்சள் நிறத்திலிருந்து வெள்ளை நிறத்திற்கு மாற்றுகிறான்... 21 ஒரு நாள் காலையில் நான் மீன்பிடித்துக் கொண்டிருந்தது எனக்கு நினைவுக்கு வருகிறது. இங்கே எனக்கு ஏராளமான மீனவ நண்பர்கள் இருக்கிறார்கள் என்று நினைக்கிறேன். இந்த ஏரி மிகவும் அருகில் இருக்கிறது, நான் நார்த்வுட்ஸ் (Northwoods) பகுதியில் மீன்பிடித்துக் கொண்டிருந்தேன், மேலும் நான்-நான் பேன்கேக்குகளை (pancakes) மிகவும் விரும்புகிறேன். எத்தனை பேருக்கு பேன்கேக் பிடிக்கும்? ஓ, என் அருமையே. எனக்கு பேன்கேக்குகள் மிகவும் பிடிக்கும், மேலும் நான் வழக்கமாக எனக்கு ஒரு வாளி நிறைய மொலாசஸ் (molasses) எடுத்துச் செல்வேன், உங்களுக்குத் தெரியும், ஒரு முழு, பெரிய வாளி, ஏனென்றால் நான் ஒரு பாப்டிஸ்ட் (Baptist). நான் அவற்றுக்கு ஞானஸ்நானம் கொடுப்பேன். நான் தெளிப்பதில்லை. நான் அதை அதன்மீது ஊற்றும்போது, அந்த மொலாசஸை, கனமாக ஊற்றுவேன், உங்களுக்குத் தெரியும், அதன்மீது முழுவதும் மிகவும் தடிமனாக ஊற்றுவேன். ஆகையால் பிறகு நான்-நான் நினைத்தேன், "ஓ, என்னே, இப்போது இதை நான் எப்படியாவது பெற்றுவிட்டால்..." ஒரு பெரிய வாளி மொலாசஸை நான் எடுத்துச் சென்றேன், உங்களுக்குத் தெரியும், நான் அங்கே மேலே இருந்தேன், என்னிடம் ஒரு சிறிய, பழைய கூடாரம் இருந்தது. அந்தக் காட்டில் நிறைய கருங்கரடிகள் (black bear) இருந்தன. உங்கள் பையனுக்கு ஒரு நாள் அதனுடன் ஒரு அனுபவம் ஏற்பட்டது. ஆகையால், ஓ, அவை அவர்களுக்கு ஒரு பொருட்டல்ல. அவற்றுக்கு அந்த கெட்ட பெயர் எங்கிருந்து வந்தது என்று எனக்குத் தெரியவில்லை, ஆனால் அது-அது கிழித்தெறிவதை மட்டுமே செய்கிறது. ஓ, என் அருமையே. அது-அது பயங்கரமானது. 22 மேலும் ஆகையால் நான் ஒரு சிறிய பழைய கூடாரத்தை அமைத்திருந்தேன், நான் சில பெரிய ரெயின்போ ட்ரவுட் (rainbow trout) மீன்களைப் பிடித்துக் கொண்டிருந்தேன். நான் நீரோடையின் கீழே சென்றிருந்தேன், என் கையில் இங்கே ஒரு சிறிய பழைய மரம் வெட்டும் கோடாரி இருந்தது, ஒரு சிறிய சாரணர் கோடாரி, நான் மேலே வந்தபோது என் கூடாரம் கீழே விழுந்து கிடந்தது. நான் பார்த்தேன், இங்கே ஒரு வயதான தாய்க்கரடி மற்றும் சில சிறிய குட்டிகள் அங்கே அமர்ந்திருந்தன: அவற்றுள் இரண்டு. நான் வில்லோ (willow) மரங்களில் இருந்து வெளியே வருவதை அவள் பார்த்ததும், அவள் சிறிது விலகி ஓடினாள், அவள் மலைப்பக்கம் ஓடினாள்; அவள் அந்தக் குட்டிகளைப் பார்த்துக் கூவினாள், ஒரு சிறிய குட்டி வந்தது. அடுத்த சிறியவன், அவன் என்னை நோக்கி தன் முதுகைத் திருப்பிக் கொண்டிருந்தான், இதோ இப்படித்தான், உங்களுக்குத் தெரியும். அவன் கொஞ்சம்கூட நகரவே இல்லை. சரி, நான் நினைத்தேன், "அவர்கள் என்ன செய்திருக்கிறார்கள் என்று பாருங்கள். என் அருமையே, அவர்கள் எல்லாவற்றையும் கிழித்தெறிந்துவிட்டார்கள்." சரி, குட்டிகளுடன் இருக்கும் ஒரு கரடி உங்களை பிராண்டும். அதனால் நான்-நான் அவளுக்கு மிகவும் அருகில் செல்ல விரும்பவில்லை, நிச்சயமாக என்னிடம் அங்கே ஒரு துப்பாக்கி இருந்தது, ஆனால் நான் காட்டில் அவர்களை அனாதைகளாக விட்டுவிட விரும்பவில்லை. அதனால் நான்-நான் வெறுமனே... நான், "இங்கிருந்து விலகிப்போ," என்று அதுபோல் சொன்னேன், அந்த வயதான தாய்க்கரடி கொஞ்சம் தூரம் ஓடியது; அவள் அந்த மற்ற குட்டியைக் கூவிக்கொண்டே இருந்தாள், ஆனால் அவன் வரவில்லை. 23 மேலும் நான் நினைத்தேன், "அந்தச் சிறியவன் எதில் இவ்வளவு ஆர்வம் காட்டுகிறான்?" நான் சுற்றும் முற்றும் பார்த்தேன். நான் அவன்மீது ஒரு கல்லை எறிய முயற்சி செய்து இந்த வழியில் சுற்றிக் கொண்டே இருந்தேன், ஆனால் அவன் தன் தலையைக்கூட திருப்பவில்லை. அவன் இப்படி கீழே குனிந்து, ஏதோ செய்துகொண்டிருந்தான். நான் நினைத்தேன், "சரி, அந்தச் சிறியவன் எதில் இவ்வளவு ஆர்வம் காட்டுகிறான்?" எப்பொழுதும், அதுபோன்ற ஏதாவது நடக்கும்போது, உங்களிடம் உங்கள் கேமரா இருக்காது, உங்களுக்குத் தெரியும். அதனால் நான் இந்த வழியில் சுற்றி வந்து, பார்த்தேன். நான், "அங்கிருந்து எழுந்திரு," என்று அதுபோல் சொன்னேன், அவன் திரும்பி என்னைப் பார்த்தான். 24 அந்தச் சிறியவன் என் மொலாசஸ் வாளியைப் பிடித்திருந்தான். அவன் அவற்றை எல்லாம் தன் கைகளில் இப்படி கட்டியணைத்திருந்தான். அவன் அதன் மூடியைத் திறந்திருந்தான். அவன் தன் சிறிய பாதத்தை அதனுள் இப்படி விட்டிருந்தான், அவன் முகம் முழுவதும் மொலாசஸ் ஆகியிருந்தது. அவனுடைய சிறிய வயிறு மொலாசஸால் முழுமையாக நிரம்பியிருந்தது. அவனுடைய கண்கள், உங்களுக்குத் தெரியும், அவனால் அவற்றைத் திறக்கக்கூட முடியவில்லை. அவன் தன் கண்களை இங்கும் அங்கும் சிமிட்டிக்கொண்டு என்னை அப்படிப் பார்த்தான். அப்படி நக்கிக்கொண்டு, அவன் தன் சிறிய பாதத்தை உள்ளே விட்டு, பிறகு அந்த மொலாசஸை நக்கினான். நான் சொன்னேன், "நன்றாக அனுபவி, நண்பனே." இது எனக்கு ஒரு நல்ல, பழைய காலத்து பரிசுத்த ஆவியானவரின் கூட்டத்தை நினைவூட்டியது, நாம் தேன் ஜாடியைத் திறக்கும்போது, உங்களுக்குத் தெரியும், நம் விரல்களை நேராக உள்ளே விட்டு, அதை உங்கள் புருவங்கள் மற்றும் எல்லாவற்றின் மீதும் பூசிக்கொள்வது, உங்களுக்குத் தெரியும், நீங்கள் எங்கே இருக்கிறீர்கள் என்பதையே மறந்துவிடும் ஒரு உண்மையான பழைய காலத்தைப் பெறுவது. ஆனால் வேடிக்கையான விஷயம் என்னவென்றால், அவனுக்குத் தேவையான மொலாசஸ் கிடைத்தபோது, அவன் அதைத் தன் உடல் முழுவதும் ஆக்கிக் கொண்டிருந்தான். அந்த வயதான தாய் அவனைக் கூவிக்கொண்டே இருந்தாள். அவன் வாளியைக் கீழே வைத்துவிட்டு ஓடினான், நான் அங்கே சென்றபோது, தாயும் மற்ற குட்டியும் அவனை நக்க ஆரம்பித்தன. எனவே... ஆமென்! நமக்குத் தேவையானது ஒரு பழைய காலத்துக் கூட்டம், அங்கே நீங்கள் அதை ஏறக்குறைய நக்கலாம். அது சரியல்லவா? ஆம், ஒரு உண்மையான பழைய காலத்துக் கூட்டம் தான். 25 சரி. பரிசுத்த யோவான் 11-ம் அதிகாரம். நான் இப்போது வார்த்தையின் ஒரு சிறிய பகுதியை வாசிக்க விரும்புகிறேன், பிறகு நாம் ஜெபம் செய்வோம். இப்போது, 18-ம் வசனத்தில், நாம் இதை வாசிக்கிறோம்: பெத்தானியா ஊர் எருசலேமுக்குச் சமீபமாய் ஏறக்குறைய இரண்டு மைல் தூரத்திலிருந்தது. யூதரில் அநேகர் மார்த்தாள் மரியாள் என்பவர்களுடைய சகோதரனைக் குறித்து அவர்களுக்கு ஆறுதல் சொல்லும்படி அவர்களிடத்தில் வந்திருந்தார்கள். இயேசு வருகிறார் என்று மார்த்தாள் கேள்விப்பட்டபோது, அவருக்கு எதிர்கொண்டு போனாள்; மரியாளோ வீட்டிலே உட்கார்ந்திருந்தாள். மார்த்தாள் இயேசுவினிடத்தில் வந்து: ஆண்டவரே, நீர் இங்கேயிருந்தீரானால் என் சகோதரன் மரிக்கமாட்டான். இப்பொழுதும் நீர் தேவனிடத்தில் கேட்டுக் கொள்ளுவதெதுவோ அதைத் தேவன் உமக்குத் தந்தருளுவார் என்று அறிந்திருக்கிறேன் என்றாள். இயேசு அவளை நோக்கி: உன் சகோதரன் உயிர்த்தெழுந்திருப்பான் என்றார். அதற்கு மார்த்தாள்: உயிர்த்தெழுதல் நடக்கும் கடைசிநாளிலே அவனும் உயிர்த்தெழுந்திருப்பான் என்று அறிந்திருக்கிறேன் என்றாள். இயேசு அவளை நோக்கி: நானே உயிர்த்தெழுதலும் ஜீவனுமாயிருக்கிறேன், என்னை விசுவாசிக்கிறவன் மரித்தாலும் பிழைப்பான்; உயிரோடிருந்து என்னை விசுவாசிக் கிறவனெவனும் என்றென்றைக்கும் மரியாமலும் இருப்பான்; இதை விசுவாசிக்கிறாயா என்றார். அதற்கு அவள்: ஆம், ஆண்டவரே, நீர் உலகத்தில் வருகிறவரான தேவகுமாரனாகிய கிறிஸ்து என்று நான் விசுவாசிக்கிறேன் என்றாள். 26 நாம் நம்முடைய தலைகளைத் தாழ்த்துவோமாக. இப்போது, ஆண்டவரே, சந்தைவெளியில் விளையாடும் பிள்ளை களைப்போல, நாங்கள் மகிழ்ச்சியாகவும் களிகூர்ந்தும் இருக்க வேண்டும் என்று நீர் விரும்புகிறீர் என்பதை நாங்கள் நின்று அறிந்துகொள்ளும்போது, உமது சந்தோஷம் நிறைவாயிருக்கும்படி நீர் சொன்னீர்... ஆனால் இப்போது, பிதாவே, நாங்கள் தேவனுடைய வார்த்தையை வாசித்திருக்கிறோம், இப்போது நீர் எங்களை நிலைப்படுத்துவீர் என்று ஜெபிக்கிறோம். மேலும் பரிசுத்த ஆவியானவர் ஒவ்வொரு இருதயத்தையும் பற்றிக்கொள்வாராக. இதை அருளுங்கள், ஆண்டவரே, இன்று ஒவ்வொரு பாவியும் இரட்சிக்கப்படுவானாக. ஒவ்வொரு பின்வாங்கிப்போனவனும் தேவனுடைய ராஜ்யத்திற்குத் திரும்பக் கொண்டு வரப்படுவானாக, இந்தக் கட்டிடத்தில் உள்ள ஒவ்வொரு வியாதியஸ்தரும் இங்கிருந்து குணமாகிச் செல்வார்களாக. பிதாவே, இதை அருளுங்கள், இப்போது பரிசுத்த ஆவியானவர் வந்து தேவனுடையவைகளை எடுத்து, ஒவ்வொரு இருதயத்திற்கும் தேவைக்கேற்ப அவற்றை ஒவ்வொரு இருதயத்திற்கும் அளிப்பாராக, ஏனெனில் நாங்கள் இதை இயேசுவின் நாமத்திலும் அவருடைய மகிமைக்காகவும் கேட்கிறோம். ஆமென். 27 நாம் இப்போது வாசிக்கும் இந்த அதிகாரம். நாம் சற்றுப் பின்னணியைப் பார்ப்போம். நான் அங்கே கடிகாரத்தைப் பார்க்க முடிகிறது என்று நம்புகிறேன், அதனால் நான் அதிக நேரம் எடுக்க மாட்டேன். இப்போது உங்களின் பிரிக்கப்படாத கவனம் எனக்குக் கிடைக்குமானால்... இன்றிரவு நடக்கவிருக்கும் கூட்டத்தைப்பற்றியோ அல்லது நாளைக்கு என்ன நடக்கப்போகிறது என்பதைப்பற்றியோ நினைக்க வேண்டாம். கர்த்தராகிய இயேசு இப்போதே இங்கே இருப்பதைப்பற்றிச் சிந்திப்போம், ஒவ்வொ ருவரும், "இப்போது, நான் ஒரு பாவி, நீங்கள் அப்படி இருந்தால், ஆனால் ஏதேனும் இருந்தால்-ஆண்டவரே, எனக்காக உம்மிடம் ஏதேனும் இருந்தால், என் இருதயத்தோடு பேசுங்கள்," என்று சொல்வதாக நினைப்போம். மேலும் பரிசுத்த ஆவியானவரின் ஞானஸ்நானம் இல்லாத ஒவ்வொரு நபரும், "ஆண்டவரே, நான் பரிசுத்த ஆவியானவரைப் பெறவில்லை, அதற்குக் குறைவான எதுவாயிருந்தாலும், சரி, நான் அதற்குப் பயப்படுகிறேன். ஆகையால் நான்-நான் மறுபடியும் பிறக்க விரும்புகிறேன், ஏனெனில் நீர் சொன்னீர், "ஒருவன் மறுபடியும் பிறவாவிட்டால், அவன் ராஜ்யத்தில் பிரவேசிக்க மாட்டான்.' ஆகையால் நான் மறுபடியும் பிறக்க விரும்புகிறேன்," என்று சொல்வதாக நினைப்போம். 28 இப்போது, நீங்கள் பரிசுத்த ஆவியானவரைப் பெறும் வரை நீங்கள் ஒரு கிறிஸ்தவர் இல்லை என்று நான் சொல்ல வரவில்லை, அதைப் புரிந்துகொள்ளுங்கள். நான் சொல்ல வருவது என்னவென்றால், நீங்கள்-பரிசுத்த ஆவியானவர் உங்கள் விசுவாசத்தின் முத்திரையாக இருக்கிறார். நீங்கள் பார்க்கிறீர்களா? தேவன்-ஆபிரகாம் தேவனை விசுவாசத்தினால் நம்பினார், பின்னர் அவர் அவனுக்கு ஒரு வாக்குத்தத்தத்தின் முத்திரையைக் கொடுத்தார். நீங்கள் பார்க்கிறீர்களா? நீங்களும் தேவனை விசுவாசத்தினால் நம்புகிறீர்கள், விசுவாசத் தினால் நீங்கள் நீதிமானாக்கப்படுகிறீர்கள், ஆனால் பரிசுத்த ஆவியின் ஞானஸ்நானத்தால் நீங்கள் கிறிஸ்துவின் சரீரத்திற்குள் முத்திரையிடப்படுகிறீர்கள். இந்த பிஷப்கள் மற்றும் ஆர்ச்பிஷப்கள் மற்றும் மற்ற அனைவரும் வந்து அதைப்பற்றிச் சாட்சி கொடுப்பதை நீங்கள் கேட்கிறீர்கள். நீங்கள் அதை ஒருபோதும் பெறவில்லை என்றால், வந்து அதை முயற்சி செய்து பாருங்கள். அது நன்மையானது. அது ஒரு... அது எப்படி என்று எனக்குத் தெரியவில்லை... என் வியாதியிலிருந்து நான் வெளியே வந்த பிறகு ஒருமுறை ஒருவர் என்னிடம் கூறினார், அவர் கேட்டார், "சகோதரர் பிரன்ஹாம், உங்கள் வியாதியின் காலத்தில் உங்கள் மார்க்கத்தை நீங்கள் காத்துக்கொண்டீர்களா?" நான் சொன்னேன், "இல்லை, ஐயா. நான் ஒருபோதும் காக்கவில்லை. வியாதியின் காலத்தில் அதுதான் என்னைக் காத்துக் கொண்டது." ஆகையால் அதுதான்... ஆம், பரிசுத்த ஆவியானவர் என்னைக் காத்துக் கொள்கிறார், நான் அவரைக் காத்துக் கொள்வதில்லை. அது ஒரு கேள்வியே அல்ல. அவர் என்னைக் காத்துக்கொள்கிறார். நான் வெறுமனே அவரைப் பெற்றுக்கொண்டேன், அவர் என்னைப் பார்த்துக்கொள்கிறார். ஒவ்வொரு விசுவாசிக்கும் அப்படித்தான் இருக்கிறது. 29 இப்போது, இந்த மதிய வேளைக்கான நமது வேதப்பகுதி, இயேசுவின் ஊழியத்தின் ஆரம்பத்திலேயே, அதன் மலர்ச்சியிலேயே இருந்தது. அவர் வெளியே வந்தார். அவர் வியாதியஸ்தர்களைக் குணமாக்கத் தொடங் கினார், பெரிய திரளான மக்கள் அவரிடம் வரத் தொடங்கினார்கள். இப்போது, அது அவருடைய ஊழியத்தின் முதல் வருடம் என்பதை நாம் காண்கிறோம். ஊழியத்தின் இரண்டாவது வருடத்தில் அவர்கள் அவர்மீது குற்றம் கண்டுபிடிக்க ஆரம்பித்தார்கள், மூன்றாவது வருடத்தில், அடுத்த வருடத்தின் மத்தியில், அவர்கள் அவரைச் சிலுவையில் அறைந்தார்கள். அது அப்படித்தான் நடக்கிறது. ஒரு எழுப்புதல் வருகிறது. ஓ, பெரிய அலங்காரங்கள் நடக்கின்றன. பிறகு எழுப்புதல் தணிந்துவிடுகிறது. அதன் பிறகு உங்களுக்குத் தெரிவது என்னவென்றால், எது உண்மை யானதோ அது மட்டுமே நிலைத்திருக்கும். மற்ற அனைத்தும் சென்றுவிடுகின்றன. அதோடு அது முடிந்துவிடுகிறது. 30 இப்போது, ஆனால் இந்த விஷயத்தில், இயேசு மார்த்தாள் மற்றும் மரியாளின் வீட்டில் தங்கியிருந்தார். இப்போது, நாம்-நமக்குக் கற்பிக்கப்பட்டுள்ளது, இது எந்த அளவுக்கு உண்மை என்று எனக்குத் தெரியவில்லை, ஆனால் பெத்தானியாவில் வசித்த மார்த்தாளும் மரியாளும் அங்கே... அவர்கள்... ஆர்த்தடாக்ஸ் (Orthodox) சபையை, யூத சபையை விட்டுவிட்டு, இயேசுவின்மீது விசுவாசம் வைக்க வந்திருந்தார்கள் என்று நமக்குக் கற்பிக்கப்பட்டுள்ளது; மேலும் இயேசு அவர்களுடைய வீட்டில் தங்கியிருந்தார். அவர்களுக்கு லாசரு என்ற பெயருள்ள ஒரு சகோதரன் இருந்தான், அவன் ஒரு வேதபாரகன் என்று என்னிடம் சொல்கிறார்கள், அவனுடைய வேலை சட்டங்களையும், கடிதங்களையும், மற்றும் நியாயப்பிரமாணத்தின் காரியங்களையும் தோற்பருந்துகளில் (parchment) எழுதுவது. மேலும் மரியாளும் மார்த்தாளும் திரைச் சீலைகளையும், தேவாலயங்களுக்கான சிறிய பொருட்களையும், மற்றும் அதுபோன்ற வற்றையும் செய்தார்கள் என்று நமக்குச் சொல்லப்பட்டுள்ளது. தையல் வேலையின் மூலமாகவே அவர்கள் தங்கள் பிழைப்பை நடத்தினார்கள். அந்தச் சமயத்தில், இயேசுவின் வாழ்க்கை அற்புதமாகிக்கொண்டிருந்தது. மக்கள் அவரைப் பார்த்துக்கொண்டிருந்தார்கள், அவர்கள் அவரை நேசித்துக்கொண்டிருந்தார்கள். மேலும்-மேலும் அவர் இந்த வீட்டை விட்டு அழைக்கப்பட வேண்டிய ஒரு நிலைக்கு வந்தார். அந்த காரியங்கள் எப்படி நிகழ்கின்றன என்பது விசித்திரமானது, ஆனால் சில நேரங்களில்... தேவனிடத்தில் அன்புகூருகிறவர்களுக்குச் சகலமும் நன்மைக்கேதுவாகவே நடக்கிறது. 31 இப்போது, இயேசு தனது பிறப்பில், அவர் அற்புதமானவராக இருந்தார், ஆனால் அவர் உலகத்திற்கு வந்தபோது, ஒரு சட்டவிரோதமான பின்னணி அவர்மீது தொங்கிக்கொண்டிருக்க அவர் இங்கே வந்தார், ஏனென்றால் அவருடைய-அவருடைய தந்தை யோசேப்பு என்றும், குழந்தை-அவர்கள் உண்மையாகவே சட்டப்படி திருமணம் செய்துகொள்வதற்கு முன்பே தாய் ஒரு குழந்தையுடன் இருந்தாள் என்றும் அவர்கள் சொன்னார்கள். எனவே அது அவருடன் தொடங்கியது, பின்னர் அவர் மரண தண்டனையின் மூலமாக வெளியேறினார். அவர் ஒரு தொழுவத்தின் கதவின் வழியாக உள்ளே வந்தார், மேலும் மரண தண்டனையின் வழியாக வெளியேறினார். அப்படித்தான் இந்த உலகம் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவை ஏற்றுக்கொண்டது. ஆனால் அவருடைய-அவருடைய பிறப்பிற்கு சற்று முன்பு, தேவன் எப்பொழுதும் காரியங்களுக்கான ஒரு ஆயத்தத்தைச் செய்கிறார். அதை நீங்கள் நம்பவில்லையா? நீங்கள் கூர்ந்து கவனிக்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன். இன்று நான் முழு இருதயத்தோடும் நம்புகிறேன்... இப்போது, இது வெறுமனே சகோதரர் பிரன்ஹாம் பேசுவது. நீங்கள் பார்க்கிறீர்களா? இப்போது நடந்துகொண்டிருப்பதாக நீங்கள் காணும் காரியங்கள் ஒரு ஆயத்தம் என்று நான் நம்புகிறேன். ஒரு உச்சக்கட்டத்திற்குச் சற்று முன்பு தேவன் ஏதோ ஒன்றை ஆயத்தம் செய்துகொண்டிருக்கிறார். தேவன் எப்பொழுதும் உலகத்தை எச்சரிக்கிறார், அதன்பிறகு அவர்கள் எச்சரிக்கையை-எச்சரிக்கையை ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என்றால், அங்கே ஒரே ஒரு விஷயம்தான் மீதமுள்ளது; அது நியாயத்தீர்ப்பு. நோவா உலகத்தை எச்சரித்தான், ஆனால் அவர்கள் அதை ஏற்றுக்கொள்ளவில்லை. எல்லா காலங்களிலும், தேவன் எப்பொழுதும் எச்சரித்திருக்கிறார். அவர் இரக்கத்தை அனுப்புகிறார், அவர்கள் இரக்கத்தை நிராகரித்தால், நியாயத்தீர்ப்பைத் தவிர வேறு எதுவும் எஞ்சியிருப்பதில்லை. ஆனால் இரக்கமுள்ள பிதா முதலாவது இரக்கத்தை அனுப்புவார். 32 இப்போது, இந்த முறை கர்த்தராகிய இயேசுவின் வருகைக்குச் சற்று முன்பு அவர்களுக்கு மனிதர்கள் இருந்தார்கள்... சபை ஒரு நிலைக்குக் கீழிறங்கிப்போய் அதை எதிர்பார்த்துக்கொண்டிருந்தவர்கள் மிகவும் சிலரே இருந்தார்கள், இன்று அவர்கள் இருப்பதைப் போலவே எதைப்பற்றியும் கவலைப்படாமல் இருந்தார்கள். வெறுமனே... ஆனால் தேவன் எப்பொழுதும் அவரை நம்பிய ஒரு மீதியான மக்களை வைத்திருந்தார். அவர்களில் ஒருவர் சகரியா என்ற பெயருள்ள ஒரு மனிதனும், எலிசபெத் என்ற பெயருள்ள அவனுடைய மனைவியும் ஆவார்கள். அவர்கள் நீதிமான்களாக இருந்தார்கள், தேவனுடைய எல்லாக் கட்டளைகளிலும் நியமங்களிலும் நடந்து எல்லாவற்றையும் கைக்கொண்டிருந்தார்கள், பின்னர் கீழே தேவாலயத்தில், தூபம் காட்டுவது சகரியாவின் பங்காக அங்கே இருந்தது. மக்கள் வெளியே ஜெபம் செய்துகொண்டிருந்தபோது, சகரியா தூபம் காட்டினான். இப்போது அதை நன்றாக உறுதிப்படுத்தி தூபம் என்பதன் அர்த்தம் என்ன என்று ஒரு அஸ்திபாரத்தை அமைக்க நமக்கு நேரம் இருந்தால் நன்றாக இருக்கும், அவையெல்லாம் கிறிஸ்துவைக்குறித்துப் பேசுபவை, அனைத்தும். இப்போது தூபம் என்பது அவருடைய இரத்தமாக இருக்கிறது, சாரோனின் ரோஜா, பள்ளத்தாக்கின் லீலி, பிரதான ஆசாரியன் மகா பரிசுத்த ஸ்தலத்திற்குள் செல்வதற்கு முன்பு, அவன் எப்படி இந்தத் தைலத்தினால் அவனுடைய தலையின் உச்சிமுதல், அவனுடைய தாடியின் வழியே வடிந்து, அவனுடைய அங்கிகளின் விளிம்புகள் வரைக்கும் அபிஷேகம் செய்யப்பட வேண்டியிருந்தது. அவன் உள்ளே சென்றபோது, அவர்கள் ஒருவேளை... இந்த முழு சுவிசேஷ மக்கள் (full Gospel people) கொஞ்சம் சத்தம்போடுகிறவர்கள் என்று யாராவது உங்களிடம் சொன்னால், இதோ அவர்களுக்கான ஒன்று இருக்கிறது. 33 ஆரோன் வருடத்திற்கு ஒருமுறை மகா பரிசுத்த ஸ்தலத்திற்குள் சென்றபோது, அவன் ஒரு குறிப்பிட்ட வகையான ஆடையை அணிய வேண்டியிருந்தது, மேலும் அவன் அவசியமாக அபிஷேகம் செய்யப்பட வேண்டியிருந்தது, மேலும் அவன் தன்னுடனே இரத்தத்தை எடுத்துச் செல்ல வேண்டியிருந்தது. அது சரியல்லவா? அவனுடைய ஆடையின் விளிம்பில் அவனுக்கு ஒரு மாதுளம்பழமும் ஒரு மணியும்-ஒரு மாதுளம்பழமும் ஒரு மணியும் இருந்தன; அவன் நடக்கும்போது அவன் "கர்த்தருக்குப் பரிசுத்தம், பரிசுத்தம், பரிசுத்தம்" என்று அதை ஒலிக்கச் செய்ய வேண்டியிருந்தது. தேவன் அவனை அங்கே திரைக்குப் பின்னால் கொன்றுபோடவில்லை, அந்த மனிதன் இன்னும் உயிரோடுதான் இருக்கிறான் என்பதை அவர்கள் அறிந்துகொண்ட ஒரே வழி அந்தச் சத்தத்தினால்தான். மணி அடிக்கும் சத்தத்தை அவர்களால் கேட்க முடிந்தது. நான் உங்களுக்குச் சொல்கிறேன்; சபையில் ஜீவன் இருக்கிறது என்று நான் அறிந்துகொள்ளும் ஒரே வழி, எங்கேயாவது ஒரு சிறிய சத்தம் ஆரம்பிக்கும்போதுதான், உங்களுக்குத் தெரியும், எப்போதாவது ஒரு சிறிய "ஆமென்" அல்லது ஏதோ ஒரு சிறிய விஷயம், உங்களுக்குத் தெரியும், கொஞ்சம் சத்தம் எழுப்புங்கள். அவர்களில் சிலர் கூறினார்கள், "சரி, சகோதரர் பிரன்ஹாம், அது உணர்ச்சி வசப்படுவது." சரி, உணர்ச்சி இல்லாத எதுவும் செத்தவை என்பதை என்னால் உங்களுக்கு அறிவியல் பூர்வமாக நிரூபிக்க முடியும். ஆகையால் உங்கள் மார்க்கத்தில் எந்த உணர்ச்சியும் இல்லை என்றால், அந்த விஷயத்தைப் புதைத்துவிடுங்கள் (அது சரிதான்.) ஏனென்றால் அது எந்தப் பயனுமற்றது. அது செத்துப்போனது. ஆகையால் நான் இப்போது இந்த சகரியாவைப் பார்க்க முடிகிறது. நாம் இங்கே ஒரு சிறிய நாடகத்தைக் கொண்டுவருவோம். அவர் கீழே இருக்கிறார், அவரும் அவர் மனைவியும், அவர்கள் பல ஆண்டுகளாக ஒரு குழந்தைக்காக விரும்பினார்கள், ஜெபம் செய்தார்கள், உத்தமமாக வாழ்ந்தார்கள். அந்த விஷயம் அப்படியே கடந்துபோகப் போவதுபோல் தெரிந்தது; அவருக்குக் குழந்தை கிடைக்கப் போவதில்லை. ஆனால் இருள் சூழ்ந்த மணிநேரத்தில்தான் இயேசு வருகிறார், அப்போதுதான் தேவன் எப்பொழுதும் பதிலளிக்கிறார். 34 நாம் அவசரப்படுகிறோம். "சரி, நேற்றிரவு எனக்காக ஜெபிக்கப்பட்டது. இன்று காலை எனக்கு எந்த முன்னேற்றமும் தெரியவில்லை." நீங்கள் மிகவும் அவசரத்தில் இருக்கிறீர்கள். தேவனுடைய வாக்குத்தத்தத்தை ஏற்றுக்கொண்டு அதனுடனேயே இருங்கள். அங்கேயே இருங்கள். அவர்கள் பல ஆண்டுகளாக ஜெபித்துக் கொண்டும் ஜெபித்துக்கொண்டும் இருந்தார்கள். இப்போது, எலிசபெத்துக்கு வயதாகிவிட்டது. அவள் குழந்தை பெற்றுக்கொள்ளும் வயதைக் கடந்துவிட்டாள். அவள் எப்போதாவது ஒரு-ஒரு குழந்தையைப் பெறுவாள் என்ற நம்பிக்கையெல்லாம் போய்விட்டது போலத் தெரிந்தது. சரி, ஒரு நாள் சகரியா, நான் தேவாலயத்தை கற்பனை செய்து பார்க்க முடியும், அவர் இப்படித் தூபகலசத்தை எரியவிட்டுக் கொண்டிருந்தார், அவர் அந்த இடத்திற்குத் திரும்பி வந்து அதை இங்கும் அங்கும், இங்கும் அங்கும் அசைத்துக்கொண்டு நின்றார், அது இங்கும் அங்கும் சென்றுகொண்டிருந்தபோது தூபம் எரிந்துகொண்டிருக்க அதில் இருந்த தைலங்கள் சென்றுகொண்டிருந்தன. திடீரென்று அவர் தன் வலதுபக்கத்தில் பார்த்தபோது, அங்கே ஒரு தூதன் நின்றுகொண்டிருந்தார். தேவனுக்கு எப்பொழுதும் தூதர்கள், பணிவிடை செய்யும் ஆவிகள் இருக்கிறார்கள். நீங்கள் அதை நம்புகிறீர்களா? தூதர்கள் மரிப்பதில்லை. என்ன நடந்துகொண்டிருந்தது? தேவன் பூமியில் ஏதோ ஒன்றைச் செய்யத் தயாராகிக்கொண்டிருந்தார். எனவே அவர் எதையாவது செய்வதற்கு முன்பாக எப்பொழுதும், அவர் ஒரு அறிவிப்பை அனுப்புகிறார். 35 இப்போது, எப்போது... அங்கே தூதர்கள் வருகிறார்கள். ஒருவேளை தூதன் என்னைச் சந்திக்கலாம் மற்றும்-உங்களைச் சந்திக்கலாம் மற்றும் பல... சிறிய தூதர்கள் இருக்கலாம், ஆனால் இந்த காபிரியேல் தூதன் வருகிறார் என்று நீங்கள் கேள்விப்படும்போது, நீங்கள் கவனம் செலுத்துங்கள், ஏதோ நடக்கப் போகிறது. காபிரியேல் இயேசு கிறிஸ்துவின் முதலாம் வருகையை அறிவித்தார், காபிரியேல் இயேசு கிறிஸ்துவின் இரண்டாம் வருகையையும் அறிவிப்பார். அது சரியல்லவா? ஆமென். நான் ஏற்கனவே மார்க்க உணர்வைப் பெறத் தொடங்கிவிட்டேன். பாருங்கள். அவர் வருவதைப்பற்றி நான் நினைக்கும்போது. அங்கே சகரியா நின்றிருந்தார். அவர் பார்த்தார், அவர் திடுக்கிட்டார் மேலும் அவர் அவரிடம் சொன்னார், அவர் சொன்னார், "சகரியாவே..." என்ன நடக்கப்போகிறது என்பதையும், இங்கே இந்த ஊழியத்தின் நாட்கள் முடிந்த பிறகு, அவர் வீட்டிற்குச் செல்லப்போகிறார், தன் மனைவியுடன் இருக்கப்போகிறார், அவள் கர்ப்பம் தரித்து ஒரு குமாரனைப் பெறப்போகிறாள் என்பதையும் சொன்னார். இப்போது, அந்தப் பிரசங்கியாரை நீங்கள் கவனிக்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன்: இன்று அவர்களில் சிலரைப் போலவே. "ஏன்," என்று அவர் கூறினார், "இந்தக் காரியம் எப்படி ஆகும்? சரி, என் மனைவிக்கு மிகவும் வயதாகிவிட்டது," என்பது போல ஏதோவொன்றைச் சொன்னார். அவர் சொன்னார், "நான் தேவசந்நிதியில் நிற்கிற காபிரியேல். நீ என் வார்த்தையைச் சந்தேகித்தபடியால், குழந்தை பிறக்கும் நாள் வரைக்கும் நீ ஊமையாயிருப்பாய்." அது சரிதான். 36 தேவன் பேசுவார், தேவனுடைய வார்த்தையை எதுவும் எடுத்துப்போட முடியாது. தேவனுடைய வார்த்தை என்றென்றைக்கும் நிலைத்திருக்கும். தேவன் அதைப் பேசும்போது, அது பரலோகத்தில் என்றென்றைக்கும் உறுதிப்படுத்தப்படுகிறது. தேவன் அதைப் பேசும்போது, அது செய்து முடிக்கப் பட்டதைப்போலவே அங்கே தயாராக இருக்கிறது. ஓ, "கர்த்தர் உரைக்கிறதாவது; அது முடிவாகிவிட்டது," என்று சொல்லி, தேவனுடைய வார்த்தையை ஏற்றுக்கொண்டு, என்ன நடந்தாலும், எத்தனை வழிகளில் பக்கவாட்டில் தள்ளப்பட்டாலும் அங்கே நிற்கக்கூடியவர்களாக நாம் இருக்க வேண்டும். நாம் தேவனுடைய வார்த்தையுடனேயே தங்கியிருக்கிறோம். "தேவன் அப்படிச் சொன்னார். நான் அதை விசுவாசிக்கிறேன். அது அதை முடிவு செய்கிறது." ஆமென். இப்போது, அவர் சொன்னார், "குழந்தை பிறக்கும் நாள் வரைக்கும் நீ ஊமையாயிருப்பாய், ஆனால் என் வார்த்தைகள் அவற்றுக்கேற்ற காலத்தில் நிறைவேறும்." தேவன் தீர்மானித்திருக்கிறார். அந்த-அந்த ஹோலி-ரோலர்ஸ் (holy-rollers) கூட்டம் இந்த நாட்களில் ஏதோ ஒரு நாளில் எரிந்துபோய் அழிந்துவிடும், எதுவும் மிஞ்சாது என்று நீங்கள் எவ்வளவுதான் சொன்னாலும், தேவனுடைய வார்த்தை என்றென்றைக்கும் நிலைத்திருக்கும். அது சரிதான். தேவன் எப்படி இருக்கும் என்று சொன்னாரோ, அது சரியாக அப்படியே நிலைத்திருக்கும். 37 சரி, அவர் மீண்டும் வெளியே வந்தபோது, நிச்சயமாக, மக்கள் அவர்கள்-அவர் ஊமையாக இருந்தார் என்பதை நாம் அறிவோம். அவரால் பேச முடியவில்லை, அவர் அவர்களுக்குச் சைகை காட்டினார், பின்னர் அவர் வீட்டிற்குச் சென்றார். அவர் அங்கே தன் வேலையை முடித்த நாட்களுக்குப் பிறகு, அவர் வீட்டிற்குச் சென்றார், அவருடைய மனைவி கர்ப்பம் தரித்தாள்; அவள் ஆறு மாதங்கள் தன்னை ஒளித்துக்கொண்டிருந்தாள். மேலும் இப்போது ஆறு மாதங்களின் முடிவில், இதோ அந்தத் தூதன் மீண்டும் திரும்பி வருகிறார். ஆமென். நாட்டில் உள்ள மிக மோசமான நகரமான நாசரேத்தில் ஒரு சிறிய பழைய பெண் வசித்து வந்தாள், ஏறக்குறைய சிகாகோவைப் போலவே மிகவும் மோசமான ஊர், என்னை மன்னியுங்கள். எப்படியிருந்தாலும், நான் வசிக்கும் ஜெபர்சன்வில்லியைப் (Jeffersonville) போல மோசமானது... ஓ, மிகவும் மோசமான, பொல்லாத நகரம், ஆனால் அந்த நகரம் எவ்வளவு மோசமாக இருந்தாலும் நீங்கள் இன்னும் தேவனுடைய சமூகத்தில் சரியாக வாழ முடியும். மேலும் அவர் அப்போது செய்ததைப்போலவே தேவன் உண்மையான இருதயத்தைத் தேடிக்கொண்டிருக்கிறார். மேலும் அவர் இந்தச் சிறிய பழைய விவசாயப் பெண்ணைக் கண்டார். அது திங்கட்கிழமை காலை என்று நினைத்துக் கொள்வோம்; அது துணி துவைக்கும் நாள். அவளுடைய தலையில் ஒரு தண்ணீர்க் குடம் மற்றும் ஒவ்வொரு இடுப்பிலும் ஒன்று வைத்துக்கொண்டு இதோ அவள் நடந்துகொண்டு வருகிறாள். அவள் ஒரு மனிதனுக்குத் திருமணம் செய்து கொடுக்கப்பட ஆயத்தமாகிக்கொண்டிருக்கிறாள். அவள் ஒரு இளம் பெண் மட்டுமே, உங்களுக்குத் தெரிவது என்னவென்றால் முதலாவதாக அவளுக்கு முன்பாக ஒரு வெளிச்சம் பிரகாசிக்கிறது; அந்த வெளிச்சத்தில் மாபெரும் பிரதான தூதனாகிய காபிரியேல் நிற்கிறார்; அவர் சொன்னார், "கிருபை பெற்றவளே, வாழ்க!" 38 மேலும் அவள்... அது அவளைத் திடுக்கிடச் செய்தது... அவள் எந்தப் புருஷனையும் அறியாமல் உலகத்திற்கு ஒரு குழந்தையைக் கொண்டுவரப் போகிறாள் என்று அவர் கூறினார். அவளுடைய உறவினரான எலிசபெத்தைப்பற்றியும், அவள் எப்படிக் கர்ப்பம் தரித்து ஒரு குழந்தையைக் கொண்டுவரப் போகிறாள் என்பதைப்பற்றியும் அவளிடம் கூறினார். அவர்கள் அவருக்கு இயேசு என்று பேரிடுவார்கள் என்றும், அவர் தமது ஜனங்களை பாவத்திலிருந்து இரட்சிப்பார் என்றும் கூறினார். ஏன், அது அந்தச் சிறிய கன்னிகையைத் திடுக்கிடச் செய்தது, அதுபோன்ற ஒரு வாழ்த்துரையானது உங்களையும் திடுக்கிடச் செய்யும். அப்படித் தம் கைகளை நீட்டியபடி உங்கள் பாதையில் நின்று, "நான் தேவசந்நிதியில் நிற்கிற காபிரியேல்," என்று சொல்லும் ஒரு தூதனைச் சந்தித்தால் நீங்கள் என்ன செய்வீர்கள். நிச்சயமாக அது உங்களைப் பயமுறுத்தும். பின்னர் அந்தச் சிறிய பெண் சொல்வதை நான் பார்க்கிறேன்... இப்போது, நீங்கள் கவனிக்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன். இதோ அது இருக்கிறது. இது ஆழமாக ஊடுருவி, இடது பக்கத்தில் உள்ள ஐந்தாவது விலா எலும்புக்குக் கீழே சென்று நிலைநிறுத்தப்படும் என்று நான் நம்புகிறேன். அங்கே ஒரு ஆசாரியர் இருந்தார், ஒரு பிரசங்கியார், அவருக்கு வார்த்தை தெரியும், அவரிடம் ஏராளமான எடுத்துக்காட்டுகள் இருந்தன. ஆகார் குழந்தைகளைப் பெற்றிருந்தாள், சாராளும் பெற்றிருந்தாள், இன்னும் பலரும் குழந்தைகளைப் பெற்றிருந்தார்கள். அவரிடம் ஏராளமான எடுத்துக்காட்டுகள் இருந்தன, ஆனால் அவர் தூதனைச் சந்தேகித்தார். ஆனால் இந்தச் சிறிய பெண்ணோ, அதன் ஒரு வார்த்தையைக்கூடச் சந்தேகிக்கவில்லை. அவள் சொன்னாள், "இதோ, நான் கர்த்தருடைய அடிமை. உம்முடைய வார்த்தையின்படியே எனக்கு ஆகக்கடவது." ஆமென். அப்படித்தான் அதைச் செய்ய வேண்டும். தேவனுடைய வார்த்தையின்படியே அவரை ஏற்றுக்கொள்ளுங்கள். மரியாளைப் பாருங்கள். அவள் உறுதியாக இருப்பதற்கு முன்பே, அவளிடம் ஜீவனின் எந்த அறிகுறிகளும் இருப்பதற்கு முன்பே... நான் ஒரு கலவையான கூட்டத்தின் முன் இருக்கிறேன் ஆனால் நீங்கள்... அல்லது கவனியுங்கள். எந்த ஒரு உடல் ரீதியான அடையாளமும் தோன்றுவதற்கு முன்பே, எந்த ஒரு அடையாளமும் தோன்றுவதற்கு முன்பே தனக்கு ஒரு குழந்தை பிறக்கப்போகிறது என்று தேவனுக்குத் துதியையும் மகிமையையும் செலுத்தத் தொடங்கினாள். தேவன் தம்முடைய வார்த்தையின்படியே ஏற்றுக்கொள்ளக்கூடிய சில மரியாளைப் போன்றவர்களை இந்த மதிய வேளையில் சிகாகோவில் நமக்குக் கொடுப்பாராக (ஆமென்.) ஆமென். நான் உற்சாகமாக இருக்கிறேன் என்று நினைக்க வேண்டாம். நான்-நான்-நான் எனக்காகவே ஆமென் சொல்லிக் கொள்ளவில்லை, ஆனால் "ஆமென்" என்றால் "அப்படியே ஆகக்கடவது" என்று அர்த்தம், நான் அதை விசுவாசிக்கிறேன். சரி. 39 இதோ அவள் செல்கிறாள், நகரத்திற்குக் கீழே எல்லா இடங்களுக்கும் சென்று, தான் ஒரு புருஷனையும் அறியாமல் ஒரு குழந்தையைப் பெறப்போகிறேன் என்று மக்களிடம் சொல்கிறாள். ஏன், நிச்சயமாக. அவள் தேவனுடைய வார்த்தையின்படியே அவரை ஏற்றுக்கொண்டாள். அவள் நேராக யூதேயாவின் மலைப்பகுதிக்குச் சென்றாள். அவள் எலிசபெத்தைப்பற்றிக் கேள்விப்பட்டிருந்தாள், அவளுக்கும் ஒரு ஆசீர்வாதம் கிடைத்திருக்கிறது என்று கேள்விப்பட்டிருந்தாள். இப்போது, உண்மையாகவே மறுபடியும் பிறந்த மக்கள் அப்படித்தான் செய்வார்கள். யாராவது பரிசுத்த ஆவியானவரைப் பெறுகிறார்கள் என்று கேள்விப்படும்போது, அதைப்பற்றி முழுமையாகத் தெரிந்துகொள்ள அவர்கள் அங்கே செல்கிறார்கள். ஆமென். ஒருவரைக் குணமாக்க தேவன் ஏதேனும் செய்யும்போது, அடுத்த வீட்டுக்காரர் வந்து அதில் சேர்ந்துகொண்டு மகிழ்ச்சியாகவும் களிகூர்ந்தும் இருப்பார். ஆகையால் பெத்லகேம் நகரத்தின் வழியாக நேராகக் கீழே சென்று, நேராக யூதேயாவுக்குள் அவள் சென்றாள், ஒரு சாராள், அல்லது எலிசபெத் இருந்த இடத்திற்கு அவள் வந்தபோது... இப்போது, மரியாளும் எலிசபெத்தும் நெருங்கிய உறவினர்கள் (first cousins). யோவானும் இயேசுவும் இரண்டாவது உறவினர்கள் (second cousins), அவர்கள் அந்த வீடு இருந்த இடத்திற்கு நேராக வந்தபோது, அறையின் வெகு உள்ளே எலிசபெத் இருப்பதை நான் பார்க்க முடிகிறது. அவள் தன்னை ஒளித்துக்கொண்டிருந்தாள். அவள் திரையை உயர்த்தினாள். ஒரு இளம் பெண் வருவதை அவள் பார்த்தாள். ஏன், அவள் சொன்னாள், "அது மரியாள், என் உறவள்." அவள் வெளியே சென்றாள். என் அருமையே, அவள் மிகவும் மகிழ்ச்சியாக இருப்பதை என்னால் பார்க்க முடிகிறது, அவள் தன் கைகளால் அவளை அணைத்து அவளை முத்தமிடத் தொடங்கினாள். 40 பெண்கள் அப்படித்தான் ஒருவரை யொருவர் சந்திப்பார்கள், ஆனால், சகோதரரே, உங்களுக்குத் தெரியுமா, அந்த நாட்கள் இப்போது மாறிவிட்டன. அவர்களுக்கு ஒருவரையொருவர் நோக்கி அந்த வகையான அன்பு இல்லை. இப்போது அவர்கள் உங்களிடம் பேசுவதுகூட இல்லை என்ற நிலைக்கு அவர்கள் வந்துவிட்டார்கள். அது சரியல்லவா? ஏன், முன்பு பண்ணையில் இருந்த நாட்களில்-எப்போதாவது ஒரு மனிதனுக்கு உடம்பு சரியில்லாமல் போகும்போது, நாங்கள் வெளியே சென்று அவனுக்காக மரம் வெட்டுவோம், அல்லது வைக்கோலைப் போர் போடுவோம், அல்லது அது என்னவாக இருந்தாலும் சரி, அதைப்பற்றி எதுவும் யோசிக்காமல், இரவு நேரத்தில் அங்கே சென்று அமர்ந்திருப்போம். இப்போது, செய்தித்தாள்களில் பார்த்தா லொழிய, உங்கள் அண்டை வீட்டுக்காரர் இறந்துபோனதுகூட உங்களுக்குத் தெரியாது. சகோதர அன்பு எப்படி இல்லாமல் போய்விட்டது என்பது வெட்கக்கேடான விஷயம். அது சரிதான். முன்பு இருந்ததைப் போல அது இப்போது நம்மிடம் இல்லை. ஏன், அப்பா, அவருக்குப் பணம் இல்லாமல் போனால், அறுவடை வரும்வரை சமாளிப்பதற்காக அவர் அங்கே சென்று ஐம்பது டாலர்கள் கடன் வாங்குவார். அதெல்லாம் சரிதான். உங்களுக்கு எந்தப் பிணையமும் (security) தேவைப்படாது. ஏன், இன்று பிணையம் இல்லாமல் உங்களால் ஐந்து டாலர்கள்கூடக் கடன் வாங்க முடியாது. சகோதர அன்பு மறைந்து கொண்டிருக்கிறது. அப்படியாகும் என்று தேவன் சொன்னார். ஆம், ஓ அது நமக்கு எவ்வளவாகத் தேவைப்படுகிறது. 41 அன்றொரு நாள், நான்... என் மனைவி இங்கே இருக்கிறாள், அநேகமாக இதைப் பற்றி அவள் பிறகு என்னிடம் சொல்வாள். நாங்கள் நகரத்திற்குச் சென்றோம், அங்கே தெருவில் ஒரு பெண் சென்று கொண்டிருந்தாள், எங்களுக்குத் தெரிந்த ஒரு இளம் பெண். அப்போது நான், "சொல்லு, நீ அவளைப் பார்த்தாயா?" என்றேன். அதற்கு அவள், "நான்-நான் அவளிடம் பேசினேன்" என்றாள். நான் சொன்னேன், "நான் உன்னைப் பார்க்கவில்லையே." அப்போது அவள், "நான் அவளைப் பார்த்துப் புன்னகைத்தேன்" என்றாள். அது பேசுவது அல்ல. எனக்கு எது பிடிக்கும் என்று உங்களுக்குத் தெரியும். எனக்கு ஒரு பெரிய, பழைய பம்ப் கைப்பிடி போன்ற கைகுலுக்கல்தான் பிடிக்கும், ஒரு பழைய கிராமத்து பாணி. "வணக்கம் சகோதரனே. எப்படி இருக்கிறீர்கள்?" என்று சொல்ல வேண்டும். ஆம், ஐயா. ஆனால் இப்போதெல்லாம் அதற்குப் பதிலாக அவர்கள் ஒரு சிறிய முட்டாள்தனமான புன்னகையுடன் திரும்பி, "ஹலோ" என்று சொல்கிறார்கள். அடடா, எனக்கு அது பிடிக்கவில்லை. அது என்னை உறைந்துபோகச் செய்கிறது. ஒரு நாள் சகோதரர் போஸ்வொர்த்தும் நானும் புளோரிடாவிலுள்ள மியாமியில் இருந்தோம், அங்கு நாங்கள் ஒரு கூடாரத்தை அமைத்திருந்தோம். ஒரு சிறு பையன் ஒரு கூட்டத்தை நடத்திக்கொண்டிருந்தான், அதில் அவனுக்குச் சில எதிர்ப்புகள் வந்தன, அவனுக்காக ஒரு இரண்டு நாட்கள் இருக்க நான் அங்கு சென்றிருந்தேன், அங்கு ஒரு டச்சஸ் (சீமாட்டி) அல்லது அது போன்ற யாரோ இருந்தார்கள். நான்... அடடா, எனக்கு இந்தக் கௌரவம் மற்றும் பகட்டுகளைப் பற்றி அதிகம் தெரியாது. எனவே, அவர்கள்... அவள் ஏதோ பெரிய பெண்மணி. அவளுடைய இடத்தில் அல்லது அவளுக்குச் சொந்தமான ஒரு பூங்கா இருந்த இடத்தில் இந்தக் கூடாரத்தை அமைக்க அவள் அனுமதித்தாள். 42 நான் அங்கே சென்றிருந்தேன், உங்களுக்குத் தெரியும், நான் பிரசங்கித்துக் கொண்டிருந்தேன், அப்போது சகோதரர் போஸ்வொர்த், "சகோதரர் பிரான்ஹாம், நீங்கள் கொஞ்சம் இங்கே பின்னால் நிற்க முடியுமா?" என்றார். "அந்த டச்சஸ் உங்களைப் பார்க்க விரும்புகிறார்" என்றார். அதற்கு நான், "யார்?" என்றேன். அவர், "அந்த டச்சஸ்" என்றார். நான் சொன்னேன், "சரி, அவள் யார்?" அதற்கு அவர், "சரி, நமக்கு இந்த இடத்தை அளித்த அந்தப் பெண்மணிதான்" என்றார். நான் சொன்னேன், "சரி, மற்றவர்களை விட அவள் எப்படி உயர்ந்தவள்?" பார்த்தீர்களா? அதனால் அவர், "சரி, நீங்கள் இங்கேயே நில்லுங்கள். அவள் வந்துகொண்டிருக்கிறாள்" என்றார். சில நிமிடங்களில் ஒரு மிகப் பெரிய பெண்மணி அங்கு வந்தாள். அவள் தன் கையில் ஒரு குச்சியில் பொருத்தப்பட்ட ஒரு மூக்குக்கண்ணாடியை வைத்திருந்தாள், அதைத் தன்னிடமிருந்து வெகு தொலைவில் நீட்டிப் பிடித்திருந்தாள். அந்த அளவுக்குத் தொலைவில் கண்ணாடியை வைத்துப் பார்த்தால் மக்களுக்கு ஒன்றும் தெரியாது என்பது உங்களுக்குத் தெரியும். மேலும் அவள் ஒரு மஸ்கெட் துப்பாக்கியின் குப்பியை அடைக்கப் போதுமான அளவுடைய துணியை மட்டுமே ஆடையாக அணிந்து வந்தாள், அவள் அப்படியே நின்றாள், அப்படியே நடந்து வந்தாள். அவள், "நீங்கள் டாக்டர் பிரான்ஹாமா?" என்று கேட்டாள். நான் சொன்னேன், "இல்லை, அம்மா. இல்லை, அம்மா." நான் சொன்னேன், "நான் சகோதரர் பிரான்ஹாம்." அதற்கு அவள், "சரி, டாக்டர் பிரான்ஹாம்," என்றாள், "உங்களைச் சந்திப்பதில் நான் பெருமகிழ்ச்சி அடைகிறேன்," என்று சொல்லித் தன் பெரிய, தடிமனான கையை அப்படி உயர்த்திக் காட்டினாள். 43 நான் அவளைப் பிடித்துக்கொண்டேன். நான் சொன்னேன், "இங்கே பாருங்கள் சகோதரி, அதைக் கீழே கொண்டு வாருங்கள், அப்போதுதான் நான் உங்களை மீண்டும் பார்க்கும்போது எனக்கு உங்களை அடையாளம் தெரியும்." அவ்வளவுதான். இன்று நம்மில் அநேகர் "பகட்டு காட்டுதல்" என்று சொல்லப்படும் அந்தப் பகட்டான தோற்றத்தைக் காட்ட முயற்சிக்கிறோம். எப்படியிருந்தாலும் நீங்கள் யார்? அது சரிதான். நீங்கள் சாதாரண மனிதர்கள் என்பதைத் தவிர வேறொன்றுமில்லை. சற்று காலத்திற்கு முன்பு நான் ஒரு கொலோசியம், அல்லது ஒரு அருங்காட்சி யகத்தைக் கடந்து சென்று கொண்டிருந்தேன், அங்கே நூற்று ஐம்பது பவுண்ட் எடையுள்ள ஒரு மனிதனின் உடலின் படம் இருந்தது, இரசாயனப் பொருட்களின் அடிப்படையில் அவனது மதிப்பு எண்பத்து நான்கு சென்ட்கள் என்று அதில் குறிப்பிடப்பட்டிருந்தது. அந்த எண்பத்து நான்கு சென்ட் மதிப்புள்ள உடலுக்கு நூறு டாலர் உடையை அணிந்துகொண்டு, ஏதோ பெரிய ஆள் என்று நினைத்துக்கொண்டு, மழை பெய்தால் மூக்கில் தண்ணீர் ஏறி மூழ்கிவிடுவது போல மூக்கை மேலே தூக்கிக்கொண்டு நடக்கிறீர்கள். நீங்கள் நூற்று ஐம்பது பவுண்ட் எடையுடன் இருந்தாலும் உங்கள் மதிப்பு எண்பத்து நான்கு சென்ட்கள்தான். எண்பத்து நான்கு சென்ட் மதிப்புள்ள உடலை ஒரு ஐந்நூறு டாலர் மிங்க் கோட்டினால் போர்த்திக்கொண்டு உங்கள் அண்டை வீட்டாரிடம் கூடப் பேச மாட்டீர்கள். அது சரிதான். 44 இன்றைய உலகத்தின் பிரச்சனையே இதுதான் (ஆமென்.): மக்கள் கர்வத்துடனும் விறைப்பாகவும் இருக்கிறார்கள். தேவன் பரிசுத்த ஆவியை ஊற்றி உங்களுக்குள் உள்ள அந்த விஷயத்தை வாடச் செய்ய வேண்டும். நாம் ஒவ்வொருவரும், நாம் அனைவரும் சரியாக ஒரே நிலையில்தான் இருக்கிறோம். தேவன் நம் அனைவரையும் ஒரே அச்சில்தான் உருவாக்கினார். நீங்கள் ஒரு சிறந்த சுற்றுப்புறத்தில் வாழ்ந்தாலும், ஒரு சிறந்த சபைக்குச் சென்றாலும், தேவன் உங்களை எப்படி உருவாக்கினாரோ அதுவாகத்தான் நீங்கள் இருக்கிறீர்களே தவிர வேறொன்றுமில்லை, மேன்மை பாராட்ட நீங்கள் யார். மகிமை தேவனுக்கே சேரும். ஆம், ஐயா. அங்கே நின்றுகொண்டிருந்த அந்த இரண்டு சிறுவர்களில் ஒருவன் பார்த்து, "சரி, ஜான், நாம் அந்த அளவுக்கு மதிப்பற்றவர்கள், இல்லையா?" என்றான். 45 நான் சொன்னேன், "தம்பி, இதோ பார். அது உன்னுடைய உடல், ஆனால் உனக்கு ஒரு ஆத்துமா இருக்கிறது, அது பத்தாயிரம் உலகங்களை விட மதிப்பு மிக்கது." அது சரிதான். நான் சொன்னேன், "இந்த உடல் ஏதோ ஒரு நாள் மண்ணுக்குத் திரும்பிச் சென்றுவிடும், ஆனால் என்றென்றும் வாழப்போகிற ஒரு ஆத்துமா உன்னிடம் இருக்கிறது. அதைப் பத்திரமாகப் பார்த்துக் கொள்." உங்களை மீட்பதற்காக மகிமையிலிருந்து வந்து மரிப்பதற்கு இயேசு கிறிஸ்து அதற்கு அளித்த மதிப்பைப் பாருங்கள். அதுதான் பிரச்சனை. நாம் வெளித்தோற்றத்தைப் பார்த்து, வெளித்தோற்றத்தைக் கவனித்துக் கொள்கிறோம், ஆனால் உள்ளானதை நாம் கைவிட்டு விடுகிறோம். ஆம், ஐயா. மார்த்தாளை, அல்லது மரியாள் என்று சொல்வதுதான் சரி; அவள் ஓடிச்சென்று எலிசபெத்தைக் கட்டிக்கொள்வதையும், அவளை முத்தமிட்டு, தட்டிக்கொடுத்துக் கொண்டாடு வதையும், மகிழ்ச்சியாக இருப்பதையும் என்னால் காண முடிகிறது. "ஓ..." என்று சொன்னாள். இப்போது, அவர்களின் உரையாடலைக் கவனிப்போம். மார்த்தாள் சொல்வதை என்னால் கேட்க முடிகிறது... இது ஒரு நாடகம். மார்த்தாள் அல்லது மரியாள் சொல்வது என் காதில் விழுகிறது, "ஓ, எலிசபெத், நான் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறேன். ஓ, அந்த... நீ தாயாகப் போகிறாய் என்று என்னிடம் சொல்லப்பட்டது (எப்படி என்று அல்ல), ஆனால் நீ தாயாகப் போகிறாய் என்று எனக்குத் தெரிவிக்கப்பட்டது." 46 "ஆம்," எலிசபெத் சொன்னாள், "அது சரிதான்," ஆனால் அவள் சொன்னாள், "நான் கொஞ்சம் கவலையாக இருக்கிறேன்." "ஏன்?" "ஏனென்றால், நான் தாயாகி ஆறு மாதங்கள் ஆகிறது, நமக்குத் தெரிந்தவரை, இன்னும் ஜீவன் உண்டாகவில்லை." அது இயல்புக்கு மாறானது. பார்த்தீர்களா? இரண்டு அல்லது மூன்று மாதங்களில் ஜீவன் உண்டாகிவிடும். எனவே அவர்கள் சொன்னார்கள், "இது இயல்புக்கு மாறானது. எனக்கு இன்னும் ஜீவன் உண்டாகவில்லை, மேலும் நான்-நான் கவலையாக இருக்கிறேன், எனக்கு ஆறு மாதங்கள் ஆகிறது." அதற்கு அவள் சொன்னாள், "ஆனால் காபிரியேல் தூதன் என்னைச் சந்தித்து, எந்தவொரு புருஷனையும் அறியாமலேயே நானும் ஒரு தாயாகப் போகிறேன் என்று சொன்னார்," மேலும், "நான் இந்தக் குழந்தையைப் பெறுவேன் என்றும், அவருக்கு இயேசு என்று பேரிடுவேன் என்றும் சொன்னார்." 47 மேலும் அந்த இயேசு என்ற நாமம் முதல்முறையாக மரணத்துக்குரிய உதடுகளின் வழியாக உச்சரிக்கப்பட்டபோது, தாயின் வயிற்றில் கிடந்த மரித்த நிலையில் இருந்த சின்னஞ்சிறு யோவான் பரிசுத்த ஆவியைப் பெற்று, மகிழ்ச்சியால் துள்ளிக்குதிக்க ஆரம்பித்தான். அது சரிதான், இயேசு கிறிஸ்துவின் நாமம் மரித்த ஒரு குழந்தைக்கு ஜீவனைத் தருமென்றால், மறுபடியும் பிறந்த சபைக்கு அது என்ன செய்ய வேண்டும்? அல்லேலூயா. ஆமென். ஆம், ஐயா. அவள் சொன்னாள், "என் ஆண்டவருடைய தாய் என்னிடத்தில் வந்தது எனக்கு எதினால் கிடைத்தது? இதோ, நீ வாழ்த்தின சத்தம் என் காதிலே விழுந்தவுடனே, என் வயிற்றிலுள்ள பிள்ளை களிப்பாய்த் துள்ளிற்று." அல்லேலூயா. ஆம், ஐயா. ஓ, சகோதரனே, நாம் எந்தக் குழப்பத்திலும் இல்லை. நாம் எங்கே இருக்கிறோம் என்று நமக்குத் தெரியும். நிச்சயமாக. அவள் சொன்னாள், "நீ வாழ்த்தின சத்தம் என் காதிலே விழுந்தவுடனே, என் வயிற்றிலுள்ள பிள்ளை களிப்பாய்த் துள்ளிற்று," மேலும் யோவான் பரிசுத்த ஆவியைப் பெற்றான். ஆமென். 48 இயேசு கிறிஸ்துவின் நாமம் என்ன செய்யும்? சூனியக்காரர்களை அது கட்டுவதைப் நான் பார்த்திருக்கிறேன். பிசாசுகளை அது கட்டியதை நான் பார்த்திருக்கிறேன்... வெட்கக்கேடான வகையில், இயேசு கிறிஸ்துவின் நாமத்தைக் கேட்டு அவர்கள் மேடையில் விழுவதையும், தங்கள் இருக்கைகளில் சரிவதையும், முடங்கிப்போய் அங்கேயே உட்கார்ந்திருப்பதையும் நான் பார்த்திருக்கிறேன். அடடா. பிதாவின் மேல் விசுவாசம், குமாரன் மேல் விசுவாசம், பரிசுத்த ஆவியானவர் மேல் விசுவாசம், மூன்றிலும் ஒன்றானவர். பிசாசுகள் நடுங்கும், பாவிகள் விழித்தெழுவார்கள்; யெகோவா மீதான விசுவாசம் எதையும் அசைக்கச் செய்யும். 49 அது சரிதான். அது முற்றிலும் சரிதான். தேவன் மீதான உங்கள் விசுவாசத்தைப் பற்றிக்கொள்ளுங்கள். அது சரிதான். ஓ, தேவனை விசுவாசிக்கக்கூடிய ஒரு ஜனத்தை தேவன் எப்போதும் கொண்டிருக்கிறார். அன்று அவர் வனாந்தரத்திலிருந்து வெளியே வந்தபோது, இஸ்ரவேல் மக்களை வனாந்தரத்திற்குள் கொண்டுவந்தபோது... அது என்னவொரு நேரம். அவர்கள் செங்கடலைக் கடந்து, அங்கே சென்றடைந்த பிறகு, அவர்கள் ஒரு பழைய காலத்து முகாம் கூட்டத்தை நடத்தினார்கள். அவர்கள் திரும்பிப் பார்த்தபோது, பழைய எஜமானர்கள் அனைவரும் கடலில் இறந்துகிடப்பதைக் கண்டார்கள். மிரியாம் ஆவிக்குள்-ஆவிக்குள் நடனமாட ஆரம்பித்துத் தம்புரு வாசித்தாள், அது ஒரு பழைய காலத்து முகாம் கூட்டத்தின் மிகச் சரியான காட்சியாகும். அது சரியா? மோசே ஆவிக்குள் நிறைந்து, தன் கைகளை உயர்த்தி, ஆவிக்குள் ஒரு பாடலைப் பாடினார். ஆமென். அது ஒரு பழைய காலத்துக் கூட்டம் இல்லை என்றால், அப்படி ஒன்றை நான் பார்த்ததே இல்லை. 50 இப்போது, பாருங்கள். தேவன் அவர்களுடைய எல்லாத் தேவைகளையும் சந்திப்பதாக வாக்குத்தத்தம் செய்திருந்தார், அவர்கள் கடந்து சென்றபோது, ஏன், அவர்கள் தலைக்கு மேல் ஒரு-ஒரு சிறிய பெட்டி நிறைய ரொட்டியைத் தவிர அவர்களிடம் வேறு எதுவும் இல்லை. அதுவும் தீர்ந்துபோனது. அதனால் தேவன் அவர்களுடைய தேவையைச் சந்திப்பதாக வாக்குத்தத்தம் செய்தார். மறுநாள் காலை அவர்கள் எழுந்தபோது, தரையெங்கும் மன்னாவால் நிரம்பியிருந்தது, அது உறைபனியைப் போல் காட்சியளித்தது. இப்போது, அதை ருசிபார்க்கும்படி கூறப்பட்டது, அவர்கள் தங்கள் நாவினால் அதை நக்கி, ருசிபார்த்தார்கள். அது தேன் கலந்த பணிகாரத்தைப் போன்ற ருசியுடையதாக இருந்தது. அடடா, அது ஒரு உண்மையான பாப்டிஸ்ட் உணவு, இல்லையா? பணிகாரமும் தேனும்... சரிதான். எனவே அவர்... அவர்கள் அதைச் சாப்பிடத் தொடங்கினார்கள். அது சுவையாக இருந்தது. உங்களுக்குத் தெரியும், சங்கீதக்காரனாகிய தாவீது ஒருமுறை, "கர்த்தர் நல்லவர் என்பதை ருசித்துப் பாருங்கள். கன்மலையிலிருந்து வடியும் தேனைப் போல அது ருசிக்கிறது" என்று சொன்னதாக நான் நம்புகிறேன். அது சரியா? ஆம், ஐயா. கன்மலைத் தேன்... ஒரு கன்மலையைக் குறித்து ஏதோ ஒன்று இருக்கிறது, வேதாகமத்தில், அது எப்போதும் கன்மலையாகவே இருக்கிறது. அவரே அந்தக் கன்மலை. வனாந்தரத்தில் இருந்த அந்தக் கன்மலை அவரே, மேலும் அந்தக் கன்மலை... 51 பழைய காலங்களில் வழக்கமாக எப்படி நடக்கும் என்றால்... ஒருவரை வெறிநாய் கடித்துவிட்டால். அவர்கள் அவரை ஒரு 'மேட்ஸ்டோன்' (வெறிநாய்க்கடிக்கு மருந்தாகப் பயன்படும் கல்) இருக்கும் இடத்திற்குக் கொண்டு சென்று, அவரை அந்த 'மேட்ஸ்டோனுடன்' ஒட்டிக்கொள்ளச் செய்வார்கள். அவர் அதில் ஒட்டிக்கொண்டால், இதோ, அவர் குணமாகிவிடுவார். அவர் ஒட்டிக்கொள்ளவில்லை என்றால், அவர் இறந்துவிடுவார். இன்று எனக்குத் தெரிந்த மிகவும் மோசமான வெறிநாய் பிசாசுதான். அது சரிதான், அவனால் நீங்கள் கடிக்கப்பட்டால், அந்தக் கல்லிடம், கன்மலையாகிய கிறிஸ்து இயேசுவிடம் செல்லுங்கள்; எனக்காகப் பிளக்கப்பட்ட கல்வாரியின் அநாதி கன்மலையைப் பற்றிக்கொள்ளுங்கள், நான் உமக்குள் மறைந்துகொள்ளட்டும். அதைப் பற்றிக் கொள்ளுங்கள்; உலகம் என்ன சொன்னாலும், உங்கள் சபை என்ன சொன்னாலும், மருத்துவர் என்ன சொன்னாலும், அந்த அநாதி கன்மலையைப் பற்றிக்கொள்ளுங்கள். அங்கேயே ஒட்டிக் கொள்ளுங்கள்; அதைப் பற்றிக்கொள்ளுங்கள், நீங்கள் குணமாகும்படி தேவன் பார்த்துக் கொள்வார். நீங்கள் அதை நம்பவில்லையா? ஆமென். ஆம், ஐயா. அடடா. பிறகு மற்றொரு விஷயம், அந்த மன்னா கன்மலைத் தேனைப் போன்ற ருசியுடையது. நீங்கள் எப்போதாவது அதைப் பெற்றிருக்கிறீர்களா? நீங்கள் எப்போதாவது அதை ருசிபார்த்திருக்கிறீர்களா? இன்று நமக்குச் சில ஆவிக்குரிய மன்னா கிடைத்திருக்கிறது. அதை நீங்கள் நம்புகிறீர்களா? அவர்கள் பயணத்தில் இருக்கும்வரை தேவன் அவர்களுக்கு அந்த மன்னாவை அளித்துக் கொண்டிருந்தார். தேவன்... அது பரிசுத்த ஆவியானவருக்கு ஒரு நிழலாட்டமாக இருந்தது. அதை நீங்கள் நம்புகிறீர்களா? அவர்கள் இயற்கையான மனிதனுக்கு இயற்கையான மன்னாவை அளித்தார்கள். இப்போது, ஆவிக்குரிய மனிதன் பரலோகத்திலிருந்து மன்னாவைப் பெறுகிறான், அதுவே பரிசுத்த ஆவியானவர். 52 பெந்தெகொஸ்தே நாளில் சபை ஆரம்பிக்கப்பட்டபோது, அது முதல் மன்னா பொழிந்ததன் மிக அழகான நிழலாட்டமாகும், அவர்கள் அனைவரும் அங்கே மேல் அறையில் ஒருமனப்பட்டு இருந்தார்கள்; அப்பொழுது பலத்த காற்று அடிக்கிற முழக்கம்போல, வானத்திலிருந்து சடிதியாய் ஒரு முழக்க முண்டாகி, அவர்கள் உட்கார்ந்திருந்த வீடு முழுவதையும் நிரப்பிற்று. அக்கினிமயமான நாவுகள் போலப் பிளந்திருக்கும் நாவுகள் அவர்களுக்குக் காணப்பட்டது. அவர்கள் அனைவரும் பரிசுத்த ஆவியினால் நிரப்பப்பட்டு, அலறிக்கொண்டும் சத்தமிட்டுக் கொண்டும் தெருவுக்குள் சென்றார்கள். மேலும் வெளியே நின்றுகொண்டிருந்த அந்த எல்லா-எல்லா மத உலகமும், "சரி, இவர்கள் குடித்திருக்கிறார்கள். இவர்கள் புது மதுவினால் நிரம்பியிருக்கிறார்கள். சரி, அவர்களைக் கேளுங்கள். என் வாழ்நாளில் இப்படி ஒரு சத்தத்தை நான் கேட்டதே இல்லை" என்றார்கள். இன்று மதியம் இங்கே இருக்கும் என் அன்பு கத்தோலிக்க நண்பரே, நான் உங்களுக்கு ஒன்றைச் சொல்ல விரும்புகிறேன்: ஆசீர்வதிக்கப்பட்ட கன்னி மரியாளும் அவர்களுடன் இருந்தாள். அது சரிதான். மேலும் தேவன்... இங்கே கேளுங்கள், கர்வமாக இருக்கிறோம் என்று நினைக்கும் நீங்கள் இப்போது இதைப் பாருங்கள். தேவன் இயேசு கிறிஸ்துவின் தாயை இனிமேல் மதிக்கமாட்டார் என்றும், அவள் அங்கே மேலே சென்று பரிசுத்த ஆவியின் அபிஷேகத்தைப் பெற்று, ஒரு குடிகாரப் பெண்ணைப் போல நடந்துகொள்ளும் வரை அவளால் பரலோகத்திற்குள் செல்ல முடியாது என்ற நிலைமை இருந்தால், நீங்கள் அங்கே செல்வதற்கு முன்பாக அதை எந்த அளவுக்குப் பெற்றிருக்க வேண்டும்? அது சரிதான். 53 மேலும் அவள் குடித்தவளைப் போலத் தள்ளாடினாள் (அல்லேலூயா.), ஒரு குடிகாரனைப் போலத் தள்ளாடினாள். ஓ, ஒரு குடிகாரன், "ஓ, எல்லாம் நன்றாக இருக்கிறது" என்று சொல்வதை நீங்கள் எப்போதாவது கேட்டிருக்கிறீர்களா? இப்போது, "மதுபான வெறிகொள்ளாமல், ஆவியினால் நிறையுங்கள்." அல்லேலூயா. இன்று நமக்குத் தேவையானது என்னவென்றால், பாவத்தை எரித்துப்போடும் பரிசுத்த ஆவியின் பழைய காலத்துப் போதை தரும் அபிஷேகமே, இரட்டை குணம், ஒரு பழைய காலத்து காடு சார்ந்த, வான நீல நிற, பாவத்தைக் கொல்லும் மார்க்கம். அல்லேலூயா. இன்றைய உலகத்திற்குத் தேவையானது ஒரு பழைய காலத்துப் புனித பவுலின் எழுப்புதலும், வேதாகமத்தின் பரிசுத்த ஆவியானவர் மீண்டும் சபைக்குத் திரும்புவதுமே ஆகும். ஆமென். இன்று சபையின் பிரச்சனை இதுதான், அது இவ்வளவு சம்பிரதாயமாகவும் அசட்டையாகவும் இருப்பதற்குக் காரணம் இதுதான். ஆம், ஐயா. இப்போது, அவர்கள் அனைவரும் இதைப் பெற்றபோது, அவர்கள் ஆச்சரியப்பட ஆரம்பித்தார்கள். "சகோதரரே, நாங்கள் என்ன செய்ய வேண்டும்?" என்றார்கள். அவர்கள் மன்னாவைச் சாப்பிட்டுக் கொண்டிருந்தார்கள் (அடடா.), நல்ல நேரத்தைக் கழித்துக் கொண்டு, தேவனை மகிமைப்படுத்திக் கொண்டிருந்தார்கள். அப்பொழுது பேதுரு: "நீங்கள் மனந்திரும்பி, ஒவ்வொருவரும் பாவமன்னிப்புக் கென்று இயேசுகிறிஸ்துவின் நாமத்தினாலே ஞானஸ்நானம் பெற்றுக் கொள்ளுங்கள், அப்பொழுது பரிசுத்த ஆவியின் வரத்தைப் பெறுவீர்கள்" என்றார். என்ன? 54 இப்போது, ஆரோன் முதல் மன்னா பொழிந்த உடனே, தேவன் ஆரோனிடமும் மோசேயிடமும், "நீங்கள் வெளியே சென்று பல ஓமர் நிறைய அதை எடுத்து வந்து மகா பரிசுத்த ஸ்தலத்திற்குள் வையுங்கள், அப்போது உங்கள் பிள்ளைகளின் பிள்ளைகள், ஆசாரியத்துவத்திற்கு வரும் அனைவரும், அந்த அசல் மன்னாவை ருசிபார்ப்பார்கள்" என்றார். ஓ, ஒரு மனிதன் ஆசாரியனாகும் போது அது என்னவொரு பாக்கியம்... இப்போது, நினைவில் கொள்ளுங்கள், மகா பரிசுத்த ஸ்தலத்திற்கு வெளியே, அது மட்டும்தான் பாதுகாக்கப்பட்டது. அது இருபத்தி நான்கு மணி நேரத்திற்குத் தாங்காது. அதில் புழுக்கள் வைத்துவிடும். இன்றைய பெந்தெகொஸ்தே சபையின் பிரச்சனை அதுதான். ஆமென். என்ன பிரச்சனை? ஒரு வருடத்திற்கு முன்பு உங்களுக்குக் கிடைத்த அனுபவத்தில் இன்று புழுக்கள் நெளிந்துகொண்டிருக்கின்றன; அந்த விஷயத்தை விட்டொழியுங்கள், நாம் இப்போதே ஒன்றைப் பெற்றுக்கொள்வோம். அவற்றில் நெளியும் அந்தச் சிறிய கறையான்கள் அல்லது அது எதுவாக இருந்தாலும் உங்களுக்குத் தெரியும், உடைபட்ட தொட்டிகள், தேங்கிய தண்ணீர்... நேற்று என்னிடம் என்ன இருந்தது என்று எனக்குத் தெரியும். இன்று எனக்கு என்ன கிடைத்தது என்று எனக்குத் தெரியும். அல்லேலூயா. நான் அதிலிருந்து இன்னும் அதிகமாகத் தேடிக் கொண்டிருக்கிறேன். ஆண்டவரே, ஒவ்வொரு நாளும் என் ஆத்துமாவை நிரப்பும். ஆம், ஐயா. 55 பின்னர் உள்ளே வரும் ஒவ்வொரு ஆசாரியனும் அந்த அசல் மன்னாவிலிருந்து ஒரு கடியைச் சாப்பிடலாம். இப்போது, பாருங்கள். மனந்திரும்பி ஞானஸ்நானம் பெறுங்கள், நீங்கள் பரிசுத்த ஆவியின் வரத்தைப் பெறுவீர்கள் என்று பேதுரு சொன்னார், ஏனென்றால் இந்த மன்னா, வேறு வார்த்தைகளில் கூறுவதானால், உங்களுக்கும், உங்கள் பிள்ளைகளின் பிள்ளைகளுக்கும், நம்முடைய தேவனாகிய கர்த்தர் வரவழைக்கும் தூரத்திலுள்ள யாவருக்கும் உரியது. இப்போது, இன்று, இப்போது, பிரிவினையாக நின்ற நடுச்சுவர் இடிக்கப்பட்டுவிட்டது, ஒவ்வொரு மனிதனும், எந்த மனிதனாக இருந்தாலும், அவன் யாராக இருந்தாலும், மறுபடியும் பிறக்க விரும்பினால் தேவனுடைய ஆலயத்திற்குள் வரலாம், பலிபீடத்தின் அருகில் சென்று, தன் கைகளை உயர்த்தி, வாயளவாகப் பெற்றுக்கொள்ளலாம், அதைப்போன்ற ஒன்றையல்ல, பெந்தெகொஸ்தே நாளில் பொழிந்த அந்த அசல் மன்னாவை: அதே கிரியைகள், அதே வெளிப்பாடுகள், அதே வல்லமை, அதே ஆதாரம். பெந்தெகொஸ்தே நாளில் அவர்கள் பெற்ற அனைத்தையும் இன்று நாம் பெறமுடியும், அதைப்போன்ற ஒன்றையல்ல, ஆனால் அதே காரியத்தை. ஆமென். அல்லேலூயா. அன்று அந்தப் பழைய ஓமரில் இருந்த இந்த மனிதர்கள், அதைப் போன்று காட்சியளித்த ஒன்றைப் பெறவில்லை. அவர்கள் அசல் காரியத்தையே பெற்றார்கள். அல்லேலூயா. இன்று நீங்கள் பரிசுத்த ஆவியின் அசல் அபிஷேகத்தைப் பெறலாம் என்பதில் நான் மகிழ்ச்சியடைகிறேன்: வல்லமை, அடையாளங்கள், அதே அற்புதங்கள், அதே அடையாளங்கள், அதே உயிர்த்தெழுந்த கர்த்தராகிய இயேசு. அப்பாடா. சகோதரனே. 56 ஓ, "வாக்குத்தத்தமானது உங்களுக்கும், உங்கள் பிள்ளைகளுக்கும், நம்முடைய தேவனாகிய கர்த்தர் வரவழைக்கும் தூரத்திலுள்ள யாவருக்கும் உண்டாயிருக்கிறது." அவர், "அது கன்மலையிலிருந்து வடியும் தேனைப் போல ருசிக்கிறது" என்று சொன்னார், தாவீது சொன்னார்: கன்மலைத் தேன். இஸ்ரவேலர்கள் தங்கள் பயணத்தில் இருந்தபோது, அவர்களுக்கு ஒரு கன்மலைப் பிளப்பு இருந்த இடத்தில், அவர்கள் கன்மலைக்குள் சென்று தேனைக் கண்டுபிடித்தார்கள் என்பது உங்களுக்குத் தெரியும். அவர்களுக்குத் தேவையான அனைத்தும் அங்கே அந்தக் கன்மலையிலேயே இருந்தது. இன்று உங்களுக்குத் தேவையான அனைத்தும் கன்மலையாகிய கிறிஸ்து இயேசுவுக்குள்ளேயே இருக்கிறது. அது சரியா? ஆம், ஐயா. 57 இப்போது, தாவீது ஒரு மேய்ப்பனாக இருந்ததால், அவர்... மேய்ப்பர்கள் வழக்கமாகத் தங்கள் பக்கவாட்டில் ஒரு தோல் பையைச் சுமந்து செல்வார்கள், ஒவ்வொரு முறையும் ஒரு ஆடு நோய்வாய்ப்படும்போது, அவர்கள் இந்தத் தேனில் கொஞ்சம் எடுத்து அந்தப் பையிலிருந்து வெளியே எடுத்து ஒரு பாறையின் மீது, ஒரு சுண்ணாம்புப் பாறையின் மீது தேய்ப்பார்கள், அந்த ஆடு இந்தத் தேனை நக்கச் செல்லும், அப்போது அது அந்தப் பாறையிலிருந்து அந்தச் சுண்ணாம்பைப் பெற்றுக்கொள்ளும், அது நோய்வாய்ப்பட்ட ஆட்டைக் குணமாக்கிவிடும். இப்போது, சகோதரனே, என்னிடம் அந்தத் தோல் பை முழுவதும் அது நிறைந்திருக்கிறது. நான் அதை பெந்தெகொஸ்தே சபையிலோ, பாப்டிஸ்ட் சபையிலோ அல்ல, கிறிஸ்து இயேசுவின் மீதே பூசப்போகிறேன்; நோய்வாய்ப்பட்ட ஆடுகளாகிய நீங்கள் அதை நக்கத் தொடங்குங்கள். நான் உங்களுக்குச் சொல்கிறேன்; நீங்கள் அந்தத் தேனை நக்கச் செல்லும்போது, இன்று நான் இந்தப் பிரசங்க மேடையில் நிற்பது எவ்வளவு நிச்சயமோ அவ்வளவு நிச்சயமாக நீங்கள் தெய்வீக சுகத்தைப் பெற்றுக்கொள்வீர்கள். எனவே நீங்கள் குணமாகும் வரை நக்குங்கள், நக்குங்கள், நக்குங்கள், நக்குங்கள். ஆமென். 58 ஓ, உங்களுக்கு என்ன தேவையோ. கிறிஸ்து இயேசுவின் மீது அந்தத் தேனை ஊற்றுங்கள். எவ்வளவு ஆச்சரியம், எவ்வளவு மகிமை, எவ்வளவு வல்லமை, எல்லாம் எவ்வளவு அற்புதம். நீங்கள் அதை நக்கத் தொடங்குங்கள், என்ன நடக்கிறது என்று பாருங்கள். அந்தப் புற்றுநோய் நீங்கியிருப்பதை நீங்கள் காண்பீர்கள். அந்தப் பார்வையற்ற கண்கள் திறக்கப்படுவதை நீங்கள் காண்பீர்கள்; முடமான அந்தக்கால்கள் நடக்கும்; அந்த ஊமை நாவு பேசும், அந்தச் செவிட்டுச் செவி கேட்கும். அல்லேலூயா. ஆமென். ஓ, எவ்வளவு நல்லது. கவனியுங்கள், இன்று நமக்குத் தேவையானது மீண்டும் அது சபைக்குள் திரும்பி வருவதையே. அதை நீங்கள் நம்புகிறீர்களா? சற்று காலத்திற்கு முன்பு என் சகோதரன்... ஓ, பல வருடங்களுக்கு முன்பு. என் சகோதரனும் நானும் ஒரு நாள், நாங்கள் கீழே சென்றோம். நாங்கள் ஒரு-ஒரு பழைய நில ஆமையைப் பார்த்துக்கொண்டிருந்தோம். உங்களுக்குத் தெரியும் அது என்னவென்று, இங்கே பிறந்த உங்களுக்குத் தெரியும்-ஆமை. அவைகள் ஒருவித வேடிக்கையாக நடக்கும், உங்களுக்குத் தெரியும். நான் ஒன்று நடப்பதைப் பார்த்தேன். நான் சொன்னேன், "அந்த வேடிக்கையான விஷயத்தைப் பார்." 59 நாங்கள் அதன் அருகில் சென்றோம், மேலும்-அது என்ன செய்தது என்று உங்களுக்குத் தெரியும். நாங்கள் அதன் அருகில் சென்ற உடனே அது, "ஷ்ஷு" என்று சத்தமிட்டுத் தன் ஓட்டுக்குள் சுருண்டு கொண்டது. அது எனக்குச் சில சபை உறுப்பினர்களை நினைவூட்டுகிறது. அது சரிதான். உண்மையான சுவிசேஷத்துடன் அவர்கள் அருகில் சென்றால், அவர்கள் தங்கள் ஓட்டுக்குள் சுருண்டுகொள்வார்கள், "நான் அந்த விஷயங்களை நம்பவில்லை. அற்புதங்களின் காலம் முடிந்துவிட்டது" என்று சொல்வார்கள், உங்களுக்குத் தெரியும். அடடா. ஆம், ஐயா. நான், "அங்கிருந்து வெளியே வா" என்றேன். அது அதைச் செய்யவில்லை. நீங்கள் அவர்களைத் திட்டி வெளியே வரவழைக்க முடியாது. அதனால் நான் கீழே சென்று, "நான் அதை வெளியே வரவழைக்கிறேன்" என்றேன். நான் ஒரு குச்சியை எடுத்துக்கொண்டு அதை நிஜமாகவே நையப்புடைத்தேன். அது அதற்கு ஒரு துளியும் பலனளிக்கவில்லை. அது அப்படியே அதற்குள்ளேயே இருந்தது. அவர்களை நீங்கள் அடித்தும் அதற்குள் கொண்டுவர முடியாது. அது சரிதான். உங்கள் நிகழ்ச்சிகள், அது எதுவாக இருந்தாலும், உங்களால் அதை ஒருபோதும் செய்ய முடியாது. 60 எனவே நான் சொன்னேன், "நான் அதைச் சரிசெய்கிறேன்." நான் அதை ஆற்றங்கரைக்குக் கொண்டு சென்று தண்ணீருக்குள் அமிழ்த்தினேன். நான் சொன்னேன், "நான் அதை மூழ்கடிப்பேன் அல்லது அது நடக்கும்." நான் அதை உள்ளே அமிழ்த்தினேன், வெறும் இரண்டு அல்லது மூன்று நீர்க்குமிழிகள் மட்டுமே மேலே வந்தன. அது அப்படியே தன் ஓட்டுக்குள் சுருண்டுகொண்டது. நீங்கள் அவர்களுக்கு முன்பக்கமாகவோ, பின்பக்கமாகவோ மூன்று முறை, நான்கு முறை, தலைகீழாகவோ ஞானஸ்நானம் கொடுக்கலாம், அவர்கள் மீது தண்ணீரைத் தெளிக்கலாம், நீங்கள் எதை வேண்டுமானாலும் செய்யலாம். அவர்கள் இன்னமும் ஒரு பாவியாகவே இருக்கிறார்கள். ஆனால், சகோதரனே, நான் ஒரு காகிதத் துண்டை எடுத்துச் சிறிது நெருப்பைப் பற்றவைத்து அதை அதன் மீது வைத்தேன். அப்பா, அது நிஜமாகவே அப்போது வெளியேறியது. அது சரிதான். இன்று நமக்குத் தேவையானது பரிசுத்த ஆவி மற்றும் அக்கினியின் அந்தப் பழைய காலத்து ஊற்றப்படுதலே. வேறு எதுவும் சபையைத் தொடாதபோது அது சபையைச் செயல்பட வைக்கும். அதை நீங்கள் நம்புகிறீர்களா? சபைக்குள் கொஞ்சம் அக்கினியைக் கொண்டுவாருங்கள். பிரச்சனை என்னவென்றால், நாம் அனைத்தையும் சூளையில் போட்டுவிட்டுப் பலிபீடத்திலிருந்து அதை எடுத்துவிட்டோம். ஆமென். ஆம், ஐயா. 61 அந்த நாட்களிலே நான் இப்போது யோவானைக் காண முடிகிறது, அல்லது சகரியாவை. அந்த குழந்தை பிறந்தவுடனே, அவர் முன்னே வந்து என்ன நடக்கும் என்று தீர்க்கதரிசனம் உரைத்துச் சொன்னார். இது எப்பேர்ப்பட்ட பிள்ளையாயிருக்குமோ என்று நாம் அறிவோம். சுற்றியுள்ள எல்லாப் பகுதிகளிலும் உள்ளவர்கள் இது எப்பேர்ப்பட்ட பிள்ளையாயிருக்குமோ என்று ஆச்சரியப் பட்டார்கள். சகரியாவும் தீர்க்கதரிசனம் உரைத்தார். அவனுடைய தாயாரும் அவன் பிறந்தபோது அவ்வாறே தீர்க்கதரிசனம் உரைத்தாள். சுமார் ஒன்பது வயதிலே, அவன் எந்த ஒரு கல்லறைத் தோட்டத்திற்கோ (cemetery) அல்லது வேதாகமப் பள்ளிக்கோ (seminary) செல்லவில்லை. உங்களுக்குத் தெரியுமா, நான் எப்பொழுதும் அங்கே ஒரு தவறு செய்கிறேன், ஏனென்றால் அவைகள் மிகவும் ஒரே மாதிரியாக இருப்பதால் என்னால் அவற்றுக்கு இடையே உள்ள வித்தியாசத்தை அவ்வளவாகச் சொல்ல முடிவதில்லை. ஒரு கல்லறைத் தோட்டமும் மற்றும் ஒரு வேதாகமப் பள்ளியும் இரண்டுமே மரித்துப் போன இடங்கள்தான். சரிதான். 62 சகோதரனே, இன்று நாம் இறையியலை (theology) அறிய வேண்டியதில்லை. நாம் மறுபடியும் பிறப்பதற்கு இன்று நமக்கு முழங்கால்-இயல்தான் (kneeology) தேவை. அதுதான் சரி. சுவிசேஷத்தின் எளிமை... இன்குபேட்டரில் பொரிக்கப்பட்ட கோழிக் குஞ்சை நினைத்து நான் எப்பொழுதும் மிகவும் பரிதாபப்படுவேன். ஒரு சிறிய பழைய இன்குபேட்டர் கோழிக்குஞ்சு முட்டையிலிருந்து வெளிவருகிறது. அது சும்மா கீச், கீச், கீச் என்று கத்துகிறது, ஆனால் அதற்கென்று போவதற்கு ஒரு தாய்க்கோழி இல்லை. எகிப்திய இரவைக் குறித்து ஒரு ஹாட்டன்டாட்டுக்குத் (Hottentot) தெரிந்திருப்பதைவிட, தேவனைப் பற்றி அதிகமாக எதுவும் அறியாத ஒரு வேதாகமப் பள்ளிப் பிரசங்கியை இது என் நினைவுக்குக் கொண்டுவருகிறது, இல்லை, ஆனால் அவர்கள் இறையியலைக் கற்றுக்கொண்டு, ஒரு காகிதத்துண்டிலிருந்து நிறைய வாசிக்கிறார்கள். ஒரு மனிதனுக்கு அவனுடைய ஏபிசி-கூடத் தெரியாவிட்டாலும், அவன் பரிசுத்த ஆவியானவரின் வல்லமையினாலே வேதாக மத்தைப் பிரசங்கிக்க முடியும் என்றால், பத்து வருடங்களாக அவனுடைய தொண்டைக்குள் நீங்கள் திணிக்கக்கூடிய அனைத்து இறையியலையும் விட, அப்படிப்பட்ட ஒரு மனிதனையே நான் விரும்புவேன். அல்லேலூயா. அப்பாடா. நான் எதைக் குறித்து இப்படி உணருகிறேன்? பாருங்கள். ஆமென். ஆம், ஐயா. இன்று நமக்குத் தேவையானது என்ன? சபையிலே ஒரு புதிய சுத்திகரிப்புதான். நீங்கள் அதை விசுவாசிக்கவில்லையா? 63 இது ஏறக்குறைய... இனச்சேர்க்கை காலங்கள் வரும்போது, உங்களுக்குத் தெரிந்த முதல் காரியம், பறவைகள் வெளியே சென்று தங்கள் கூடுகளைக் கட்டுகின்றன. அவைகள் மரத்தின் உச்சியில் ஒரு கூட்டைக் கட்டுகின்றன. அவைகள் தங்கள் முட்டைகளையெல்லாம் இடுகின்றன, அந்தப் பழைய தாய்ப்பறவை அவற்றின் மீது அமர்ந்து, அவற்றுக்கு அடைகாத்து, அவற்றைப் பொரித்து, சென்று விடுகிறது. ஆனால் இப்போது, அந்தத் தாய்ப்பறவை ஆண் பறவையோடு தொடர்பில் இல்லை என்றால்... ஜீவ அணு (germ of life) ஆணின் மூலமாகவே வருகிறது. அதை நாம் அறிவோம். ஒரு கோழி முட்டையிட முடியும், ஆனால் அது ஒரு சேவலோடு சேரவில்லை என்றால், அது ஒருபோதும் பொரிக்காது. அதுதான் சரி. அணு ஆணில் இருந்தே வருகிறது, பறவைகளைப் போலவேதான். நீங்கள் ஒரு பழைய தாய்ப்பறவையை எடுத்துக்கொள்ளலாம், அது ஆண் பறவையோடு சேரவில்லை என்றாலும், அதனால் ஒரு கூட்டைக் கட்டி, பெரிய, உருண்டையான முட்டைகளால் நிரம்பிய ஒரு நல்ல கூட்டைக் கொடுக்க முடியும். மேலும் அது அங்கேயே உட்கார்ந்து, அவற்றின் மீது படர்ந்து, அடைகாத்து, கூட்டிலிருந்து பறக்கக்கூட முடியாத அளவுக்கு மிகவும் மெலிந்து போகலாம், ஆனால் அந்த முட்டைகள் அங்கேயே இருந்து அழுகிப்போகும். அதுதான் சரி. அவைகள் ஒருபோதும் பொரிக்காது, ஏனென்றால் அவைகள் கருவளர்ச்சி அடையாதவை. 64 இன்றைய சபைகளைப் பற்றியும் நான் அதைத்தான் நினைக்கிறேன், சகோதரர்களே, நாம் அவர்களின் முதுகில் தட்டிக்கொடுக்கும் வரை தேவனைப் பற்றி ஒன்றுமே அறியாத ஒரு பெரிய, அதிகப்படியான உதவிக்காரர்கள் (deacons) மற்றும் இன்ன பிறரைக் கொண்டிருக்கிறோம். அவர்கள் அப்படிப் பட்டவர்கள், இப்படிப்பட்டவர்கள் என்பதால், நாம் அவர்களைச் சபையிலும், தலைவர் களுமாகவும் மற்றும் அதுபோல எல்லாவற்றிலும் வைக்கிறோம். ஒரு கூடு நிறைய அழுகிய முட்டைகளை நாம் வைத்திருக்கிறோம். நமக்குத் தேவையானது இயேசு கிறிஸ்துவோடு தொடர்பில் இருக்கும் ஒருவர்தான். கூட்டை வெளியே கொட்டிவிட்டு மீண்டும் தொடங்க வேண்டிய நேரம் இது. அதுதான் சரி. உங்கள் கூட்டை அப்படியே தலைகீழாகக் கவிழ்த்துவிட்டு, படைப்பாளரான இயேசு கிறிஸ்துவோடு தொடர்பில் இருந்த, தேவன் ஜீவிக்கிறார் என்று விசுவாசிக்கிற ஒருவரை அங்கே கொண்டுவாருங்கள். அல்லேலூயா. எப்படியிருந்தாலும் நீங்கள் என்னை ஒரு ஹோலி-ரோலர் (holy-roller) என்றுதான் அழைக்கப் போகிறீர்கள், ஆகையால் நீங்கள் அதை இப்போதே தொடங்கலாம். பார்த்தீர்களா? ஆம், ஐயா. இன்று நான் சொல்வது என்னவென்றால், சபையிலே நமக்கு ஜீவன் தேவை, நித்திய ஜீவன் தேவை. ஆண்களே, பெண்களே, நீங்கள் ஆண்களையும் பெண்களையும் மறுபடியும் பிறக்கச் செய்தால், ஏன், உங்கள் சபையிலே ஒரு குணமாக்கும் கூட்டத்தைக் குறித்துப் பேசுங்கள். அவர்கள், "ஹும், அந்தப் பழைய காரியங்களையெல்லாம் நான் நம்புவதில்லை" என்கிறார்கள். நிச்சயமாக, அவனால் முடியாது. அவன் ஒரு பழைய அழுகிய முட்டை. ஆம், ஐயா. 65 முதலாவது உங்களுக்குத் தெரியுமா, இந்த மக்கள் அங்கே சுற்றிலும் அமர்ந்திருக்கிறார்கள், உறுப்பினர்களில் பெரும் பாலானோர்... நான்-நான் பிரசங்கிக்கிறேன்... கேளுங்கள், சகோதரனே, நான் என்றாவது ஒருநாள் தேவனுக்கு முன்பாகப் பதிலளிக்க வேண்டும். அதுதான் சரி. அதிக நாட்களுக்கு முன்பு அல்ல, பரிசுத்தவான்களாகிய நீங்கள், எப்படி உங்களுடையதை... உங்கள் பெண்களை இங்கே வெளியே கூட்டிக்கொண்டு வந்தீர்கள், அவர்கள் எப்படி உடுத்தியிருப்பார்கள். இதோ அதிக நாட்களுக்கு முன்பு அல்ல, ஒரு நபர். ஒரு மனிதர் எனக்காக ஒரு ட்ரக்கை ஓட்டிக்கொண்டிருந்தார். அவர் சிகரெட் குடிப்பார், அப்போது ஒரு மனிதர் என்னிடம் வந்து சொன்னார், "சரி, பரிசுத்தவான்களாகிய எங்கள் மத்தியில் நீங்கள் அப்படிப் பட்டவர்களை வைத்திருக்கக் கூடாது" என்றார். நான் சொன்னேன், "அந்த மனிதர் ஒரு நல்ல மனிதர். அவர் தன்னை ஒரு கிறிஸ்தவன் என்று உரிமை கோரவில்லை, நான் அவரை அங்கே அந்த ட்ரக்குகளில் ஒன்றை ஓட்ட மட்டுமே அனுமதிக்கிறேன்" என்றேன். அவர் சொன்னார், "சரி, சகோதரனே, நீங்கள் அப்படிச் செய்யக் கூடாது" என்றார். "அந்த மனிதன் சிகரெட் குடிக்கிறான்" என்றார். அதே நாளில்தான், கலிபோர்னியாவில், என் கூட்டத்தில், அவர்கள் ஒருவரைக் கொண்டு வந்தார்கள்... அவர் சொல்கிறார், "எங்களுடைய மாவட்ட மூப்பரை (District Presbyter) நீங்கள் சந்திக்க வேண்டும் என்று விரும்புகிறேன்." நான் சொன்னேன், "எப்படி இருக்கிறீர்கள், ஐயா. உங்களைச் சந்திப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன், சகோதரனே." அவர் சொன்னார், "இதோ என் மனைவி. நீங்கள் சந்திக்க வேண்டும் என்று விரும்புகிறேன்..." 66 சகோதரனே... இப்போது, பெண்களே, இது உங்களைக் காயப்படுத்த அனுமதிக் காதீர்கள். புரிகிறதா? ஆனால் அவள் என்னவென்றே எனக்குத் தெரியாத அளவுக்குச் சாயம் பூசியிருந்தாள், பிசாசு அவளுடைய கழுத்தைச் சேணமாகவும் அவைகளை அங்கவடிகளாகவும் பயன்படுத்திக் கொண்டு அங்கே அமர்ந்திருப்பது போல இரண்டு பெரிய காதணிகள் கீழே தொங்கிக்கொண்டிருந்தன, அவள் அணிந்திருந்த உடைகளுடன் அவள் எல்லாவற்றையும் போலக் காட்சியளித்தாள். நான் கேட்டேன், "அது அந்தப் பிரசங்கியின் மனைவி என்று சொல்கிறீர்களா?" அவர் சொன்னார், "ஆம்." நான் கேட்டேன், "அவள்-அவள் ஒரு பரிசுத்தவாட்டியா (saint)?" அவர் சொன்னார், "ஆம்." நான் சொன்னேன், "அப்படி அங்கே அமர்ந்திருக்கும்போது, அவள் எனக்கு ஒரு பரிசுத்தவாட்டியைப் போலத் தெரியவில்லை, ஒரு பேயைப் போலத்தான் (haint) தெரிகிறாள்." 67 இது ஒரு வெட்கக்கேடு. சகோதரனே, சகோதரியே, நீங்கள் வேலிகளைக் கீழே இறக்கிவிட்டீர்கள். அதுதான் உங்களுக்குச் சரியாகக் கிடைத்திருக்கிறது. சபையில் உங்களுக்குப் பகட்டு வந்துவிட்டது. மனிதர்களைச் சுத்திகரிக்கிற அந்தப் பழைய காலத்துச் சுவிசேஷத்திற்கு நீங்கள் மீண்டும் திரும்பி வர வேண்டும். ஆமென். இதோ உங்களுக்காக ஒரு சிறிய காரியம். நான் உங்களுக்குச் சொல்கிறேன், சகோதரிகளே, பெண்களைப் பற்றி நான் எப்போதுமே என் சொந்தக் கருத்தை வைத்திருக்கிறேன், அது என்னவென்றால்... இன்று நான் தொண்டை மற்றும் நுரையீரல் புற்றுநோய்களில் தொண்ணூற்றெட்டு சதவீதம், மருத்துவ அறிக்கைகளின்படி, சிகரெட் பிடிப்பவர் களிடமிருந்தே வருகிறது என்பதைக் காண்கிறேன், பெண்கள் சிகரெட் குடிக்கிறார்கள். நுரையீரல் புற்றுநோய் மற்றும் தொண்டை புற்றுநோயால் பாதிக்கப்பட்ட ஆண்கள் அதிகமாக இருக்கிறார்கள், ஆனால் இப்போது அது பெண்களுக்கு வரத் தொடங்கியிருக்கிறது, ஏனென்றால் அது வளர்வதற்கு சுமார் இருபது வருடங்கள் ஆகும். 68 மிசௌரியில் உள்ள செயின்ட் லூயிஸில் அவர்கள் ஏழு எலிகளைப் பிடித்து ஒரு கூண்டில் அடைத்து, அவற்றுக்கு ஒரு நாளைக்கு ஏழு சிகரெட் புகையை அளித்தார்கள், அந்த வருடத்தின் முடிவில் ஒவ்வொன்றுக்கும்-அவை ஏழுக்கும் புற்றுநோய் வந்திருந்தது. ஏன், இது ஒரு அவமானம், இன்று சபை உறுப்பினர்களில் தொண்ணூறு சதவீதம் பேர் சிகரெட் குடிக்கிறார்கள். அதுதான் சரி. இது ஒரு அவமானம். ஆம், ஐயா. பெண்களே, உங்கள் மடியில்-உதடுகளில் நீங்கள் பூசிக்கொள்ளும் ஒவ்வொரு மெனிகியூருக்காகவும் (manicure) அமெரிக்காவில் பெண்கள் ஒவ்வொரு வருடமும் எத்தனை நூற்றுக்கணக்கான பில்லியன் டாலர்களைச் செலவிடுகிறார்கள் என்பதை நீங்கள் மட்டுமே உணர்ந்திருந்தால். அந்தப் பொருட்கள் என்னவென்று எனக்குத் தெரியாது. எப்படியிருந்தாலும், அவர்கள் தங்கள் முகத்தில் பூசிக்கொள்ளும் அந்தப் பொருட்களையும் அப்படிப்பட்ட அலங்காரங்களையும் (makeup) வைத்து இந்த மக்கள் எத்தனை மில்லியன் டாலர்களைச் சம்பாதிக்கிறார்கள்... அதேவேளையில் ஏழைச் சிறு குழந்தைகள் அங்கேயும், மிஷனரிகள் செல்ல முடியாத காரணத்தால் முடங்கிய நிலையில் இங்கேயும் அமர்ந்திருக்கிறார்கள். அவர்கள் தொடர்ந்து செல்வதற்குப் போதுமான பணம் அவர்களிடம் இல்லை. நியாயத்தீர்ப்பு நாளிலே தேவன் உங்களை இதற்குப் பதிலளிக்கச் செய்வார். அதுதான் சரி. இதுதான் சத்தியம். 69 ஆம், கிறிஸ்தவர்களே, உங்களைக் கிறிஸ்தவர்கள் என்று அழைத்துக்கொண்டு, எல்லாம் செப்பனிடப்பட்டு, மேக்கப் போட்டுக்கொண்டு வருகிறீர்கள். வேதாகமத்தில் தன் முகத்தில் சாயம் பூசிய ஒரே ஒரு பெண்தான் இருந்தாள், அவள் யேசபேல். தேவன் அவளுக்கு என்ன செய்தார் தெரியுமா? அவர் அவளை நாய்களுக்கு இரையாக்கினார். அதுதான் சரி. ஒரு பெண் அப்படி நடந்துகொண்டு, தன்னை ஒரு கிறிஸ்தவள் என்று அழைப்பதை நீங்கள் பார்க்கும்போது, "எப்படி இருக்கிறீர்கள், நாய் மாமிசம் (dog meat) அம்மையாரே?" என்று சொல்லுங்கள். அவள் அதுவாகத்தான் இருக்கிறாள்: நாய் மாமிசம். தேவன் அவளை நாய்களுக்குக் கொடுத்தார். ஆம், ஐயா. ஓ, ஆண்களையும் பெண்களையும் மீண்டும் ஜீவனுள்ள தேவனிடத்திற்குக் கொண்டு வருவதற்கு, மக்களுக்குள்ளே பழைய காலத்துப் பரிசுத்த ஆவியின் ஒரு நல்ல அசைவாடுதல்தான் இன்று நமக்குத் தேவை. என்ன பிரச்சனை? உலகம் மரித்துப்போய்விட்டது. அங்கே நாம் செல்கிறோம். இந்த மனிதனான யோவான் பிறந்தபோது, அவன் யூதேயாவின் வனாந்தரத்திலிருந்து வெளியே வந்தபோது, அவன் ஒரு டக்ஸீடோ (tuxedo) சூட் அணிந்திருக்கவில்லை, காலரைத் திருப்பிப் பின்புறம் போட்டுக்கொண்டு, ஒரு நாளைக்கு மூன்று முறை வறுத்த கோழிக்கறியும் ஐஸ்கிரீமும் சாப்பிடவில்லை என்பதை என்னால் பார்க்க முடிகிறது, ஆனால் அவனிடம் வெட்டுக்கிளிகளும் காட்டுத்தேனும் இருந்தது; அவன் ஒரு பெரிய பழைய செம்மறியாட்டுத் தோலைத் தன்னைச் சுற்றிலும் போர்த்தியிருந்தான், ஒரு ஒட்டகத் தோல் கச்சையை அவன் தன்மீது கட்டியிருந்தான். 70 ஓ, என்ன ஒரு பிரசங்கி, அவனுடைய முகத்தைச் சுற்றிலும் முடி அப்படிப் புடைத்துக்கொண்டிருந்தது, ஆனால் சகோதரனே, அவனுக்கு எந்த இறையியலும் தெரிந்திருக்கவில்லை மற்றும் இந்த வேதாகமப் பள்ளியின் அனுபவம் எதுவும் அவனுக்குத் தெரிந்திருக்கவில்லை. தேவன் அவனை வெளியே அனுப்பும் வரை அவன் தேவனுடைய வல்லமையின் கீழ் வனாந்தரத்திலேயே தங்கியிருந்தான். அல்லேலூயா. தேவனால் அனுப்பப்பட்ட மனிதர்களான இன்னும் சிலரைத் தேவன் நமக்குத் தருவாராக. அவன் அங்கிருந்து வெளியே நடந்து வந்தபோது, சகோதரனே, அவன் பார்ப்பதற்கு அவ்வளவு சரளமாகத் தோன்றவில்லை. அவனுடைய பேச்சு அவ்வளவு சரளமாக இல்லை, மாறாக, ஆனால் அவன் என்ன செய்தான் என்பதை நான் உங்களுக்குச் சொல்கிறேன். யூதேயா மற்றும் எருசலேமைச் சுற்றியுள்ள எல்லாப் பகுதிகளையும் அசைவாட்டின பிரசங்கங்களை அவன் பிரசங்கித்தான். எல்லாமே அவனைக் கேட்பதற்காக வெளியே வந்தது. ஏன்? அவன் கிறிஸ்துவைப் பிரசங்கித்தான் (அல்லேலூயா.), இறையியலை அல்ல, ஆனால் கிறிஸ்துவை. இன்றைய உலகத்திற்கு என்ன ஆயிற்று; பரிசுத்த ஆவியானவரின் இடத்தை எடுத்துக்கொள்வதற்காக நம்முடைய விசுவாசப் பிரமாணங்களையும் (creeds) காரியங்களையும் நாம் மாற்றாக வைத்திருக்கிறோம். விசுவாசப் பிரமாணங்கள் ஒருபோதும் சபையை முன்னே தள்ளாது. பரிசுத்த ஆவியானவர்தான் சபையை நடத்துகிறார். ஆமென். சகோதரனே, அதுதான் பழைய காலத்துச் சஸ்ஸஃப்ராஸ் (sassafras) சுவிசேஷம், ஆனால் அது என்னை இரட்சித்தது, அது உங்களுக்கும் அதே காரியத்தைச் செய்யும். அது சத்தியம். அது கடினமானது. அது கடினமானது என்று எனக்குத் தெரியும், ஆனால் சகோதரனே, சில சமயங்களில் நீங்கள் மீண்டும் உருவாக்கப் படுவதற்கு முன்பாக உடைக்கப்பட வேண்டியிருக்கிறது. இதுதான் சத்தியம். 71 யோவான் அங்கே வெளியே நின்று பிரசங்கிப்பதை என்னால் பார்க்க முடிகிறது, ஆனால் அவன் யோர்தானைச் சுற்றியுள்ள எல்லாப் பகுதிகளையும் அசைவாட்டினான். இதோ இயேசு கீழே வருகிறார்: அவனால் ஞானஸ்நானம் பெற்றார். அவர் ஜலத்திலிருந்து கரையேறினவுடனே வானங்கள் திறக்கப்பட்டு, "இவர் என்னுடைய நேசகுமாரன், இவரில் பிரியமாயிருக்கிறேன்" என்று உரைத்தது. இயேசு புறப்பட்டுச் சென்றார்... இப்போது, இது நம்முடைய வேதப்பகுதிக்கு, நம்முடைய இடத்திற்கு விரைவாக வருகிறது. கவனமாகக் கேளுங்கள். அதன் பிறகு அவருடைய ஊழியம் தொடங்கியது. அவர் பெத்தானியாவில் மார்த்தாள் மற்றும் மரியாள் மற்றும் அவர்களோடு வசிப்பதற்காகச் சென்றார். இப்போது, அவர் வெளியே அழைக்கப்பட்டார். 72 இயேசு அந்த வீட்டை விட்டுச் சென்றபோது, வியாதியும் துக்கமும் உள்ளே வந்தது, இயேசு உங்கள் வீட்டை விட்டுப் போகும்போது, வியாதியும் துக்கமும் உள்ளே வரும். ஆம், ஐயா. கவனியுங்கள். உங்கள் வீட்டில் நீங்கள் இயேசுவைப் புறக்கணித்துவிட்டு, குடும்ப ஜெபம் செய்வதை நிறுத்திவிட்டு, வேதம் வாசிப்பதை நிறுத்திவிட்டு, அதுபோல உங்கள் வீடுகளில் செய்வதை நிறுத்தினால், பிரச்சனை உள்ளே வருவதை எதிர்பாருங்கள். அதுதான் சரி. அது அப்பொழுதே தன் வழியில்தான் வந்துகொண்டிருக்கிறது. இயேசு போய்விட்டார், இந்த விஷயத்தில் இல்லை; அவர் துரத்தியடிக்கப்படவில்லை. அவர்களுடைய ஒழுக்கக்கேடுகள் அவரைத் துரத்தியடிக்கவில்லை, ஆனால் பிதா அவருக்கு ஒரு தரிசனத்தைக் காட்டியிருந்ததால் அவர் விலகிச் சென்றார். அவர் போய்விட்டார். லாசரு வியாதிப்பட்டபோது அவரை வந்து ஜெபிக்கும்படி ஆள் அனுப்பினார்கள். அவர் தன் வழியே சென்றார். ஓ, என் தேவனே. உங்கள் போதகர் அப்படிச் செய்தால் இன்று என்ன நடக்கும்? 73 சரி, அவர் போய்விட்டார். முதல் காரியம், அவர்கள் மறுபடியும் அனுப்பினார்கள்: லாசரு மரணத் தருவாயில் இருந்தான். அவர் அவர்களைப் பொருட்படுத்தாமல், தன் வழியே சென்றார். அது உங்கள் போதகருக்கு நடந்திருந்தால், ஏன், நீங்கள் சொல்வீர்கள், "அந்த மாய்மாலக்காரன். நான் அசெம்ப்ளிஸ் ஆஃப் காட் (Assemblies of God) சபைக்குப் போகப் போகிறேன். அவனிடம் நான் முட்டாளாக இருக்கமாட்டேன்" என்று. அசெம்ப்ளிஸ் ஆஃப் காட் உங்களுக்கு அப்படிச் செய்திருந்தால், "நான் மெத்தடிஸ்டுகளிடமோ, அல்லது பாப்டிஸ்டுகளிடமோ செல்லப் போகிறேன்" என்பீர்கள். அப்படித்தான் நடக்கிறது: நீங்கள் அந்தக் காகிதத்தை ஒரு சபையிலிருந்து மற்றொரு சபைக்கும், ஒரு சபையிலிருந்து மற்றொரு சபைக்கும், அது தேய்ந்துபோய் மஞ்சள் நிறமாக மாறும் வரை எடுத்துக்கொண்டு அலைகிறீர்கள். ஆட்டுக்குட்டியானவரின் ஜீவபுஸ்தகத்தில் உங்கள் பெயரை எழுதச் செய்துவிட்டு நிலையாக இருங்கள். ஆமென். 74 எப்படியிருந்தாலும் உங்கள் சபை கடிதங்களால் எந்தப் பயனும் இல்லை. அது உங்களுக்கு ஒரு துளி நன்மையும் செய்யாது. தேவன் ஒருபோதும் அவைகளில் ஒன்றைக்கூட அங்கீகரிக்க மாட்டார். அங்கே மேலே அவருடைய சொந்தக் குமாரனின் இரத்தத்தினாலே அவருடைய புஸ்தகத்தில் எவர்களுடைய பெயர் எழுதப்பட்டிருக்கிறதோ அவர்களை மட்டும்தான் தேவன் அங்கீகரிப்பார். இங்கே அவர்கள் சென்றிருந்தார்கள். இப்போது, நினைவில் கொள்ளுங்கள், லாசரு மரித்துப்போனான், அந்த வீடு கண்டிராத மிக இருண்ட நேரமாக அது இருந்தது. இப்போது, இயேசுவைப் பின்பற்றுவதற்காக அவர்கள் தங்கள் சபையை விட்டுவிட்டு, ஜெப ஆலயத்திலிருந்து வெளியேற்றப்பட்டிருந்தார்கள். அவர் அவர்களை ஏமாற்றிவிட்டார். இப்போது, வாழ்க்கையும் சில சமயங்களில் அப்படியாகத்தானே மாறிவிடுகிறது? உலகத்தில் எல்லாமே நடந்துவிட்டது போலத் தோன்றும். ஆனால் வேதாகமம் சொல்கிறது என்பதை நினைவில் கொள்ளுங்கள், "தேவனிடத்தில் அன்புகூருகிறவர்களுக்குச் சகலமும் நன்மைக் கேதுவாக நடக்கிறது." அது நன்மைக்காகவே இருக்க வேண்டும். இவையெல்லாம் நடந்த பிறகு உங்களுக்குத் தெரிந்த முதல் காரியம், பிறகு இயேசு... அவர் கேள்விப்பட்டார்... அவர் சொன்னார், "லாசரு மரித்துப்போனான். லாசரு நித்திரைய டைந்திருக்கிறான்," என்று முதலில் சொன்னார். சீஷர்கள் சொன்னார்கள், "ஓ, சரி, அவன் நித்திரையடைந்திருந்தால், அவனுக்குச் சுகமுண்டாகும்." 75 அவர் சொன்னார், அவர் அவர்களுடைய சொந்த வார்த்தைகளிலேயே அவர்களிடம் சொன்னார். புரிகிறதா? "லாசரு மரித்துப்போனான், நான் அங்கே இராததினால் நீங்கள் விசுவாசிப்பதற்கு ஏதுவாகுமென்று உங்கள்நிமித்தம் சந்தோஷப்படுகிறேன், ஆனாலும் அவனை எழுப்பப் போகிறேன்." இதோ அவர் கீழே செல்கிறார். என்ன செய்ய வேண்டும் என்று பிதா ஏற்கனவே அவருக்குக் காட்டியிருப்பதை நான் காண்கிறேன். அதனால்தான் அவர் அந்த மூன்று நாட்களும் அங்கேயே தங்கியிருந்தார். இந்த நேரம் முடிந்தவுடன் என்ன நடக்கப் போகிறது என்பதற்கு அதுதான் காரணம். இதோ அவர் உள்ளே செல்கிறார். இப்போது, பாருங்கள். மார்த்தாளுக்கும் மரியாளுக்கும் அவரைக் கடிந்துகொள்ள உரிமை இருந்தது போலத் தோன்றுகிறது, நாம் இப்போது இங்கே சொல்வதுபோல, "அவரைத் திட்டுங்கள்." "நீங்கள் ஏன் வரவில்லை?" ஆனால் மார்த்தாள் பல காரியங்களில் தாமதம் காட்டினாலும், இயேசு வருகிறார் என்று அவள் கேள்விப்பட்டவுடனே, அவள் அவரைச் சந்திக்கச் சென்றாள். அந்தப் பழைய பரிசேயர்கள் அங்கு மூலையில் நின்றுகொண்டு, "ஹா. ஹா. இப்போது, அந்த ஹோலி-ரோலர் எங்கே போனான், அந்த தெய்வீக சுகமளிப்பவர்? இதோ அவனுடைய தோழன் வியாதிப்பட்டுக் கிடக்கிறான். அவன் இப்போது இறந்துவிட்டான். அவன் ஏன் வரவில்லை? ம்ஹும், எப்படியும் அதெல்லாம் வெறும் மனதின் எண்ணங்களைப் பரிமாறிக்கொள்ளும் வித்தை (mental telepathy) என்று நான் உங்களிடம் சொன்னேனே, அதில் ஒன்றுமே இல்லை என்று சொன்னேனே" என்று சொல்வதை என்னால் கேட்க முடிகிறது. அவர்கள் அங்கே மூலையில் நின்றுகொண்டிருக்கிறார்கள். இதோ சிறிய மார்த்தாள் வருகிறாள். "அதோ-அதோ-அதோ இப்போது அவர்களில் ஒருத்தி வருகிறாள். அவளை நாம் ஜெப ஆலயத்திலிருந்து வெளியே துரத்திவிட்டோம். நீ திரும்பி வருவாய் என்று நினைக்கிறாயா" என்று சொல்கிறார்கள். 76 "உங்கள் பழைய ஜெப ஆலயத்துடனே நீங்கள் போய்த்தொலையுங்கள்." அவள் இயேசுவைச் சந்திப்பதற்காகத் தன் வழியை உருவாக்கிக்கொண்டிருந்தாள். அவளிடம் அவருக்குக் காண்பிப்பதற்கு ஏதோ ஒன்று இருந்தது. அந்தச் சூனேமியாள் ஸ்திரீ கலக்கத்துடன் வந்து, அவள் தீர்க்கதரிசியை-அழைத்துக்கொண்டு வரச் சென்ற வேதாகமத்தின் கதையை மார்த்தாள் படித்திருப்பாள் என்று நான் நம்புகிறேன். அந்தச் சூனேமியாள் ஸ்திரீ அந்த மரித்துப்போன குழந்தைக்காக, தேவன் தம்முடைய தீர்க்கதரிசியின் மூலம் இருக்கிறார் என்று விசுவாசித்தாள். அவள் சொன்னாள், "தேவன் தம்முடைய தீர்க்கதரிசியின் மூலம் இருக்கிறார் என்றால், நிச்சயமாக தேவன் தம்முடைய குமாரனுக்குள்ளும் இருக்கிறார்." அதுதான் சரி. ஆகையால் அவள் சொன்னாள், "இப்போது, சூனேமியாள் ஸ்திரீ சொன்னாள், 'சுகந்தான். நான் தீர்க்கதரிசியிடம் செல்ல என்னை விடுங்கள், அவள் புரிந்துகொள்வாள்.'" சூனேமியாள் ஸ்திரீயைக்குறித்து அந்த காரியம் எனக்குப் பிடிக்கும். அவள் சொன்னாள்-அவள் சொன்னாள், "நீ ஓட்டு; நான் உனக்குச் சொன்னாலொழிய எனக்காக ஓட்டத்தை நிறுத்தாதே." எனக்கு அது பிடிக்கும். "முன்னேறிச் செல்." ஆம், ஐயா. அவள் தீர்க்கதரிசியிடம் சென்றபோது, தீர்க்கதரிசி சொன்னார், "இதோ அந்தச் சூனேமியாள் வருகிறாள்," என்றும், "அவள் ஆத்துமா வியாகுலமாயிருக்கிறது; கர்த்தர் அதை எனக்கு அறிவியாமல் மறைத்து வைத்தார்" என்றும் சொன்னார். அவர் கேட்டார், "உனக்குச் சுகமா? உன் புருஷனுக்குச் சுகமா? பிள்ளைக்குச் சுகமா?" ஓ, நான் இதை நேசிக்கிறேன். 77 அவள், "சுகந்தான்" என்றாள். ஆமென். ஓ, நான் நன்றாக உணருகிறேன். ஒரு சேனைக்குள் பாய்ந்து செல்வேன், ஒரு மதிலைத் தாண்டுவேன். பாருங்கள். அவள், "சுகந்தான்" என்று சொன்னாள். ஏன்? அவளுடைய குழந்தை அங்கே பிணமாகக் கிடக்கிறது, அவளுடைய கணவன் அலறுகிறான், வீட்டின் முன்பு பைத்தியம் பிடித்தவன்போல முன்னும் பின்னும் அலைகிறான், அண்டைவீட்டார் எல்லாரும்... "சுகந்தான்." ஆமென். எனக்கு அது பிடிக்கும். அவளுக்கு என்ன ஆயிற்று? அவள் தேவனுடைய பிரதிநிதியான அந்தத் தீர்க்கதரிசியாகிய எலியாவிடத்திற்கு வந்திருந்தாள். அவள் அவரிடம் வந்தாள். அவள் சொன்னாள், "சுகந்தான்." "உனக்குச் சுகமா?" "ஆம்." "உன் புருஷனுக்குச் சுகமா?" "ஆம்." "உன் பிள்ளைக்குச் சுகமா?" "சுகந்தான்." பின்னர் அவள் ஓடிவந்து அவருடைய பாதங்களில் விழுந்து என்னவென்று வெளிப்படுத்தத் தொடங்கினாள்... அவர் சொன்னார், "இப்போது, நான் என்ன செய்வது என்று எனக்குத் தெரியவில்லை." எலியா சொன்னார், அல்லது கேயாசியிடம் கோலை எடுத்துக்கொண்டு செல்லும்படிச் சொன்னார், ஆனால் எலியா அங்கே சென்று அந்தக் குழந்தையை எழுப்பி அதைத் திருப்பிக் கொடுத்தார். 78 இப்போது, மார்த்தாள் அனேகமாக அந்தக் கதையைப் படித்திருக்கலாம். ஆகையால், இந்தப் பெண் பூமியிலே தேவனுடைய பிரதிநிதியிடம் செல்ல முடியும் வரை எல்லாம் சுகமே. இப்போது, அவள் நினைத்தாள், "சூனேமியாள் ஸ்திரீயால் ஒரு தீர்க்கதரிசியிடத்தில் அப்படிச் செய்ய முடியும் என்றால், தேவனுடைய குமாரனிடத்தில் வந்தால் அவள் இன்னும் எவ்வளவு அதிகமாகப் பெறுவாள்?" இப்போது, அவள் வரும்போது கவனியுங்கள். இப்போது, அவரைக் கடிந்துகொண்டு, "நீர் ஏன் வரவில்லை? நாங்கள் உம்முடைய சபையை விட்டுச் செல்லப் போகிறோம்" என்று சொல்வதற்குப் பதிலாக, இல்லை. இல்லை. அவர் எங்கே இருந்தாரோ-அவள்-அவர் எங்கே இருந்தாரோ அங்கேயே அவள் அவரிடம் நேராக ஓடிச் சென்று-அவள் அவருடைய பாதங்களில் விழுந்தாள். மேலும் அவள் சொன்னாள், "ஆண்டவரே." அவராகத்தான் அவர் இருந்தார். அவர் என்னவாக இருந்தாரோ அந்தச் சரியான பட்டத்தை அவள் அவருக்குக் கொடுத்தாள். அவள் சொன்னாள், "ஆண்டவரே, நீர் இங்கேயிருந்தீரானால் என் சகோதரன் மரித்திருக்கமாட்டான்." என்ன ஒரு பாராட்டு. "ஆண்டவரே. நீர் இங்கேயிருந்தீரானால் என் சகோதரன் மரித்திருக்கமாட்டான்." இப்போது, கவனியுங்கள். "இப்பொழுதும், ஆண்டவரே." அவன் மரித்து நான்கு நாட்கள் ஆகியிருந்தன. "இப்பொழுதும், ஆண்டவரே, நீர் தேவனிடத்தில் கேட்டுக்கொள்வதெதுவோ அதை தேவன் உமக்குத் தந்தருளுவார்." எனக்கு அது பிடிக்கும், உங்களுக்குப் பிடிக்கவில்லையா? அவன் மரித்து நான்கு நாட்கள் ஆகிவிட்டன, "இப்பொழுதும், ஆண்டவரே, நீர் தேவனிடத்தில் கேட்டுக்கொள்வதெதுவோ." 79 மகனே, நீண்ட காலமாக நீ அப்படிப் பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டுள்ளாய், "இப்பொழுதும், ஆண்டவரே." உங்களில் அநேகர் புற்றுநோயோடு, இருதய நோயோடு இங்கே அமர்ந்திருக்கிறீர்கள், "இப்பொழுதும், ஆண்டவரே." மருத்துவர் சொல்கிறார், "நீங்கள் குணமடைய முடியாது." "இப்பொழுதும், ஆண்டவரே, நீர் தேவனிடத்தில் கேட்டுக்கொள்வதெதுவோ." பரிந்துபேசுவதற்காக அவர் பிதாவின் வலதுபாரிசத்தில் வீற்றிருக்கிறார் (அதை விசுவாசிக்கிறீர்களா?). "இப்பொழுதும், ஆண்டவரே, நீர் கேட்டுக்கொள்வதெதுவோ, தேவனே, நான் அதைச் செய்வேன்." நீர் தேவனிடத்தில் கேட்டுக்கொள்வதெதுவோ, அதை தேவன் இப்பொழுதும் செய்வார். நீங்கள் சொல்கிறீர்கள், "சகோதரர் பிரன்ஹாம், நான் ஜெப வரிசையில் வருவதற்கு முயன்றேன். நான் ஜெப அட்டைகளைப் பெறுவதற்கு முயன்றேன். நான் எனக்காக ஜெபிக்கப்பட முயன்றேன். நான் முடவனாக இருந்தேன். இவ்வளவு நாட்களாக என்னால் நடக்க முடியவில்லை." ஆனால் இப்பொழுதும், ஆண்டவரே, நீர் தேவனிடத்தில் கேட்டுக்கொள்வதெதுவோ அதை தேவன் உமக்குத் தந்தருளுவார். ஆமென். அல்லேலூயா. 80 "இப்பொழுதும், ஆண்டவரே." வீல்சேரில் அங்கே அமர்ந்திருக்கும் சிறிய அம்மையார், பல ஆண்டுகளாக அப்படிப் பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டுள்ளார், "இப்பொ ழுதும், ஆண்டவரே, நீர் தேவனிடத்தில் கேட்டுக்கொள்வதெதுவோ அதை தேவன் உமக்குத் தந்தருளுவார்." மேலும் அவர் பிதாவின் வலதுபாரிசத்தில் உங்களுக்காகப் பரிந்துபேசிக்கொண்டு வீற்றிருக்கிறார். "நீர் தேவனிடத்தில் கேட்டுக்கொள்வதெதுவோ அதை தேவன் உமக்குத் தந்தருளுவார்." ஓ, நான் அதை நேசிக்கிறேன். இப்போது, கவனியுங்கள். பழைய தீர்க்கதரிசனச் சக்கரங்கள் இப்போது ஒன்றாக நகர்கின்றன. என்ன? அங்கே கலக்கத்தில் அந்தப் பெண் இருக்கிறாள். அவளுடைய சகோதரன் மரித்துப்போனான். அவனுக்கு ஜீவனைத் தரக்கூடிய ஒரே ஆதாரத்திடம் அவள் வருகிறாள். இப்போது, அவள் நிபந்தனைகளை நிறைவேற்றுகிறாள். அவள் சொன்னாள், "ஆண்டவரே (அவர் அப்படித்தான் இருக்கிறார்.), நீர் தேவனிடத்தில் கேட்டுக் கொள்வதெதுவோ அதை தேவன் உமக்குத் தந்தருளுவார் என்று அறிந்திருக்கிறேன்." நான் உங்களுக்குச் சொல்கிறேன்: ஏதோ ஒன்று இப்போது ஒன்றாகச் சேரத் தொடங்குகிறது. ஏதோ நடக்கப் போகிறது. அவர் சொன்னார், "உன் சகோதரன் உயிர்த்தெழுந்திருப்பான்." அவள் சொன்னாள், "ஆம், ஆண்டவரே, அவன் உயிர்த்தெழுந்திருப்பான் என்று அறிந்திருக்கிறேன்." யூதர்கள் பொதுவான உயிர்த்தெழுதலை விசுவாசித்தார்கள். அவள் சொன்னாள், "ஆண்டவரே, உயிர்த்தெழுதல் நடக்கும் கடைசிநாளிலே அவனும் உயிர்த்தெழுந்திருப்பான் என்று அறிந்தி ருக்கிறேன். அவன் ஒரு நல்ல பையன், உயிர்த்தெழுதல் நடக்கும் கடைசிநாளிலே அவனும் உயிர்த்தெழுந்திருப்பான் என்று அறிந்திருக்கிறேன்." 81 அவரைக் கவனியுங்கள். வேதம் சொல்லுகிறது, "நாம் அவரை விரும்பத்தக்க ரூபம் அவருக்கு இல்லாதிருந்தது." இயேசு ஒரு சிறிய, மெலிந்த நபராக இருந்தார். அவர் ஒரு பெரிய, கம்பீரமான ஆசாரியனைப் போன்ற தோற்றம் கொண்டவர் அல்ல, மாறாக அவர் ஒரு சிறிய மெலிந்த நபர், அவர் தமது சிறிய தேகத்தை நிமிர்த்தினார். அவர் சொன்னார், "நானே உயிர்த்தெழுதலும் ஜீவனுமாயி ருக்கிறேன்." அல்லேலூயா. "என்னை விசுவாசிக்கிறவன் மரித்தாலும் பிழைப்பான். இதை விசுவாசிக்கிறாயா?" கவனியுங்கள். எல்லாம் சரியாகவே நகர்ந்து கொண்டிருக்கிறது. சரி. அவள் சொன்னாள், "ஆம் ஆண்டவரே, நீர் யாரென்று சொன்னீரோ அதை நான் விசுவாசிக்கிறேன். நீர் உலகத்தில் வருகிறவரான தேவகுமாரன் என்று நான் விசுவாசிக்கிறேன்." 82 ஏதோ நடக்கப்போகிறது. ஏதோ நடக்கப்போகிறது. அங்கு அவள் அங்கீகரித்துக் கொண்டிருந்தாள், அவருடைய தெய்வத்துவத்தை அங்கீகரித்தாள், அவருடைய அதிகாரத்தை அங்கீகரித்தாள், சர்வவல்லமையுள்ள தேவ னுக்கும் அவருக்கும் இருந்த உறவை அங்கீகரித்தாள், தேவனுக்கு முன்பாக அவருடைய வல்லமையை அங்கீகரித்தாள். அவள் சொன்னாள், "நீர் தேவனிடத்தில் கேட்டுக்கொள்ளுவதெதுவோ அதை தேவன் உமக்குத் தந்தருளுவார், மேலும் நீர் யாரென்று சொன்னீரோ அப்படியே நீர் இருக்கிறீர் என்று நான் விசுவாசிக்கிறேன்." ஓ, ஆச்சரியம். இப்போது ஏதோ நடக்கப்போகிறது. கயிறுகள் ஒன்றாக இணைந்து, சுற்றிக்கொள்ள ஆரம்பிக்கின்றன. அவர், "அவனை எங்கே வைத்தீர்கள்?" என்று கேட்டார். அவள், "வந்துபாரும்" என்றாள். அவர்கள் புறப்பட்டுச் சென்றார்கள். 83 சமீபத்தில்... உங்கள் மார்க்கமான கிறிஸ்தவ அறிவியலைப் பற்றி நான் எதுவும் தவறாகச் சொல்லவில்லை. ஆனால் ஒரு கிறிஸ்தவ அறிவியல் மார்க்கத்தைச் சேர்ந்த பெண்மணி என்னிடம் சொன்னார், "போதகர் பிரன்ஹாம், நீங்கள் இயேசு கிறிஸ்துவின் தெய்வத்துவத்திற்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கிறீர்கள்" என்றார். நான் கேட்டேன், "நீங்கள் எப்படி..." அவர் சொன்னார், "நீங்கள் அவரைப் பற்றி அதிகமாகப் பெருமை பேசுகிறீர்கள்." மேலும், "நீங்கள்... நீங்களே தேவன்; நீங்களே தேவன்; ஒவ்வொருவரும் தங்களுக்குள்ளேயே ஒரு தேவன்" என்றார். நான் சொன்னேன், "ஓ, இல்லை. இல்லை, இல்லை." நான் சொன்னேன், "அவர்..." அவள் சொன்னாள், "அவர் ஒரு சாதாரண மனுஷனை விட வேறொன்றுமில்லை." நான் சொன்னேன், "அவரே தேவன்." 84 அவள் சொன்னாள், "ஏன், அவர் அப்படி இருந்திருக்க முடியாது." அவள், "அவர் ஒரு சாதாரண மனுஷரை விட வேறொன்றுமில்லை என்பதை வேதவசனத்தின் மூலம் நான் உங்களுக்கு நிரூபித்தால், நீங்கள் அதை ஏற்றுக்கொள்வீர்களா?" என்று கேட்டாள். நான் சொன்னேன், "ஆம், அம்மா, அவர் வெறும் மனுஷர் என்று வேதம் சொல்லியிருந்தால், வேதம் சொல்வதை நான் விசுவாசிப்பேன், ஆனால் முதலில் நீங்கள் எதை நோக்கிச் செல்கிறீர்கள் என்பதை நான் தெரிந்துகொள்ள விரும்புகிறேன்." அவள் சொன்னாள், "சரி, இப்போது நான் அதை உங்களுக்கு நிரூபிக்கிறேன்." அவள் இதே வேதப்பகுதியைப் பயன்படுத்தினாள். அவள் சொன்னாள், "இயேசு லாசருவின் கல்லறைக்குச் சென்று கொண்டிருந்தபோது, இயேசு கண்ணீர் விட்டார் என்று வேதம் கூறுகிறது." அவள், "அவர் ஒரு மனுஷனைப் போலக் கண்ணீர் விட்டார் என்பது அவர் மரிக்கக்கூடிய ஒரு மனுஷன் என்பதைக் காட்டுகிறது" என்றாள். 85 நான் சொன்னேன், "அது உண்மைதான் அம்மா. அவர் கண்ணீர் விடும்போது ஒரு மனுஷனாக இருந்தார். அவர் கல்லறைக்குச் சென்றபோது துக்கத்திலிருந்த மற்றவர்களோடு சேர்ந்து அவரும் துக்கப்பட்டார். அவர்கள் சந்தோஷமாக இருந்தபோது மற்றவர்களோடு சேர்ந்து அவரும் சந்தோஷப்பட்டார்," ஆனால் நான் சொன்னேன், "அவர் ஒரு மனுஷனை விட மேலானவராக இருந்தார்." நான் சொன்னேன், "அவர் லாசருவின் கல்லறைக்குச் சென்றபோது, ஒரு மனுஷனைப் போலக் கண்ணீர் விட்டுக் கொண்டிருந்தார், ஆனால் அவர் அங்கே நின்று தமது சிறிய தேகத்தை ஒன்றுசேர்த்து, 'லாசருவே, வெளியே வா' என்று சொன்னபோது. நான்கு நாட்களாக மரித்திருந்த ஒரு மனிதனின் ஆத்துமா எங்கேயோ நான்கு நாள் பயணம் செய்திருந்தது, அழிவு அதன் எஜமானரை அறிந்துகொண்டது. நான்கு நாட்களாகப் பிரிந்து சென்ற அவனது ஆத்துமா... எங்கே சென்றது என்று எனக்கும் தெரியாது; உங்களுக்கும் தெரியாது, எனவே அதைப் பற்றி நாம் வாதிடப் போவதில்லை, ஆனால் அந்த ஆத்துமா மீண்டும் உடலுக்குத் திரும்பி, நான்கு நாட்கள் மரித்திருந்த ஒரு மனிதன் தன் கால்களில் நின்று மீண்டும் உயிரோடு வாழ்ந்தான். சகோதரனே, அப்பொழுது பேசினது ஒரு மனுஷனை விட மேலானவர். அது தமது மனுஷருக்குள் இருந்து பேசிய தேவன்." நீங்கள் அதை விசுவாசிக்கிறீர்களா? ஆம், ஐயா. 86 அன்று இரவு மிகவும் பசியோடு அவர் மலையிலிருந்து இறங்கி வந்தபோது அவர் ஒரு மனுஷனாக இருந்தார். சாப்பிட ஏதேனும் கிடைக்குமா என்று தேடி, மரத்தைச் சுற்றிலும் பார்த்து, சாப்பிட ஏதேனும் கண்டுபிடிக்க முயன்றார். அவர் பசியாயிருந்தபோது அவர் ஒரு மனுஷனாக இருந்தார். அது சரிதான், ஆனால் அவர் ஐந்து ரொட்டிகளையும், இரண்டு சிறிய மீன்களையும் எடுத்து, அவைகளைப் பிட்டு, ஐயாயிரம் பேரைப் போஷித்தபோது, அவர் ஒரு மனுஷனை விட மேலானவராக இருந்தார். அது அந்த மனுஷருக்குள் இருந்து வெளிப்பட்ட தேவன். அவர் ஒரு தேவ-மனுஷன். அது உண்மை. அன்று இரவு அந்தச் சிறிய படகின் பின்பகுதியில் படுத்திருந்தபோது அவர் ஒரு மனுஷனாக இருந்தார். அந்த அலைகளால், ஒரு பாட்டில் மூடியைப் போல அது கடலில் அங்கும் இங்கும் அலைக்கழிக்கப்பட்டது, மேலும் கடலின் பத்தாயிரம் பிசாசுகள் அன்று இரவு அவரை மூழ்கடித்துவிடுவதாக சபதம் செய்தன. புயல்கள் சூறாவளியாக இறங்கி வந்தன. படகு நிரம்பிக் கொண்டிருந்தது. பாய்மரங்கள் காணாமல் போயின. சீஷர்களின் இருதயம் சோர்ந்து போனது. 87 அந்த உடைபாடுகளும் காரியங்களும் அவரை எழுப்பாதபோது அவர் ஒரு மனுஷனாக இருந்தார். நாள் முழுவதும் வியாதியஸ் தர்களுக்காக ஜெபித்துவிட்டு, அங்கே படுத்திருந்த அவர் ஒரு மனுஷனாக இருந்தார். வல்லமை அவரை விட்டுப் புறப்பட்டுப் போயிருந்தது, அவர் சோர்வடைந்து ஓய்வெடுத்துக் கொண்டிருந்தார். அவர் தூங்கிக் கொண்டிருந்தபோது அவர் ஒரு மனுஷனாக இருந்தார், ஆனால் அவர் அந்தப் படகின் விளிம்பில் தமது பாதத்தை வைத்து, "இரையாதே, அமைதலாயிரு" என்று சொன்னபோது. கடல்களும் அலைகளும் கீழ்ப்படிந்தபோது அவர் ஒரு மனுஷனை விட மேலானவராக இருந்தார். அது தமது குமாரனிலிருந்து பேசிய தேவன். தேவன் உலகத்தாருடைய பாவங்களை எண்ணாமல், தமது குமாரனுக்குள் அவர்களைத் தமக்கு ஒப்புரவாக்கிக் கொண்டிருந்தார். இதை விசுவாசிக்கிறாயா? அங்கே கல்வாரியில், வானத்திற்கும் பூமிக்கும் இடையே தொங்கிக்கொண்டு, தமது இரத்தத்தைச் சிந்தி, யெகோவாவின் சொந்த இரத்தம் இந்த பாவ உலகத்தின் மீது சொட்டி, அதைத் தமது இரத்தத்தால் கழுவிக்கொண்டு, இரக்கத்திற்காகக் கதறியபோது அவர் ஒரு மனுஷனாக இருந்தார். 88 அவர், "என் தேவனே! என் தேவனே! ஏன் என்னைக் கைவிட்டீர்?" என்று கதறியபோது, அவர் மரித்தபோது அவர் ஒரு மனுஷனாக இருந்தார், ஆனால் ஈஸ்டர் காலையில், கல்லறைகள் உடைந்தபோது, மரணத்தின் முத்திரைகளும் கயிறுகளும் அவிழ்க்கப்பட்டபோது, அவர் மரித்தோரிலிருந்து ஜெயத்துடன் உயிர்த்தெழுந்தபோது, அவர் தாமே தேவன் என்பதை நிரூபித்தார். அல்லேலூயா. வாழ்கையில், அவர் என்னை நேசித்தார்; மரிக்கையில், அவர் என்னை இரட்சித்தார்; அடக்கம் பண்ணப்பட்டபோது, அவர் என் பாவங்களை வெகுதூரம் சுமந்து சென்றார்; உயிர்த்தெழுந்தபோது, அவர் என்னை என்றென்றைக்குமாக இலவசமாய் நீதிமானாக்கினார்: ஒரு நாள் அவர் வரப்போகிறார், ஓ, மகிமையான நாள். 89 இதை விசுவாசிக்கிறாயா? அதே இயேசு இன்று இங்கே இருக்கிறார் என்று நான் விசுவாசிக்கிறேன். இதை நீங்கள் விசுவாசிக்கிறீர்களா? அதே இயேசு இன்று இரவு, அல்லது இன்று, நமது மத்தியில் உயிர்த்தெழுந்து, தமது உயிர்த்தெழுதலின் அடையாளங்களையும் அற்புதங்களையும் காட்டுகிறார் என்று நான் விசுவாசிக்கிறேன். இதை விசுவாசிக்கிறாயா? அந்தப் பெண் அவருடைய வஸ்திரத்தின் ஓரத்தைத் தொட்ட அதே நபர்தான் இவர் என்று நான் விசுவாசிக்கிறேன். இதை விசுவாசிக்கிறாயா? லாசருவை மரித்தோரிலிருந்து எழுப்பியவர் இவரே என்று நான் விசுவாசிக்கிறேன். இதை விசுவாசிக்கிறாயா? எபிரெயப் பிள்ளைகளை அக்கினிச் சூளையிலிருந்து விடுவித்தவர் இவரே என்று நான் விசுவாசிக்கிறேன். இதை விசுவாசிக்கிறாயா? அவர் இப்போது இங்கே இருக்கிறார் என்று நான் விசுவாசிக்கிறேன். இதை விசுவாசிக்கிறாயா? அதைத்தான் இப்போது நம் ஆத்துமாவில் உணருகிறோம் என்று நான் விசுவாசிக்கிறேன். இதை விசுவாசிக்கிறாயா? அதைக்கொண்டுதான் இப்போது இந்த சபையார் அபிஷேகம் பண்ணப்பட்டிருக்கிறார்கள் என்று நான் விசுவாசிக்கிறேன். இதை விசுவாசிக்கிறாயா? 90 ஒவ்வொரு வியாதியஸ்தரையும் இப்போதே குணமாக்க அவர் இங்கே இருக்கிறார் என்று நான் விசுவாசிக்கிறேன். இதை விசுவாசிக்கிறாயா? ஒவ்வொருவரையும் இப்போதே பரிசுத்த ஆவியால் நிரப்ப அவர் இங்கே இருக்கிறார் என்று நான் விசுவாசிக்கிறேன். இதை விசுவாசிக்கிறாயா? அல்லேலூயா. அவர் அதை இப்போதே செய்யப்போகிறார் என்று நான் விசுவாசிக்கிறேன். இதை விசுவாசிக்கிறாயா? முடவர்கள் நடப்பார்கள், குருடர்கள் பார்ப்பார்கள், செவிடர்கள் கேட்பார்கள் என்று நான் விசுவாசிக்கிறேன். இதை விசுவாசிக்கிறாயா? நாம் எழுந்து நின்று அவருக்குத் துதி செலுத்துவோம். தேவன் அதைச் செய்வார் என்று நான் விசுவாசிக்கிறேன். இதை விசுவாசிக்கிறாயா? தேவனுக்கு நேராக நம் சத்தத்தை உயர்த்துவோம். அல்லேலூயா. 91 பிதாவே, நீர் தேவகுமாரன் என்று நாங்கள் விசுவாசிக்கிறோம். இன்று நீர் எங்களோடு இருக்கிறீர் என்று நாங்கள் விசுவாசிக்கிறோம். உம்முடைய வல்லமை நித்தியமானது என்று நாங்கள் விசுவாசிக்கிறோம். நீர் ஒருபோதும் தோற்றுப் போவதில்லை என்று நாங்கள் விசுவாசிக்கிறோம். உன்னதத்திலிருந்து உம்முடைய ஆவியை நீர் ஊற்றியிருக்கிறீர் என்று நாங்கள் விசுவாசிக்கிறோம். பெந்தெகொஸ்தே இங்கே வந்திருக்கிறது என்று நாங்கள் விசுவாசிக்கிறோம். தேவனுடைய வல்லமை இங்கே இருக்கிறது என்று நாங்கள் விசுவாசிக்கிறோம். அடையாளங்களும் அற்புதங்களும் இங்கே இருக்கின்றன என்று நாங்கள் விசுவாசிக்கிறோம். பரிசுத்த ஆவியானவர் இங்கே இருக்கிறார் என்று நாங்கள் விசுவாசிக்கிறோம். ஆண்டவரே, இவைகள் எல்லாவற்றையும் நாங்கள் விசுவாசிக்கிறோம். இப்போது, பலத்த காற்று அடிப்பதுபோல பரிசுத்த ஆவியானவரை மீண்டும் அனுப்பும். அவர்கள் அமர்ந்திருக்கும் இந்த அறையை நிரப்பும், ஆண்டவரே. தேவனுடைய வல்லமை இந்தக் கட்டிடம் முழுவதும் வீசட்டும், ஆண்டவரே, இன்று இரவு உம்முடைய எல்லா அடையா ளங்களையும் அற்புதங்களையும், இந்த நாளின் விசுவாசிகளின் அடையாளங்களையும் மீண்டும் ஊற்றுவீராக; மேலும் சமாதானத்தையும், சந்தோஷத்தையும், திருப்தியையும் தாரும், வியாதியஸ்தர்களைக் குணமாக்கும், மரித்தோரை எழுப்பும், குஷ்டரோகிகளைச் சுத்தமாக்கும். தேவனே, இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் இதை அருளிச்செய்யும் என்று நாங்கள் ஜெபிக்கிறோம். தேவனுக்குத் துதி செலுத்துவோம். அல்லேலூயா. அல்லேலூயா. அல்லேலூயா. ஜீவனுள்ள தேவனுக்குத் துதி உண்டாவதாக. அல்லேலூயா. அல்லேலூயா. இங்கே உள்ள ஒவ்வொருவரும் பரிசுத்த ஆவியைப் பெற்றுக்கொள்ள முடியும் என்று நான் விசுவாசிக்கிறேன். அது எத்தனை பேருக்கு வேண்டும்? உங்கள் கைகளை உயர்த்துங்கள். எத்தனை பேருக்குப் பரிசுத்த ஆவியானவர் வேண்டும். அப்படியே கைகளை அசைத்து, மேலே பாருங்கள். மேலே பாருங்கள், கைகளை அசைத்துக்கொண்டே இருங்கள். ஆண்டவரே, நான் விசுவாசிக்கிறேன். ஆண்டவரே, நான் விசுவாசிக்கிறேன். இரட்சகரே, உம்மீதுள்ள என் விசுவாசத்தை வர்த்திக்கப்பண்ணும்...?... ஆண்டவரே, நான் விசுவாசிக்கிறேன். என் சந்தேகங்கள் அனைத்தும் அந்த ஊற்றில் அடக்கம் செய்யப்பட்டன. அல்லேலூயா. தேவனுக்குத் துதி உண்டாவதாக. 92 எவ்வளவு அற்புதமான நேரம். பாவிகளான உங்களில் எத்தனை பேர் இங்கே வந்து, "நான் இப்போதே இரட்சிக்கப்பட விரும்புகிறேன், சகோதரர் பிரன்ஹாம். நான் இயேசு கிறிஸ்துவை என் இரட்சகராக ஏற்றுக்கொள்ள விரும்புகிறேன்" என்று சொல்ல விரும்புகிறீர்கள். உங்கள் கையை உயர்த்துங்கள். உங்கள் கையை உயர்த்துங்கள், பாவிகளே அனைவரும், உங்கள் கைகளை உயர்த்துங்கள், எல்லா இடங்களிலும். அது சரி. நீங்கள் இங்கே வருவீர்களா? செவிடர்களின் காதுகளைத் திறக்கவும், குருடர்களைப் பார்க்கச் செய்யவும் தேவன் என் ஜெபங்களைக் கேட்பார் என்றால், உங்கள் இரட்சிப்புக்காக அவர் என் ஜெபத்தைக் கேட்கமாட்டாரா? இங்கே வாருங்கள். நாங்கள் பாடும்போது ஒவ்வொரு பாவியும் இப்போதே அழைக்கப்படுகிறார்கள், என்னைக் கடந்து போகாதிரும், ஓ அன்பான இரட்சகரே, என் தாழ்மையான வேண்டுதலைக் கேளும்; நீர் மற்றவர்களை அழைக்கையில், என்னைக் கடந்து போகாதிரும். நண்பர்களே, கேளுங்கள், இன்று மதியம் உங்கள் போதகரான பால் ரேடர் இங்கே கீழே பார்க்க முடிந்தால் எப்படி இருக்கும்? பால் ரேடர் நடத்தின அதே வகையான ஆராதனைகள் தான் இவையும். அங்கே மகிமையின் நித்திய ராஜ்யத்தில் வீற்றிருக்கும், அங்கே பசுமையான மரங்களினருகே தேவனுக்குப் பக்கத்தில் அமர்ந்திருக்கும், இதே பிரசங்க மேடையில் பிரசங்கித்த முதிர்ந்த பில்லி சண்டே இன்று மதியம் இங்கே வந்தால், அவர் "மனந்திரும்புதலின் பாதையில் வாருங்கள்" என்று சத்தமிட்டிருப்பார். அது உண்மை. 93 ஓ, ஆண்களே பெண்களே. இயேசு கிறிஸ்து இல்லாமல் இங்கே உள்ளவர்களில் எத்தனை பேருக்குப் பரிசுத்த ஆவியின் அபிஷேகம் வேண்டும். உங்கள் கைகளை உயர்த்துங்கள். நாங்கள் பாடும்போது நீங்கள் இப்போது முன்னே வருவீர்களா? "என்னைக் கடந்து போகாதிரும், ஓ அன்பான இரட்சகரே." சரி. [சபையார் பாடுகிறார்கள்: "என்னைக் கடந்து போகாதிரும்."] ...(நீங்கள் வெளியே வருவீர்களா...?...) ஓ, என் தாழ்மையான வேண்டுதலைக் கேளும்; நீர் மற்றவர்களை அழைக்கையில், ஓ, என்னைக் கடந்து போகாதிரும். இப்போது வாருங்கள், நாம் வரலாம்...?... இங்கே பலிபீடத்தின் அருகே. [சபையார் தொடர்ந்து பாடுகிறார்கள்] இரட்சகரே... என் தாழ்மையான வேண்டுதலைக் கேளும்; நீர் மற்றவர்களை அழைக்கையில், என்னைக் கடந்து போகாதிரும். இரட்சகரே, இரட்சகரே, என் தாழ்மையான வேண்டுதலைக் கேளும்; நீர் மற்றவர்களை அழைக்கையில், என்னைக் கடந்து போகாதிரும். இரட்சகரே, இரட்சகரே, என் தாழ்மையான வேண்டுதலைக் கேளும்; நீர் மற்றவர்களை அழைக்கையில், என்னைக் கடந்து போகாதிரும். 94 நண்பர்களே, கவனியுங்கள். தேவனிடம் வருவதற்கு உங்களுக்குக் கிடைக்கும் நித்தியத்திற்கு முந்தைய கடைசி நாளாக இது இருக்கலாம். இப்போது வரமாட்டீர்களா? நீங்கள் இப்போது வந்து இயேசு கிறிஸ்துவை உங்கள் இருதயத்திலும், பரிசுத்த ஆவியின் அபிஷேகத்தையும் பெற்றுக் கொள்ள மாட்டீர்களா? இன்று நீங்கள் பரிசுத்த ஆவியானவர் இல்லாமல் இருந்தால், தேவன் பெந்தெ கொஸ்தேவை மீண்டும் திரும்பச் செய்யும் அதே நேரமாக இது இருக்கலாம். இன்னும் சில நிமிடங்களில், இந்தக் கட்டிடம் தேவனுடைய வல்லமையால் பிரகாசமடையலாம், மக்கள் பரிசுத்த ஆவியின் அபிஷேகத்துடன் இங்கிருந்து வெளியே செல்லலாம். 95 பாருங்கள். இங்கே சுமார் இருநூறு பேர் பலிபீடத்தைச் சுற்றி நிற்பதாக நான் நினைக்கிறேன். நாங்கள் இன்னொரு முறை பாடும்போது, நீங்கள் வந்து உங்கள் இடத்தை இப்போது எடுத்துக்கொள்ள மாட்டீர்களா? வாருங்கள். நீங்கள் அழைக்கப்படுகிறீர்கள். நீங்கள் இப்போது வருவதற்காக தேவன் காத்துக்கொண்டிருக்கிறார். சரி. அப்படியே திரும்பி ஒருவருடன் கைகுலுக்கி, "நீங்கள் ஒரு கிறிஸ்தவரா?" என்று கேளுங்கள். சரி. என்னைக் கடந்து போகாதிரும், ஓ அன்பான இரட்சகரே, என் தாழ்மையான வேண்டுதலைக் கேளும்; நீர் மற்றவர்களை அழைக்கையில், ஓ, என்னைக் கடந்து போகாதிரும். இரட்சகரே, இரட்சகரே, ஓ என் தாழ்மையான வேண்டுதலைக் கேளும்; நீர் மற்றவர்களை அழைக்கையில், என்னைக் கடந்து போகாதிரும். 96 நீங்கள் இப்போது தேவனுடைய ஆவியானவருக்குச் செவிகொடுக்க மாட்டீர்களா? இந்த கூட்டங்களில் நீங்கள் அமர்ந்து, இயற்கைக்கு அப்பாற்பட்ட காரியங்கள் எழும்புவதைப் பார்த்துக்கொண்டிருக்கிறீர்கள். இயேசு இங்கே இருந்த பைபிள் நாட்களுக்குப் பிறகு மீண்டும் நடக்காத, நீங்கள் இதுவரை கண்டிராத அடையாளங்கள், காரியங்கள் நடப்பதை நீங்கள் காண்கிறீர்கள். என்ன நடக்கிறது? நியாயத்தீர்ப்பு வெகு விரைவில் இந்த உலகத்தைத் தாக்கப்போகிறது. நீங்கள் தேவனுடைய ராஜ்யத்திற்கு வெளியே இருந்தால், அப்படி அகப்பட்டுக்கொள்ளாதீர்கள். இப்போதே வாருங்கள். தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக, வாலிபனே. சமீபத்தில் தான் உங்கள் இருதயத்தைக் கிறிஸ்துவுக்குக் கொடுத்தீர்கள். உங்கள் மீது இன்னும் ஒரு வெளிச்சம் தொங்கிக்கொண்டிருப்பதை நான் காண்கிறேன். தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக. நீங்கள் இப்போது பரிசுத்த ஆவியைப் பெறுவீர்கள். அங்கேயே நின்று அதை உங்கள் முழு இருதயத்தோடும் விசுவாசியுங்கள். நான் முதலில் பலிபீட அழைப்பைச் செய்தபோது, சில நிமிடங்களுக்கு முன்பு பரிசுத்த ஆவியானவர் உங்களிடம் பேசிக் கொண்டிருந்தார். நீங்கள் வந்திருக்க வேண்டும் என்பது உங்களுக்குத் தெரியும். அது சரிதான், நீங்கள் வருவதைப் பார்ப்பதற்காக நான் காத்துக்கொண்டிருந்தேன். 97 இந்தக் கூட்டத்தைச் சுற்றி இப்போது நின்றுகொண்டிருக்க வேண்டிய மற்றவர்களும் இங்கே இருக்கிறார்கள் என்று எனக்குத் தெரியும். நாங்கள், "ஓ, ஏன் இன்றிரவு கூடாது?" என்று பாடும்போது நீங்கள் இன்னொரு முறை வரமாட்டீர்களா? உங்களுக்கு அது தெரியுமா, என் சகோதரனே? சரி. "ஓ ஏன் இன்றிரவு கூடாது?" நீங்கள் இப்போதே வருவீர்களா? நீ இரட்சிக்கப்படுவாயா? "ஓ ஏன் இன்றிரவு கூடாது?" இது ஒரு பழைய கால வெஸ்லியன் பலிபீட அழைப்பு. சரி, சகோதரர்களே, நீங்கள் இசைப்பீர்கள் என்றால். ஓ ஏன் இன்றிரவு கூடாது? ஓ ஏன் இன்றிரவு கூடாது? நீ இரட்சிக்கப்படுவாயா? மேலும் ஏன் இன்றிரவு கூடாது? நாளை சூரியன் ஒருபோதும் உதிக்காமல் போகலாம் உன் நீண்டகால வஞ்சிக்கப்பட்ட பார்வையை ஆசீர்வதிப்பதற்கு; இதுவே ஏற்ற காலம், ஓ ஆகையால் ஞானமாயிரு, ஓ இன்றிரவே இரட்சிக்கப்படு. ஓ ஏன் இன்றிரவு கூடாது? ஓ... 98 இப்போது நீங்கள் வரமாட்டீர்களா? நீங்கள் இருக்கும் இடத்திலிருந்தே வரிசைகளிலிருந்து-வரிசைகளிலிருந்து வெளியே வாருங்கள். நீங்கள் இப்போதே நகர்ந்து இங்கே வந்தால், தேவன் உங்களை இப்போதே இரட்சிப்பார். வருவீர்களா? ...இரட்சிக்கப்படுவாயா? மேலும் ஏன் இன்றிரவு கூடாது? ஒரு நிமிடம் நம் தலைகளைத் தாழ்த்துவோம். ஆண்டவராகிய இயேசுவே, இங்குள்ள ஒவ்வொரு மனிதனின் இருதயமும் உமக்குத் தெரியும். ஒவ்வொரு பெண், சிறுவன், அல்லது சிறுமி, அல்லது குழந்தையின் இருதயமும் உமக்குத் தெரியும். இயேசு வருவதற்கு முன்பு விடுக்கப்படும் கடைசி பலிபீட அழைப்பாக இது இருக்கலாம். இன்றிலிருந்து ஒரு வாரம் கழித்து இங்கே இருக்க முடியாத ஆண்களும் பெண்களும் இங்கே இருக்கலாம். அவர்கள் இன்னொரு நாள் இங்கே இல்லாமல் போகலாம். 99 தேவனே, வர மனதுள்ள எவனானாலும் அவனுக்காக இயேசு கிறிஸ்துவின் சுவிசேஷத்தில் இரட்சிப்பின் கிருபை இருக்கிறது என்பதை அறிந்து, நீர் இப்போதே அவர்கள் இருதயங்களில் பேசுவீராக என்று நான் ஜெபிக்கிறேன். கிறிஸ்து இல்லாமல் மரிப்பது என்பது பிசாசின் நரகத்திற்கும், முடிவில்லாத தண்டனையுள்ள நித்தியத்திற்கும் செல்வதாகும், ஆனால் இயேசு கிறிஸ்துவை ஏற்றுக்கொண்டு, அவருடைய ஆவியினால் மறுபடியும் பிறப்பது, அதை விசுவாசிக்கும் அனைவருக்கும் நித்திய ஜீவனாகும். ஆண்டவரே, இன்று அதை அருளிச்செய்ய மாட்டீரா? உம்முடைய ஜனங்களிடம் மீண்டும் பேசுமாறு இயேசுவின் நாமத்தில் நான் ஜெபிக்கிறேன். இப்போது, நீங்கள் உங்கள் தலைகளைத் தாழ்த்தியிருக்கும் வேளையில், சபையாரில் யாராவது பின்னால் இருந்து, "சகோதரர் பிரன்ஹாம், கிறிஸ்துவை ஏற்றுக்கொள்வதற்காக அந்த மக்களுடன் எழுந்து அங்கு நிற்க எனக்குப் போதுமான உணர்த்துதல் இல்லை, ஆனால் என்னை உங்கள் ஜெபத்தில் நினைத்துக் கொள்வீர்களா?" என்று சொல்கிறீர்களா? நீங்கள் உங்கள் கையை உயர்த்தி, "அது நான்தான், சகோதரர் பிரன்ஹாம்" என்று சொல்வீர்களா? உங்கள் இருதயங்கள் எனக்குத் தெரியாது. தேவனுக்குத் தெரியும். சரி, தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக, அம்மா, நான் உங்கள் கையைப் பார்க்கிறேன். தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக. நான் உங்கள் கையைப் பார்க்கிறேன். இங்கே வேறு யாராவது உங்கள் கையை உயர்த்தி, "எனக்கு வர உணர்த்துதல் இல்லை, ஆனால் எனக்காக நீங்கள் ஜெபிக்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன், சகோதரர் பிரன்ஹாம்" என்று சொல்லுங்கள். தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக, ஐயா. பலிபீடம் இப்போது காலியாக இருக்கிறது அல்லது உங்களை ஏற்றுக்கொள்ள இப்போது தயாராக இருக்கிறது என்று நான் நம்புகிறேன். இயேசு கிறிஸ்து நீட்டிய கரங்களுடன் நின்றுகொண்டிருக்கிறார். 100 தேவனுடைய தேவை இருக்கும் இங்குள்ள ஒவ்வொரு ஆணும் பெண்ணும் அதை இப்போதே பெற்றுக்கொள்ள முடியும். நீங்கள் அதை விசுவாசிக்கிறீர்களா? இப்போது எத்தனை பேர் உங்கள் முழு இருதயத்தோடும் விசுவாசிக்கிறீர்கள்? முழு... இப்போது, பாவிகளே மற்றும் பரிசுத்த ஆவியானவரைத் தேடும் மக்களே, பரிசுத்த ஆவியானவர் என்றால் என்ன என்பது இங்கே இருக்கிறது நண்பர்களே, அதைத் தேடுகிறவர்களே. நீங்கள் தேடவும், கெஞ்சவும், காத்திருக்கவும் தேவையில்லை. அது இப்போது உங்களுடனேயே இருக்கிறது. புரிகிறதா? நீங்கள், "சரி, எங்களுக்குக் காத்திருக்கும் கூட்டம் தேவை" என்று சொல்கிறீர்கள். "தரித்திரு" என்றால் "காத்திரு" என்று அர்த்தம், ஜெபிப்பது அல்ல. பேதுரு இந்த வார்த்தைகளைப் பேசிக்கொண்டிருக்கையில், பரிசுத்த ஆவியானவர்... பெந்தெ கொஸ்தேவுக்காக நாற்பது அல்லது ஐம்பது நாட்கள் முடியும் வரை அவர்கள் காத்திருக்க வேண்டியிருந்தது. அதன்பிறகு காத்திருப்பு இல்லை. இப்போதே நீங்கள் அதைப் பெற்றுக்கொள்ள முடியும். இனி தரித்திருக்கத் தேவையில்லை, இப்போதே, ஒரு மனப்பூர்வமான இருதயத்தை மட்டும் கொண்டிருங்கள். நேராக தேவனிடம் உங்களை நீட்டுங்கள். ஒரு நாள் அந்தப் பேராயர் இங்கே நின்றுகொண்டிருந்தபோது... என் மேல் சண்டையிட்டார்... அவர் சொன்னார்... நான்கு மாதங்களுக்கு முன்பு அவர் என்னை விமர்சித்தார், என்னைக் கேலி செய்தார், மற்றும் பல காரியங்களைச் செய்தார்; மேலும் அவர் அறைக்குள் வந்து, "நான் பரிசுத்த ஆவியைப் பெற்றுக்கொள்ள விரும்புகிறேன்" என்றார். அவர் மீது கைகளை வைத்தேன், பரிசுத்த ஆவியானவர் அவர் மீது வந்தார். புரிகிறதா? 101 தெற்கத்திய தேசத்தின் சிறந்த அடிப்படைவாதிகளில் ஒருவரான டாக்டர் லீ, டகோமாவில் உள்ள அந்தப் பனி அரங்குக்கு வந்து என்னை ஒரு சூனியக்காரன் என்று அழைத்தார்; ஆனால் கடந்த சில நாட்களுக்கு முன்பு என் வீட்டில் அவருடைய கன்னங்களில் கண்ணீர் வழிய அமர்ந்திருந்தார், அவர் பரிசுத்த ஆவியானவரைப் பெற்றிருந்தார், அவரால் ஆங்கிலத்தில் சரியாகப் பேசக் கூட முடியவில்லை. அது சரிதான். அவர், "சகோதரர் பிரன்ஹாம், நான் இப்போது உங்கள் சகோதரன்" என்றார். ஓ, எப்பேர்ப்பட்ட ஒரு வித்தியாசம். டாக்டர் லீ, டாக்டர் ரீட்ஹெட், பிஷப் மற்றும் அந்த மற்ற அனைவருக்கும் அவர் செய்ததை, தெருவில் இருந்து வந்து தனது பாவங்களுக்காக மனந்திரும்பும் ஆகக் குறைந்த, மிகவும் தாழ்ந்த ஒரு விவசாயிக்கும், நபருக்கும், குடிகாரனுக்கும் செய்ய அவர் இங்கேயே தயாராக இருக்கிறார், தேவன் உங்களுக்கு இந்த ஆசீர்வதிக்கப்பட்ட பரிசுத்த ஆவியானவரைக் கொடுப்பார். நேற்று இரவு நான் இங்குள்ள பௌரி (Bowery) அல்லது ஸ்கிட் ரோ (skid row) வழியாகப் பயணித்துக் கொண்டிருந்தபோது, வாழ்க்கையின் அந்தச் சித்திரத்தை, அதன் மறுபக்கத்தைப் பார்த்தேன், அந்தப் பரிதாபத்திற்குரிய குடிகாரர்கள் தெருவில் குவியலாகக் கிடந்தார்கள், நானும் சகோதரர் போஸும் அந்த வழியாகச் சென்றோம், அதைப் பார்ப்பதற்கே மிகவும் பரிதாபகரமான ஒரு காட்சியாக இருந்தது. தேவனுடைய கிருபை மட்டும் இல்லையென்றால், அது நீங்களாகத்தான் இருந்திருப்பீர்கள். தேவனுடைய கிருபை மட்டும் இல்லையென்றால், அது - அது நானாகத்தான் இருந்திருப்பேன். 102 ஓ, தாய்மார்கள், சிறுவர்கள், மற்றும் ஒரு காலத்தில் சிறந்த மனிதர்களாக இருந்தவர்கள், இப்போது அந்த இடத்தில் அப்படியே கிடப்பதைப் பார்த்து, என் இதயம் இரத்தக் கண்ணீர் வடித்தது. நேற்று இரவு நான் வீட்டிற்குச் சென்ற பிறகு பல மணிநேரம் அதை நினைத்து என்னால் தூங்கவே முடியவில்லை. "ஆண்டவரே, நான் என்ன செய்ய முடியும்?" (ஆனால்,) இன்று நீங்கள் தெளிவான புத்தியோடும், சரியான மனநிலையோடும் இங்கே நின்று, நேராக அங்கேயுள்ள கல்வாரியைப் பார்ப்பதற்கான சிலாக்கியத்தை தேவன் உங்களுக்குக் கொடுத்திருக்கிறார். சரி, தேவன் உங்களை ஆசீர்வதித்து, பரிசுத்த ஆவியின் ஸ்நானத்தை இப்போதே உங்களுக்குக் கொடுப்பார். நீங்கள் அதை விசுவாசிக்கிறீர்களா? இப்போது, நீங்கள் ஒன்றைச் செய்ய வேண்டும் என்று நான் விரும்புகிறேன். நீங்கள் இதைச் செய்வீர்களானால், உங்களுக்குப் பக்கத்தில் நிற்பது யார் என்பதை நீங்கள் மறந்துவிட்டால், அறையில் யார் இருக்கிறார்கள் என்பதை நீங்கள் மறந்துவிட்டால், நீங்கள் எங்கே இருக்கிறீர்கள் என்பதைக்கூட மறந்துவிட்டு, "கர்த்தராகிய இயேசுவே, நான் உம்மிடம் வருகிறேன். நீர் எனக்குப் பரிசுத்த ஆவியானவரைத் தருவதாக வாக்குத்தத்தம் செய்துள்ளீர், உமது உதவியால், நீர் எனக்குப் பரிசுத்த ஆவியின் ஸ்நானத்தைக் கொடுக்கும் வரை நான் இந்தப் பலிபீடத்தை விட்டுச் செல்ல மாட்டேன்" என்று மட்டும் சொல்லுங்கள். 103 தேவனிடத்தில் நீங்கள் அவ்வளவு தீர்மானமாகவும், அவ்வளவு உண்மையாகவும் இருந்தால், தேவனுடைய ராஜ்யத்திற்குள் முத்திரையிடப்பட்டு, பரிசுத்த ஆவியின் ஸ்நானத்தோடு இங்கிருந்து வெளியே செல்வீர்கள். எவ்வளவு காலத்திற்கு? இந்த பூமியில் உங்களுடைய இலக்கின் முடிவு பரியந்தம். எபேசியர் 4:30 சொல்லுகிறது, "அன்றியும், நீங்கள் மீட்கப்படும் நாளுக்கென்று முத்திரையாகப் பெற்ற தேவனுடைய பரிசுத்த ஆவியை துக்கப்படுத்தாதிருங்கள்." அப்படியானால், நீங்கள் பரிசுத்த ஆவியின் ஸ்நானத்தைப் பெற்றிருக்கும்போது, அங்கே கிறிஸ்துவுக்குள் பாதுகாக்கப்பட்டிருக்கிறீர்கள். அது உங்களுக்கு வேண்டுமா? இந்தக் கட்டிடத்தில் உள்ள எத்தனை பேருக்கு அது, அதாவது பரிசுத்த ஆவியின் ஸ்நானம் இப்போதே வேண்டும்? சரி. தேவன் என்ன பொய்யரா? தேவன் எப்போதாவது தவறான எதையாவது சொல்வார் என்பது கூடாத காரியம். இப்போது, விருப்பமுள்ளவன் எவனோ, அவன் வந்து ஜீவத்தண்ணீருள்ள ஊற்றிலிருந்து குடிக்கக்கடவன் என்று தேவன் வாக்குத்தத்தம் செய்திருக்கிறார். அது சரிதானே? நீங்கள் என்ன செய்ய வேண்டும் என்று நான் உங்களுக்குச் சொல்கிறேன். நீங்கள் பலிபீடத்தைச் சுற்றி நில்லுங்கள், இங்கே நீங்கள் ஒவ்வொருவரும் ஒருவர் மீது ஒருவர் உங்கள் கைகளை வையுங்கள், மேலும் அங்கேயும் எங்காவது, பரிசுத்த ஆவியானவர் தேவைப்படுகிற நீங்கள் அங்குள்ளவர்கள் ஒருவர் மீது ஒருவர் உங்கள் கைகளை வைக்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன். 104 மேலும் இதை உங்கள் இருதயத்தில் திரும்பத் திரும்பச் சொல்ல வேண்டும் என்று நான் விரும்புகிறேன். "தேவனே, நீர் எனக்கு இப்போதே பரிசுத்த ஆவியானவரைக் கொடுக்கும் வரை நான் இங்கிருந்து போகப் போவதில்லை," என்று சொல்லுங்கள், தேவன் அதை உங்களுக்கு அருளுவார். நீங்கள் அதை விசுவாசிக்கிறீர்களா? இப்போது, நம்முடைய கைகளை உயர்த்துவோம். நம்முடைய தலைகளை உயர்த்தி, தேவனுக்கு நன்றி செலுத்தி, பரிசுத்த ஆவியின் ஸ்நானத்திற்காக அவரைத் துதிப்போம். கர்த்தராகிய இயேசுவே, இப்போதே பரிசுத்த ஆவியானவரை கீழே அனுப்பும். இங்கே இருக்கும் ஒவ்வொரு இருதயத்தையும் நிரப்பும், ஆண்டவரே. பரிசுத்த ஆவியின் வல்லமை இந்த மக்கள் மீது ஊற்றப்படுவதாக. அடையா ளங்களும் அற்புதங்களும் தொடருவதாக, ஆண்டவரே. உயிர்ப்பிதலின் மிகச் சிறந்த நாளாக இது இருக்கட்டும். பரிசுத்த ஆவியானவர் ஊற்றப்படட்டும், மற்றும் வியாதியஸ்தர்கள் குணமடையட்டும். செவிடர்கள் கேட்கட்டும், குருடர்கள் பார்க்கட்டும், மேலும் இங்குள்ள ஒவ்வொரு விசுவாசியின் இருதயத்தையும் தேவனுடைய ஆவியானவர் நிரப்புவாராக. அதை அருளுங்கள், ஆண்டவரே. இப்போது, நாங்கள் கேட்டிருக்கிறோம். மக்கள் ஒருமனப்பட்டு ஜெபித்தபோது, அவர்கள் கூடிவந்திருந்த கட்டிடம் அசைந்தது என்று நீர் சொன்னீர். இந்த மக்கள் பரிசுத்த ஆவியின் ஸ்நானத்தைப் பெறும்படியாக, ஒவ்வொரு ஆத்துமாவுக்கும் அந்த பழைய காலத்து அசைவை அனுப்பும், ஆண்டவரே. 105 துதித்துக்கொண்டே இருங்கள். அவருக்குத் துதிகளைச் செலுத்திப்பொண்டே இருங்கள். நீங்கள் எங்கே நிற்கிறீர்கள் என்பதை மறந்துவிடுங்கள். உங்கள் கைகளை உயர்த்துவோம். அவரைத் துதியுங்கள்...?... நான் கேட்கிறேன்...?... துதியுங்கள். உங்கள் கைகளை உயர்த்துவோம். அவரைத் துதித்துக்கொண்டே இருங்கள். பார்க்க வேண்டாம்-இங்கே மேலே பார்க்க வேண்டாம். அங்கே மேலே பரலோகத்தைப் பாருங்கள். அவரைத் துதியுங்கள். "நன்றி, ஆண்டவரே. நன்றி, கர்த்தராகிய இயேசுவே. நான் உம்மைத் துதிக்கிறேன், ஆண்டவரே. நன்றி, ஆண்டவரே" என்று சொல்லுங்கள். அவரைத் துதியுங்கள், தேவன் இப்போதே உங்களைப் பரிசுத்த ஆவியினால் நிரப்புவார். ஆமென். ஆமென். தேவன் உன்னை ஆசீர்வதிப்பாராக, சின்னத் தம்பி. ஆமென். துதித்துக்கொண்டே இருங்கள். துதித்துக் கொண்டே இருங்கள். அவரை நோக்கிப் பார்த்து, "நன்றி, கர்த்தராகிய இயேசுவே" என்று சொல்லுங்கள். அதுதான் சரி. அவ்வளவுதான், அம்மா. இதோ இங்கே நின்று கொண்டிருக்கும் ஒரு பெண்மணி இப்போது பரிசுத்த ஆவியானவரைப் பெற்றிருக்கிறார், அதோ இன்னொருவர். வாருங்கள், இப்போது. அது சரிதான். தேவனைத் துதித்துக்கொண்டே இருங்கள். அல்லேலூயா. பார்வையாளர்கள் முழுவதிலும், அவரைத் துதியுங்கள். அவரைத் துதித்து, அவருக்கு மகிமையைச் செலுத்துங்கள். அல்லேலூயா. தேவனுக்கு மகிமை. தேவனுக்கு மகிமை. ஆமென். அல்லேலூயா. [சகோதரர் பிரன்ஹாம் மைக்ரோஃ போனிலிருந்து விலகிச் செல்கிறார்] ...?...அவரைத் துதியுங்கள். அவரைத் துதியுங்கள். அவரைத் துதியுங்கள். துதியுங்கள், அவரைத் துதியுங்கள்...?... அல்லேலூயா. அல்லேலூயா. உங்கள் கைகளைத் தட்டுங்கள். அவரைத் துதியுங்கள். "நன்றி, ஆண்டவரே. நன்றி, ஆண்டவரே. நன்றி, ஆண்டவரே. நன்றி, ஆண்டவரே. கர்த்தருக்கு நன்றி" என்று சொல்லுங்கள். இதை நீ விசுவாசிக்கிறாயா? (53-0906A) 2